வகை  |  odb

முழு கவனம்

தற்கால, தொழில் நுட்பத் துறையானது, நம்முடைய கவனத்தை தொடர்ச்சியாக  ஈர்க்கிறது. அதிலும் நவீன “வலைதள” அணுகுமுறை, வியத்தகு முறையில் மொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஒன்று சேர்ந்து, நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த அறிவை  தொடர்ச்சியாகப் பெற சிலருக்கு, நாம் கிரயம் செலுத்த வேண்டியுள்ளது. 

வெளியுலகத்தில் என்ன நடக்கிறது? நாம் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமா என்ற உந்துதல் நமக்குள்ளே ஏற்படுவதைக் குறிப்பிட, எழுத்தாளர் லிண்டா ஸ்டோன் என்பவர், “தொடர்ச்சியான பகுதி கவனம்” என்ற சொற்டொடரை பயன்படுத்தினார். அப்படியானால், அது நாளடைவில் தீராத பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுவோமேயானால், அது சரியே!

அப்போஸ்தலனாகிய பவுல் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் ஏற்பட்ட கவலையோடு போராடிக்கொண்டிருந்தாலும், நம்முடைய ஆத்துமா தேவன் தரும் சமாதானத்தைப் பெற ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறதை அவர் அறிவார். இதையே பவுல், துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்கிற, தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார் (1 தெச. 2:14). எனவே, பவுல் தேவனுடைய விசுவாசிகளை, “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்” (5:16-18) என்று தேற்றுகின்றார்.

“தொடர்ந்து ஜெபிப்பது” என்பது நம்மைச் சோர்வடையச் செய்வதாகத் தோன்றலாம், ஆனால் நாம் எத்தனை முறை நம்முடைய அலைபேசியை பயன்படுத்துகின்றோம்? இந்த உந்துதலை, ஏன் நாம் தேவனோடு பேசுவதற்கு பயன்படுத்தக்கூடாது?

நம்முடைய தேவைகளையே சந்திப்பதற்குப் பதிலாக, தொடர்ந்து தேவனுடைய சமுகத்தில் அமைதியாக ஜெபத்தில் தரித்திருப்பதை நாம் தேர்ந்து கொள்வது எத்தனை முக்கியமானது. நம்முடைய அனுதின வாழ்வில், கிறிஸ்துவின் ஆவியானவரைச் சார்ந்து கொண்டு, நம் பரலோகத் தந்தைக்கு நம்முடைய முழு கவனத்தையும் கொடுப்பதற்குக் கற்றுக்கொள்வோம்.

போகிறது, போகிறது, போயேவிட்டது

நகைச் சுவை மிக்க ஓவியர் பாங்க்ஸி, மற்றுமொரு குறும்புதனத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிறுபெண் பலூன் ஒன்றினை வைத்திருப்பது போன்று, அவர் வரைந்த படம், லண்டனிலுள்ள சோத்பை என்ற, ஏலம் விடப்படும் இடத்தில், ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. ஏலம் விடுபவர் “விடப்பட்டது” என்று சத்தமாகக் கூறிய மறு வினாடியில், ஓர் எச்சரிக்கை மணி அடித்தது, சட்டத்தில் இணைக்கப் பட்டிருந்த அ ந்த படம், துண்டுகளாக வெட்டும் கருவியின் வழியே நழுவி கீழே இறங்கியது. ஏலம் எடுக்க வந்திருந்தவர்களின் மத்தியில் இருந்த பாங்க்ஸி, தன்னுடைய மிகச் சிறந்த படம் அழிகிறதே என, “போகிறது, போகிறது, போயேவிட்டது” என்று கத்தினார்.

பாங்க்ஸி தன்னுடைய குறும்புதனத்தை செல்வந்தர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார். அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை. செல்வத்துக்குள்ளும் அநேக குறும்புத்தனங்கள் நிறைந்துள்ளன. தேவன், “இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” (வ.4-5) என்கின்றார்.

உலகப் பொருட்கள் பணத்தைப் போன்று அழிந்து போகக் கூடியன. அவற்றைச் சம்பாதிக்க, நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனாலும் அவற்றை இழக்க அநேக வழிகள் உள்ளன. தவறான முதலீடுகள், பணமதிப்பு குறைகிறது, நாம் செலவழித்ததைக்  கட்டவேண்டியுள்ளது, திருடர்கள் திருடுகின்றார்கள், நெருப்பும், வெள்ளமும் அழித்து விடுகின்றது, இவற்றையெல்லாம் தாண்டி பணத்தைச் சேமித்து வைத்திருந்தால், தொடர்ந்து செலவுகள் வந்து கொண்டேயிருக்கிறது.. கண் மூடி விழிப்பதற்குள் உன்னுடைய வாழ்வு போய்க்கொண்டேயிருக்கிறது, இன்னும் போய் கொண்டேயிருக்கிறது, போயே விட்டது. 

என்ன செய்வது? தேவன் மேலும் சில வார்த்தைகளைச் சொல்கின்றார். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு, நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (வ.17-18). உன் வாழ்வை இயேசுவின் மேல் கட்டு, அவரே உன்னை என்றென்றும் காக்க வல்லவர்.

பெலவீனரைப் பெலப்படுத்தல்

1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும்  தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள். 

இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

முழுமையான ஜீவன்

1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.