பயனற்றவையிலிருந்து பொக்கிஷத்திற்கு
இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.
உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள். அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம். பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். 'இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்"
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், 'நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்" (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.
அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.

மிகப்பெரிய நாயும், நீரூற்றும்
ஏறக்குறைய எல்லா கோடைக்கால காலை வேளைகளிலும் ஒரு அருமையான நாடகத்தைப்போன்ற ஒரு காட்சி எங்கள் வீட்டிற்குப் பின்புறமுள்ள ஒரு பூங்காவில் நடைபெறும். அது ஒரு நீரூற்றையும், ஒரு மிகப்பெரிய நாயையும் உள்ளடக்கிய ஒரு காட்சி. காலை சுமார் 6:30 மணியளவில் நீரூற்றுக்களிலுள்ள நீரானது மேலே வரும். அதற்கு சற்று நேரத்திற்கு அப்பால் ஃபிஃபி என்கிற பெரிய நாய் (அந்த நாய்க்கு நாங்கள் வைத்த பெயர்) வந்துவிடும்.
ஃபிஃபியின் எஜமானி அதை கட்டவிழ்த்து விடும்போது, அந்த நாய் மிகவும் வேகமாக ஓடி, தனக்கு அருகாமையிலுள்ள நீரூற்றினை அடையும். அந்த நீரூற்றிலிருந்து வரும் நீரைத் தாக்கும். ஆனால், அதன் தண்ணீரோ, அந்த நாயின் முகத்தை நனைத்து விடும். அது அந்த நீரூற்றையே கடித்து சாப்பிட்டாலும் சாப்பிட்டு விடும் போலத் தெரிந்தது. இது ஃபிஃபி அந்த நீரூற்றினால் தன்னை முழுவதும் நனைத்துக்கொள்ள விரும்பியும், முழுவதுமாக நனையாமல் போகும் ஒரு காட்சியைத்தான் நாங்கள் அங்கு காண்போம்.
வேதாகமத்தில் பெரிய நாய்களோ அல்லது நீரூற்றுகளோ இல்லை. ஆயினும் எபேசியர் 3ம் அதிகாரத்தில் பவுலின் ஜெபமானது, எனக்கு ஃபிஃபியை ஞாபகப்படுத்துகிறது. இங்கு பவுல், எபேசிய விசுவாசிகள் தேவனுடைய அன்பினாலே நிரப்பப்படவும், 'சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து" (எபே. 3:18) என எழுதுகிறார்.
இன்று வரையிலும், நாம் நம் கற்பனைக்கு எட்டாத எல்லையற்ற அன்பினையுடைய தேவனோடு ஐக்கியம் கொள்ள அழைக்கப்படுகிறோம். அவருடைய நன்மையில் நாம் மூழ்கடிக்கப்படவும், நனையப்படவும், பூரண திருப்தியடையவும் வேண்டுமென விரும்புகிறார். நாம், தேவனுடைய, எதையும் எதிர்பாராத அன்பினாலே மூழ்கடிக்கப்பட்டு, நம்முடைய இருதயங்களை அன்பினாலே, அர்த்தமுள்ள மற்றும் நோக்கத்தோடு நிரப்பத் தகுதியான ஒருவரின் அன்போடு நாம் விடுதலையோடு பங்கு கொள்ளலாம்.

நாம் யார்?
என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.
அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.
நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!

புதுப்பிக்க ஆயத்தமாக இருக்கிறார்
நான் ஜெர்மனி நாட்டில் இராணுவத்தில் பணிபுரிந்தபோது, புத்தம்புதிய 1969 வோக்ஸ்வேகன் பீட்ல் கார் ஒன்றை வாங்கினேன். அருமையான கார்! அதன் வெளிப்புற அடர் பச்சை நிறத்தையும், உட்புற லெதர் அலங்காரத்தையும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வருடங்கள் உருண்டோடின, வண்டியும் பழசாகியது. அதுபோதாதென்று ஒரு விபத்து வேறு. அதனால் காரின் பக்கவாட்டில் இருக்கும் கால்மிதி பகுதி சேதமடைந்தது. காரின் கதவுகளில் ஒன்று உடைந்துபோனது. “மீண்டும் புதுப்பிப்பதற்கு இந்தக் கார் முற்றிலும் தகுதியானதுதான்” என்று என் கற்பனையில் உதித்திருக்கலாம். அதிக பண செலவில் அதைப் புதுப்பித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யவில்லை.
ஆனால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர் மிகச்சரியாகப் பார்க்கக்கூடியவர், அளவில்லா வளங்களைப் பெற்றிருப்பவர். வாழ்க்கையில் அடிபட்டு, உடைந்துபோனவர்களை அவர் கைவிடுவதில்லை. மீண்டும் புதுப்பிக்கப்படத் தகுதியானவர்கள் யார் என்பதுபற்றியும் புதுப்பிக்க வல்லவரான தேவனைப் பற்றியும் சங்கீதம் 85 சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக கலகம் செய்ததின் விளைவாக இஸ்ரவேலர் நாடு கடத்தப்பட்டார்கள், பிறகு எழுபது வருடங்கள் கழித்து அந்தச் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்கள், அதை மனதில் வைத்தே இந்தச் சங்கீதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். தேவன் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்கள்மேல் தயவுகாட்டியதை எண்ணிப்பார்த்தார்கள் (வச. 1-3). உடனே தேவனிடம் உதவி கேட்கவும் (வச. 4-7), அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கவும் (8-13) ஊக்கம் பெற்றார்கள்.
அடிபட்டு, நொந்து, உடைந்துபோகிற அனுபவம் யாருக்குத்தான் உண்டாவதில்லை? இவ்வாறு நேரிடுவதற்கு சிலசமயங்களில் நாமேகூட காரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தேவன் புதுப்பித்தலின் தேவன், பாவமன்னிப்பின் தேவன். தாழ்மையோடு அவரிடம் செல்கிற எவருக்கும் நம்பிக்கை உண்டு. தம்மிடம் வருகிறவர்களை இருகரம் நீட்டி அவர் வரவேற்கிறார்; அவ்வாறு வருகிறவர்கள் அவர்களுடைய கரங்களில் தஞ்சம் புகலாம்.