நமது உடலில் ஏற்படும் உடல் நலக்குறைவுகளினால், உடல் நலம் அதிகமாக பாதிக்கப்படும் முன்பே ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அவ்வப்பொழுது செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்திற்காக மாற்கு 12:30ல் இயேசுவினால் கூறப்பட்டுள்ள தலை சிறந்த கட்டளையை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகள் கேட்பதின் மூலம் நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்தை பரிசோதனை செய்யலாம்.
தேவன் முதலில் என்மேல் அன்பு கூர்ந்தபடியினால் அவரை நான் என் முழு மனதுடன் நேசிக்கின்றேனா? உலகப் பிரகாரமான ஆஸ்தியா அல்லது கிறிஸ்துவுக்குள் எனக்கு அருளப்பட்ட பொக்கிஷங்களா? எதை முக்கியப்படுத்துகிறேன்? (கொலோசியர் 3:1) அவருடைய சமாதானம் நமது உள்ளங்களை ஆள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
எனது முழு ஆத்துமாவுடன் தேவனை நான் நேசிக்கின்றேனா? நான் யார் என்று தேவன் என்னிடம் கூறும் பொழுது அதை கவனிக்கின்றேனா? சுயத்தை மையமாக வைத்துள்ள ஆசைகளிலிருந்து நான் விலகிச் செல்கிறேனா? (வச.5) அதிகமான இரக்கம், அன்பு, தாழ்மை, சாந்தம்,பொறுமை இவற்றில் நான் மேலும் மேலும் வளருகிறேனா? (வச.12)
நான் என் முழு மனதுடன் தேவனை நேசிக்கின்றேனா? அவரது குமாரனாகிய கிறிஸ்துவோடு கூடிய உறவை முக்கியப்படுத்துகிறேனா அல்லது எனது மனம் விரும்புகிற வழியில் செல்ல அனுமதிக்கின்றேனா? (வச.2) எனது எண்ணங்களால் பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா அல்லது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கின்றதா? ஐக்கியமா அல்லது பிரிவினையா? மன்னிப்பா அல்லது பழிவாங்குதலா? (வச.13)
என் முழு பெலத்துடன் தேவனில் அன்பு கூருகின்றேனா? எனக்கு தேவன் அவரது வல்லமையை காண்பிக்கத்தக்கதாக, நான் பலவீனன் என்று அறிக்கை செய்கிறேனா? (வச. 17) அவரது ஆவியில் பெலப்பட, அவருடைய கிருபையின் மேல் முழுவதும் சார்ந்திருக்கிறேனா? “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூணமாக வாசமாயிருப்பதாக”. (வச.16) இந்த வசனத்தின் படி நமது மனதை திறக்கும் பொழுது, ஒருவரையொருவர் கட்டி எழுப்புவதற்கு தேவையான பெலனை தேவன் நமக்குத் தந்தருளி நாம் ஆவிக்கேற்ற முறையில் தகுதி உடையவர்களாகவும் அவருக்கு பயனுள்ளவர்களாக இருக்கவும் உதவி செய்கிறார்.