ஒரு நாள் மாலை எனது சிநேகிதி அவளது வீட்டின் முன் அறையில் தொங்கவிடப்படக்கூடிய அலங்கரிக்கப்பட்ட மூன்று தகடுகளில் ஒன்றை என்னிடம் காண்பித்தாள். “அன்பு” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட அந்த தகட்டைத் தூக்கி பிடித்துக் கொண்டு “பார், எனக்கு அன்பு கிடைத்துவிட்டது” என்று கூறினாள். விசுவாசமும் நம்பிக்கையும் வந்து கொண்டிருக்கின்றன என்றாள்.
ஆகவே அன்பு முதலாவது வருகிறதென்று எண்ணினேன். விசுவாசமும், நம்பிக்கையும் அதைப் பின்தொடருகின்றன.
அன்பு முதலில் வந்து விட்டது. ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” என்று
1 யோவான் 4:19 நமக்கு நினைப்பூட்டுகிறது. அன்பின் அதிகாரம் என்று கூறப்படும் 1 கொரிந்தியர் 13ல் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”. (வச.8) என்று விவரிக்கப்பட்டதின் மூலம் தேவனுடைய உண்மையான அன்பின் தன்மைகளை விளக்குகிறது.
ஒரு விசுவாசிக்கு விசுவாசமும், நம்பிக்கையும் மிகவும் முக்கியம். விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்படுவதால் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1_) நம்பிக்கை “நிலையும் உறுதியான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது”. இது எபிரேயர் 6:14ல் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் நமக்கு விசுவாசமும், நம்பிக்கையும் தேவை இல்லாமற்போகும் நமது இரட்சகரை நாம் முக முகமாகத் தரிசிக்கும் பொழுது விசுவாசம் முடிவுபெறும், நமது நம்பிக்கை அனுபவமாகிவிடும். ஆனால் அன்பு நித்தியயமானது. ஏனெனில் அன்பு தேவனுடைய குணாதிசயமாகும். தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவான் 4: 7-8). “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது”. (1 கொரி 13:13). அன்பே ஆரம்பமாகவும், முடிவாகவும் இருக்கிறது.
அன்பு முதலில் வருகிறது
வாசிப்பு: 1 யோவான் 4 : 7-19 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 34-36 & கொலோசியர் 2
அவர் முந்தி நம்மிடத்தில்
அன்பு கூர்ந்தபடியால் நாமும்
அவரிடத்தில் அன்பு
கூருகிறோம் (வச. 19)
தேவன் நம்மை முந்தி நேசித்ததால் நாம் அவரை நேசிக்கிறோம்.
Our Daily Bread Topics:
odb
