வகை  |  odb

விளைவுகளைத் தாண்டிய நம்பிக்கை

நீங்கள் எப்போதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய காலப்போக்கில் விசுவாசிகளைச் சந்தித்த பின்னர், அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். 

 விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள். 
 

எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: "அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தை கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்:"அப்பொழுது மோசே அவர்களை நோக்கி:கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி" (வ.10). பின்னர் வெளிப்படையாக தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின் விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13). 
 

மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இரங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையாக அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார். 
  
  

இயேசுவைப் போல நடவுங்கள்

"மாறுவேடத்தின் தலைவன்" என்பது இந்தோனேசியாவில் நீரிலும், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையிலும் வாழ்கிறது. இந்தப் போலியான ஆக்டோபஸ், மற்ற ஆக்டோபஸ்களைப் போலவே தன் தோலின் நிறத்தை அதன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். புத்திசாலித்தனமான இந்த உயிரினம் அதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில்; விஷமுள்ள சிங்கமீன்கள், கொடிய கடல் பாம்புகள் ஆகியவற்றைப் போன்று, தன் வடிவம், நகர்வு மற்றும் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளும். 
  
இந்தப் போலியான ஆக்டோபஸ் போலல்லாமல், இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தனித்து நிற்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள, நம் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நாம் அச்சுறுத்தப்படும் போது, அவர்களுடன் இணைந்து செயல்பட நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் அப்படிச் செய்யும் போது, தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய வாழ்க்கை ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக (ரோமர்12:1) நம்மை உற்சாகப்படுத்துகிறார். 
  
ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று" நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படி" (வச. 2) நமக்கு அழுத்தம் கொடுக்க முயலலாம். ஆனால் நாம்தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை நம்வார்த்தையிலும், அதேபோல நாம் செயலிலும் காட்ட வேண்டும். நாம் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது, அதனால் வரும் பலன்கள், எந்த இழப்பைக் காட்டிலும் எப்பொழுதும் பெரிது என்பதை நம் வாழ்வில் நிரூபிக்க முடியும். இன்று நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுவீர்கள்? 
  

  
 

மாறா தேவன்

புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் "பஸ் ஆல்ட்ரின்" 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும். 
  
தேவனின் நிலையான பிரசன்னத்தைப் பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது;அவரிடத்தில்யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன் 
இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் " (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்! 
  
கஷ்டநேரங்களில், தேவனின் மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர கால்தடத்தை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது. 
  

  

அயலாரை நேசியுங்கள்

வாலிபர் முகாமில் நடந்த ஒரு வேடிக்கையான விளையாட்டு அது. ஆனால் அவ்விளையாட்டு எங்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்தது: அயலாரை மாற்றுவதை விட, அவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வது. வட்டத்தின் நடுவில் நிற்கும் ஒருவரைத் தவிர, அனைவரும் ஒரு பெரிய வட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தவர் அமர்ந்திருந்த ஒருவரிடம், "உன் அருகிலிருப்பவரை நேசிக்கிறாயா?" என்று கேட்டார். அமர்ந்திருந்தவர் கேள்விக்கு இரண்டு வழிகளில் பதிலளிக்கலாம்: ஆம் அல்லது இல்லை. அல்லது அவர் விருப்பம்போல் தன் அருகிலிருப்பவரை மாற்றியும் கொள்ளலாம். 
  
நிஜ வாழ்க்கையிலும் நமது "அருகிலிருப்பவரை" தேர்வு செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? குறிப்பாக நம்மால் பழக முடியாத உடன் பணியாளர் அல்லது உங்களைத் தொந்தரவு செய்யும் வகையில் முரண்பாடான நேரங்களில் முரணான வேலை செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் ஆயினும், நாம் அவர்களுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது, தமக்குச் சொந்தமான மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முக்கியமான அறிவுரைகளை அவர்களுக்கு தேவன் தந்தார். "உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக" (லேவியராகமம் 19:18), இதில் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பது, அவர்களைப் பற்றி தவறான செய்தியைப் பரப்பாமல் இருப்பது, அவர்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, அவர்களிடம் ஏதேனும் தவறு இருக்குமாயின் அவர்களிடம் பகை கொள்ளாமல் அதை நேரே அவர்களிடம் சொல்லுவது - இவையாவும் அந்த அறிவுரையில் அடங்கும் (வச . 9-18). 
  
எல்லோரையும் நேசிப்பது கடினம் என்றாலும், இயேசு நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படும்போது, மற்றவர்களை அன்பாய் நடத்துவது சாத்தியமாகும். நாம் அவருடைய ஜனமென்னும் அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ முற்படுகையில், அவ்வாறு செய்வதற்கான ஞானத்தையும் திறனையும் தேவன் அருளுவார்.