வகை  |  odb

கிறிஸ்துமஸ் பிரமிப்பு

ஒரு கூட்டத்திற்காக நான் ஒரு இரவு லண்டனில் இருந்தேன். மழை பெய்துக்கொண்டிருந்தது. நான் தாமதமாக போய்க்கொண்டிருந்தேன். நான் தெருக்களில் விரைந்து, ஒரு மூலையில் திருப்பி, பின்பு அசையாமல் நிறுத்தினேன். டஜன் கணக்கான தூதர்கள் ரீஜென்ட் ஸ்ட்ரீட்டுக்கு மேலே சென்றனர். அவர்களின் பிரம்மாண்டமான இரக்கைகள் போக்குவரத்து முழுவதின் மேலும் விரிக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துடிப்பு விளக்குகளால் ஆன அது நான் பார்த்த மிக அற்புதமான கிறிஸ்மஸ் காட்சி. நான் மட்டும் வசீகரப்படவில்லை நூற்றுக்கணக்கானவர்கள் வீதியில் வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிறிஸ்மஸ் கதைக்கு பிரமிப்பு மையமானது. தேவதூதன் மரியாளுக்கு தோன்றி அவர் அற்புதமாக கருத்தரிப்பார் என்று விளக்கியப் போதும்

(லூக். 1:26-38), மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பைக் குறித்து அறிவித்தப் போதும் (2:8-20) ஒவ்வொருவரும் பயம், ஆச்சரியம் மற்றும் பிரமிப்படைந்தனர். ஆந்த ரீஜென்ட் ஸ்ட்ரீட் கூட்டத்தைப் சுற்றிப் பார்க்கும்போது முதலில் தேவதூதர்களின் சந்திப்பின் ஒரு பகுதியை காண்பதாக நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

ஒரு கணம் கழித்து நான் வேறு ஒன்றை கவனித்தேன். சில தேவதூதர்கள் தங்கள் கைகளை உயர்த்தி அவர்களும் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது. இயேசு என்ற பெயரைக் கேட்டவுடனே (வச. 13-14)

தேவதூதர்களின் பாடகற் குழு வெடிப்பது போல் தூதர்களும் இயேசுவைப் பார்ப்கும்போது பிரமிப்பில் சிக்கிக்கொள்ளுகின்றனர் என்று தோன்றுகிறது.

இவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார் (எபி. 1:3). பிரகாசமான மற்றும் ஒளிரும் ஒவ்வொரு தேவதூதரின் பார்வையிலும் இயேசுவே மையமாக இருக்கிறார் (வச. 6). தேவதூதரை மையமாகக்கொண்ட கிறிஸ்மஸ் காட்சி பரபரப்பான லண்டன் வாசிகளையே தங்களுடைய தடங்களில் நிறுத்த முடியுமானால், நாம் அவரை முகமுகமாய் பார்க்கும் தருணத்தை கற்பனை செய்து பார்க்கவும்.

மென்மையான பேச்சு

நான் முகநூலில் வாதிட்டுக்கொண்டிருந்தேன். மோசமான நடவடிக்கை. நான் ஒரு அந்நியரை ஒரு காரசாரமான தலைப்பு முக்கியமாக, பிரிவினையை உண்டாக்கும் தலைப்பு - இதைப்பற்றி பேசி திருத்த கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அதன் விளைவு கடுமையான வாக்குவாதம், புண்படுத்தும் உணர்வுகள் (என்னுடைய பங்கில்) மற்றும் இயேசுவுக்காக சாட்சி கொடுப்பதற்கு ஒரு தகாத தருணமாக இருந்தது. இது 'இணையதள கோபத்தின்" வெளிப்பாடாக இருந்தது. இது வலைதளத்தில் தினமும் வீசப்படும் கடுஞ்சொற்களை குறிக்கும் பதம். ஒரு நெறிமுறை நிபுணர் விளக்கியது போல், ஆத்திரம் என்பது 'எப்படி பொதுக் கருத்துக்கள் பேசப்படுகின்றது" என்று மக்கள் தவறாக முடிவு செய்கிறார்கள்.

பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த ஞானமான ஆலோசனை எச்சரிக்கையாக இருந்தது. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டையை பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைப்பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகச் சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனாயும் இருக்க வேண்டும் (2 தீமோ. 2:23-24).

ரோமானிய சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் நல்ல ஆலோசனை, தேவனுடைய சத்தியத்தை கற்பிப்பதற்கு இளம் போதகரை தயார்படுத்த அனுப்பப்பட்டது. பவுலின் அறிவுரை இன்று சரியான நேரத்தில், முக்கியமாக நம்முடைய உரையாடல் விசுவாசத்திற்கு நேராக திருப்பப்படும்போது, நமக்கும் கொடுக்கப்படடுள்ளது. எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும் … சாந்தமாய அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் (வச. 25).

மற்றவர்களுடன் கனிவாக பேசுவது இந்த சவாலின் ஒரு பகுதி, ஆனால் போதகர்களுக்கு மட்டுமல்ல. தேவனை நேசித்து, அவரைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்ல வாஞ்சிக்கும் எல்லோரும், அவருடைய சத்தியத்தை அன்போடு சொல்வோமாக. ஓவ்வொரு வார்த்தையிலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

நீங்கள் யார்

அவரது பெயர் யான். அவர் தன்னை உலகத்தின் மாணவன் என்று கருதுகிறார். அவர் கடந்து வந்த எல்லா நகரங்களைக் குறித்து 'இது ஒரு பெரிய பள்ளி' என்று கூறுகிறார். மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அவர் 2016ம் ஆண்டு தனது சைக்கிளில் நான்கு வருட பயணத்தை துவங்கினார். மொழி ஒரு தடையாக இருக்கும்போது, சில நேரங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதிலேயே புரிந்துக்கொள்ளுகிறார்கள் என்று கண்டார். அவர் மக்களிடம் தொடர்பு கொள்ள தன் தொலைபேசியில் உள்ள மொழிபெயர்ப்பு பயன்பாட்டை சார்ந்திருக்கிறார். அவர் தான் பயணித்த மைல் கணக்கிலோ அல்லது அவர் பார்த்த காட்ச்சிகளையோ வைத்து அவர் தனது பயணத்தை அளவிடவில்லை. அதற்கு பதிலாக தன்னுடைய இதயத்தில் முத்திரை பதித்த மக்களைக் கொண்டு அளவிடுகிறார்: 'உங்கள் மொழி எனக்குத் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் யார் என்பதைக் கண்டுக்கொள்ள விரும்புகிறேன்".

இது மிகப் பெரிய உலகம். இருந்தாலும் அதைப்பற்றின எல்லாவற்றையும், அதன் மக்களைப்பற்றியும் தேவன் முழுமையாக அறிந்திருக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது தேவனின் விரல்களின் கிரியையாகிய வானங்களையும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும், பார்க்கும்போது மிகவும் ஆச்சரியப்பட்டார் (சங். 8:3). 'மனுஷனை நினைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்" என்று வியந்தார் (வச. 4).

தேவன் மற்ற யாரை விடவும் உங்களை நன்கு அறிந்திருக்கிறார் மற்றும் அவர் உங்கள் மேல் கவனமாயிருக்கிறார். 'எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது" (வச. 1,9) என்று நாமும் துதிக்கலாம்.

கூட இருப்பது

கேளிக்கை பூங்காவில் வேலை செய்யும் ஜென், ரோஹித் கண்ணீரோடு தரையிலே சரிந்ததைக் கண்டதும், உடனே அவனுக்கு உதவி செய்ய விரைந்தாள். ரோஹித், மனஇருக்கத்தால் பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன். நாள் முழுதும் தான் மகிழ்ச்சியாக அனுபவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவாரி செய்யும் இயந்திரம் பழுதடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டு அழுதுக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை எழுந்து நிற்கவைக்கவோ அல்லது சமாதானப்படுத்தவோ முயற்சிப்பதற்கு பதிலாக, ஜென், தரையிலே ரோஹித்துடன் உட்கார்ந்து, அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அவனை அழ அனுமதித்தாள்.

ஜென்னின் இந்தச் செயல், துன்பத்தோடும் அல்லது துக்கத்தோடும் இருப்பவர்களோடு எவ்வாறு நாமும் துணை நிற்பது என்பதற்க்கு ஒரு அழகிய உதாரணமாய் இருக்கிறது. தன்னுடைய வீடு, தன் மிருகஜீவன்கள் (வருமானம்), தன் ஆரோக்கியத்தின் இழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தன் பத்து பிள்ளைகளின் இறப்பினால் முடங்கிப்போன யோபுவின் துன்பத்தைப்பற்றி வேதாகமம் கூறுகிறது. யோபின் துக்கத்தை அறிந்த அவருடைய நண்பர்கள் யோபுவுக்கு ஆறுதல் சொல்லவும் - அவரவர் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள் (யோபு 2:11). யோபு துக்கத்தோடே தரையிலே உட்கார்ந்திருந்தார்.

அவருடைய நண்பர்கள் வந்தபோது, அவர்களும் யோபுடன் உட்கார்ந்து - ஏழு நாட்கள் - அவருடைய துக்கம் கொடிதாயிருந்ததினால் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

பிறகு, தங்களுடைய மனிதத்தன்மையின் அடிப்படையில் யோபுவின் நண்பர்கள் அவருக்கு உணர்வற்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் முதல் ஏழு நாட்கள், வார்த்தைகளற்ற மென்மையான பரிசாகிய அவர்களுடைய பிரசன்னத்தை மட்டும் கொடுத்தார்கள்.

மற்றவர்களுடைய துக்கத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், வெறுமனே அவர்களோடு கூட இருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அன்பு செலுத்த இந்த புரிந்துக்கொள்ளுதல் தேவையற்றது.