வகை  |  odb

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.

நண்பர்களைப் பிடித்தல்

ரியா, அந்த மதியத்தை ஒரு உள்ளூர் ஆற்றின் கரையில் கழித்தாள். தனது மீன்பிடிக் கம்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் தூண்டில் போட்டார். சமீபத்தில்தான் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்திருந்தாள். அவள் மீன் பிடிக்கும் நோக்கில் வரவில்லை; அவள் சில புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது தூண்டில் கயிறு புழுக்களாலோ அல்லது வேறு எந்த வழக்கமான இரையாலோ இரை வைக்கப்படவில்லை. மாறாக, அந்த கோடை நாளில் படகுகளில் ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை நீட்டிக்கத் தனது கனரக மீன்பிடி கம்பியைப் பயன்படுத்தினாள். அவள் தனது புதிய அயலாரைச் சந்திக்க இந்த ஆக்கப்பூர்வமான வழியைப் பயன்படுத்தினாள், அவர்கள் அனைவரும் இனிமையான உபசரிப்பை விரும்பியதாகவே தோன்றியது!

தம்மோடு வாழ்க்கையில் நடக்க இயேசுவானவர் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த விதத்தை மிகவும் அப்பட்டமாக ரியா செய்து, "நண்பர்களைப் பிடிக்க" சென்றாள். அந்த இரண்டு சகோதரர்களும் கடின உழைப்பாளிகள், கலிலேயா கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்தனர். இயேசு தம்மைப் பின்தொடரும்படி அழைத்து, அவர்களின் கடின உழைப்பில் குறுக்கிட்டு, மீன்களுக்குப் பதிலாக "மனுஷரை" பிடிக்க அவர்களை அனுப்புவதாகக் கூறினார் (மத்தேயு 4:19). அதன்பின் சிறிது நேரத்தில், யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இரு மீனவர்களுக்கும் அவர் அதே அழைப்பை விடுத்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வலைகளையும் படகுகளையும் உடனே விட்டு, இயேசுவோடு பயணித்தனர்.

தம்முடைய முதல் சீடர்களான மீனவர்களைப் போலவே, கிறிஸ்து தம்மைப் பின்பற்றி, நாம் உறவாடுபவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எனும் நித்திய காரியங்களில் கவனம் செலுத்த நம்மை அழைக்கிறார். இயேசுவோடு வாழ்வதற்கான நிலையான நம்பிக்கை (யோவான் 4:13-14) எனும் உண்மையிலேயே திருப்தியளிக்கக் கூடிய காரியத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் வழங்க முடியும்.

இயேசு நம் சமாதானம்

கவிதாவின் சமூக ஊடகப் பதிவைக் கண்டு ஆனந்தி குமுறினாள். அந்த புகைப்படத்தில் அவர்களுடைய பத்து சபை நண்பர்கள் ஒரு உணவக மேசையைச் சுற்றிலும் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் இரண்டாவது முறையாக, அவள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி கண்ணீர் விட்டாள். அவள் எப்போதும் பிறருடன் சகஜமாகப் பழகியதில்லை, இருந்தபோதும் அவளை ஒதுக்குபவர்களுடன் சபைக்குச் செல்வது எவ்வளவு வினோதமானது!

முதல் நூற்றாண்டு எவ்வளவு விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால், இயேசுவானவர் ஐக்கியத்தை நேசித்து நம் பிரிவினையை அகற்றிட வந்தார். ஆதி சபை தொட்டே, சகஜமாகப் பழக இயலாதவர்கள், அவரில் பொதுவான ஐக்கியம் பெறுவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காததற்காக யூதர்கள் புறஜாதிகளை இழிவாகப் பார்த்தனர், மேலும் தாங்களே சிறந்தவர்கள் என்று நினைத்த யூதர்களை புறஜாதியினர் வெறுத்தனர். பின்னர் இயேசு "சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்(தார்)து" (எபேசியர் 2:14-15). நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள இனி வேண்டியதில்லை. வேண்டியதெல்லாம் இயேசு மட்டுமே. யூதரும் புறஜாதியாரும் அவரில் ஐக்கியப்படுவார்களா?

அது அவர்களின் பதிலைப் பொறுத்தேயிருந்தது. இயேசு "தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்" (வ.17). ஒரே செய்தி, வெவ்வேறு பயன்பாடு. சுயநீதியுள்ள யூதர்கள் தாங்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதே சமயம் புறக்கணிக்கப்பட்ட புறஜாதியினர் தாங்கள் மோசமானவர்கள் அல்ல என்று நம்ப வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் பற்றி எரிச்சலாவதை விட்டு, கிறிஸ்துவின் மீதே கவனம் செலுத்த வேண்டும், அவர் "இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி(னார்)" (வ.15).

ஒதுக்கப்பட்டவராக உணர்கிறீர்களா? அது காயப்படுத்தும். அது சரியன்று. ஆனால், நீங்கள் இயேசுவில் இளைப்பாறும்போது நீங்களே சமாதானம் செய்பவராக இருக்க முடியும். அவரே இன்றும் நமது சமாதானம்.

 

கிறிஸ்துவில் பராமரித்தல்

என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.

தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக" (வ.3-4).

உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , ​​இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.