வகை  |  odb

ஆசீர்வாத திற்காக காத்திருத்தல்

பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான உணவகம் 45 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமைத்து வரும் ஒரு குழம்பில் இருந்து சூப் ஒன்றை பரிமாறுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அது மீண்டும் மீண்டும் நிரப்பப்படுகிறது. 'நிரந்தர குழம்பு' என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை இடைக் காலத்திற்கும் முந்தையது. சில 'எஞ்சியவை' சில நாட்களுக்குப் பிறகு நன்றாக ருசிப்பது போல நீட்டிக்கப்பட்ட சமையல் நேரம் ஒன்றிணைந்து தனித்துவமான சுவைகளை உருவாக்குகின்றது. இந்த உணவகம் தாய்லாந்தில் மிகவும் சுவையான குழம்புக்கான பல விருதுகளை வென்றுள்ளது.
நல்ல விஷயங்கள் பெரும்பாலும் நேரம் எடுக்கும், ஆனால் நம் மனித இயல்பு பொறுமையுடன் போராடுகின்றது. "எவ்வளவு காலம்?" என்ற கேள்வி முழு வேதாகமத்திலும் வருகிறது. ஒரு தெளிவான உதாரணம் ஆபகூக் தீர்க்கதரிசியிடமிருந்து, அவர் தனது புத்தகத்தை இவ்வாறு தொடங்குகிறார். "கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் கேளாமல் இருக்கிறீரே!" (ஆப. 1:2). ஆபகூக் (பெயரின் அர்த்தம் 'மல்யுத்த வீரர்') இரக்கமற்ற பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் படையெடுப்பு மூலம் தனது நாடு (யூதா) மீது கடவுளின் தீர்ப்பை முன்னறிவித்தார். மேலும் ஊழல் செய்தவர்கள் மற்றவர்களை சுரண்டும் போது வளர்வதற்கு கடவுள் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று அவர் போராடினார். ஆனால் கடவுள் தம்முடைய நேரத்தில் நம்பிக்கையையும் மீட்டு எடுப்பதையும் வாக்களித்தார். குறித்த காலத்துக்கு தரிசனம் (கடவுளின் உதவி) இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை" (2:3).
பாபிலோனின் சிறையிருப்பு 70 வருடம் நீடித்தது. மனித கணக்கெடுப்பின்படி அது ஒரு நீண்ட காலம், ஆனால் கடவுள் அவருடைய வார்த்தைக்கு உண்மையும் நேர்மையும் உள்ளவர்.
கடவுளின் சில மிகச்சிறப்பான ஆசீர்வாதங்கள் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அது தாமதித்தாலும், அவரையே நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சரியான ஞானத்துடனும் அக்கறையுடனும் தயார் செய்கிறார். நாம் காத்திருப்பதற்கு அவர் எப்போதும் தகுதி வாய்ந்தவர்.

செழித்தோங்க வெட்டி களைதல்

ஒரு பெரிய வண்டு ஒரு பூப்பூக்கும் புதரில் மெல்ல இறங்கியதை நான் பார்த்தபோது, அந்த புதரின் பசுமையான இலைகள் வண்ணமயமாக விரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு நீல மலர்கள் கண்களையும் வண்டுகளையும் ஒரே மாதிரி ஈர்த்தன. இலையுதிர் காலத்தின் கடைசி நாட்கள் என்பதால், அவை மீண்டும் பூக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியின் பெற்றோர் ஒரு பஞ்சு செடியை ஒரு சிறு துண்டாக குறைத்த போது அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தார்கள் என்று நான் கருதினேன். கொடூரமாக தோன்றிய, வெட்டி களைதலின் பிரகாசமான விளைவை நான் இப்பொழுது கண்டேன்.
இத்தகைய கடுமையான வெட்டுகளால் ஏற்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க அழகுதான் விசுவாசிகளிடையே கடவுளின் வேலையை விவரிக்க இயேசு வெட்டி களைதலின் உருவகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். யோவான் 15ல் இயேசு கூறுகிறார், "நான் மெய்யான திராட்சச்செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார்." (வச. 1-2).
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் கடவுள் எப்போதும் நமது ஆவிக்குரிய புதுப்பித்தல் மற்றும் கனி கொடுத்தல் இவற்றை நோக்கியே நம்மில் செயல்படுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வெட்டி களைதலின் பருவங்களான துன்பப்படுதல் அல்லது உணர்ச்சியின் மலட்டுத்தன்மை இவற்றின் போது, நாம் எப்போதாவது மீண்டும் செழித்து வளர முடியுமோ என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் கிறிஸ்து தொடர்ந்து அவருடன் நாம் நெருக்கமாக இருக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றார். "கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (வச. 4). நாம் தொடர்ந்து இயேசுவிடமிருந்து ஆவிக்குரிய ஊட்டத்தை பெறுகையில் இதன் விளைவாக நம் வாழ்வில் வரும் அழகும் கனி தருதலும்,தேவனின் நன்மையை இந்த உலகிற்கு காண்பிக்கும்.

கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடு

34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தவறான அடித்தளங்களால் உடைந்து விழுவதற்கு அபாயத்தில் இருக்கின்றன. இதை உணராமல், ஒரு கான்கிரீட் நிறுவனம் கல்குவாரியில் ஒரு கனிமத்தில் கலந்து இருந்த கல்லை எடுத்தது. இது காலப்போக்கில் கான்க்ரீட் விரிசல் மற்றும் சிதைவுக்கு காரணமாயிற்று. கிட்டத்தட்ட 600 வீடுகளின் அஸ்திவாரங்கள் ஏற்கனவே நொறுங்கி விட்டன. காலப்போக்கில் அந்த எண்ணிக்கை வானளாவ உயரும்.
நிலையற்ற நிலத்தில் நம் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான மிகவும் ஆபத்தான நிலையை விளக்குவதற்கு, இயேசு தவறான அஸ்திவாரத்தின் மேல் ஒரு வீட்டைக் கட்டும் ஒரு படத்தை பயன்படுத்தினார். நம்மில் பலர் தகர்க்கமுடியாத பாறையில் நம் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதை அவர் விளக்கினார். கடுமையான புயல்களை எதிர்கொள்ளும் போது நாம் திடமாக இருப்பதை உறுதி செய்கிறோம். நம்மில் பலர் எவ்வாறாயினும் மணலில் தங்கள் வாழ்க்கையை எழுப்புகிறார்கள். சூறாவளிகள் சீறும்போது, ஒரு பெரிய விபத்துடன் நமது வாழ்க்கை வீழ்ச்சி அடைகிறது (மத். 7:27). அசைக்கமுடியாத அஸ்திவாரத்தின் மேல் கட்டுவதற்கும் நொறுங்க கூடிய அஸ்திவாரத்தின் மேல் கட்டுவதற்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் கிறிஸ்துவின் வார்த்தைகளை 'நடைமுறையில்' வைக்கிறோமோ இல்லையா என்பதுதான். (வசனம் 26) அவருடைய வார்த்தைகளை நாம் கேட்கிறோமா இல்லையா என்பது கேள்வி அல்ல, ஆனால் அவர் நமக்கு உதவுவதைப் போல நாம் அவற்றை பயிற்சி செய்கிறோமா என்பதுதான்.
இந்த உலகில் நமக்கு நிறைய ஞானம் வழங்கப்படுகிறது - மேலும் நிறைய ஆலோசனைகள் மற்றும் உதவிகள் - அதில் பெரும்பகுதி நல்லது மற்றும் நன்மை பயக்கும். கடவுளின் சத்தியத்திற்கு தாழ்மையான வெளிப்படுதலை தவிர வேறு எந்த இடத்திலும் நம் வாழ்க்கையை அடித்தளமாக கொண்டால், எப்படி இருப்பினும் நாம் சிக்கலை வரவேற்கிறவர்களாய் இருப்போம். ஒரு வீடு, ஒரு வாழ்க்கை கற்பாறையின் மேல் கட்டப்பட ஒரே வழி, அவருடைய பலத்தில், தேவன் சொல்வதை செய்வது மட்டும்தான்.

மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்

1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.

அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.

ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).

தைரியத்தை உடுத்திக்கொள்

சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்லுவார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.

தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகள் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)

நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் - எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட இயேசு தருகிறார்.