ஒரு மனிதன் எப்பொழுதும் எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் மிகவும் மன நிம்மதியுடன் கவலையின்றி மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்ததை அவனது சிநேகிதர்கள் கேட்டார்கள். “என்ன நடந்தது” என்று ஆச்சரியத்துடன் வினவினார்கள். “ எனக்குப் பதிலாக கவலைப்படும்படி ஒரு மனிதனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
“எவ்வளவு பணம் கொடுக்கிறாய்” என்று அவர்கள் கேட்டார்கள்.
“ஒரு வாரத்திற்கு 2000 டாலர்கள் கொடுக்கிறேன்” என்று அவன் பதில் கூறினான்.
“எப்படி உன்னால் அந்தப் பெரிய தொகையைக் கொடுக்க இயலுகிறது?”
“என்னால் கொடுக்க இயலாது, ஆனால் அது அந்த மனிதனின் கவலை” என்று அவன் கூறினான்.
உண்மையான வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மேற் கூறப்பட்ட வேடிக்கையான முறையில் விடைகாண இயலாது. தேவனுடைய பிள்ளைகளாக நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்று நாம் உணரும்பொழுது கூட நமது கவலைகள் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஒருவரிடம் (தேவனிடம்) நாம் ஒப்படைத்து விட வேண்டும்.
தேவன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பெயரிட்டு அழைக்கிறார். (40:25-26) என்று ஏசாயா தீர்க்கத்தரிசி நமக்கு நினைவூட்டுகிறான். “அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது” (வச.26) நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் தேவன் எப்படியாக அறிந்திருக்கிறாரோ அதுபோல நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அவர் அறிந்திருக்கிறார் அவருடைய கவனமான கண்காணிப்புக்கு உள்ளாக நாம் இருக்கிறோம் (வச.27).
நாம் கவலைப்பட நேர்ந்தால் அந்த கவலையைக் கர்த்தர்மேல் வைத்து விடலாம். நம்மீது கவனம் செலுத்த இயலாதபடி அவர் ஒருக்காலும் சோர்ந்து போவதுமில்லை இளைப்படைவதுமில்லை. அவர் வல்லமையும், ஞானமும் நிறைந்தவர். நமக்காக அவற்றை பயன்படுத்த அவர் விரும்புகிறார். நட்சத்திரங்களை வழி நடத்துகிற பரிசுத்த தேவனின் அன்புக்கரங்கள் நம்மைச் சுற்றி அரவணைக்கின்றன.