உற்சாகமிக்க பாலகனான என் மகன் சேவியர், மதிய அமைதி நேரத்தை தவிர்த்தான். அமைதியாக இருப்பது பெரும்பாலும் தேவையற்ற, ஆனால் மிகவும் அத்தியாவசியமான தூக்கத்தில் போய் முடியும். எனவே அவன் இருக்கையில் வேகமாக அசைந்துக்கொண்டே இருப்பான், சாய்விருக்கையில் இருந்து சறுக்கி விளையாடுவான், தரையில் அங்கும் இங்கும் ஓடுவான், அமைதியை குலைக்க அறை முழுவதும் உருளுவான். “அம்மா, பசிக்கிறது… தாகமெடுக்கிறது… நான் குளியலறைக்கு செல்ல வேண்டும்… என்னை கட்டியணைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டே இருப்பான்.

அமர்ந்திருப்பதன் நன்மைகளை புரிந்துகொள்வதால், கட்டியணைக்க அழைப்பதன் மூலம் நான் சேவியருக்கு உதவுவேன். என்னருகில் சாய்ந்து, அவன் தூங்குவான்.

என் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில், எப்பொழுதும் செயல்பாட்டில் இருக்கும் என் மகனின் விருப்பத்தை நானும்  பிரதிபலித்தேன். ஓய்வில்லாத செயல்பாடுகள் என்னை அங்கீகரிக்கப்பட்டவராகவும், முக்கியமானவராகவும், கட்டுப்பாட்டில் இருப்பவராகவும் உணரவைத்தது. அதன் இரைச்சல்கள் எனது தோல்விகளையும், சோதனைகளையும் பற்றி அதிகமாக கவலைப்படுவதிலிருந்து என்னை திசைதிருப்பியது. ஓய்விற்கு என்னை ஒப்படைப்பது எனது பலவீனமான மனுஷிகத்தை மட்டுமே உறுதிப்படுத்தியது. எனவே நான் அமைந்திருப்பதையும், அமைதலாய் இருப்பதையும் தவிர்த்தேன். தேவன் என் துணை இல்லாமலும் காரியங்களை கையாளுவார் என்பதை சந்தேகித்தேன்.

எத்தனை பிரச்சனைகள் அல்லது நிச்சயமற்றதன்மைகள் நம்மை சூழ்ந்துகொண்டாலும் அவர் நமக்கு அடைக்கலமானவர். எதிரே உள்ள பாதை நீளமாக, பயமுறுத்துவதாக அல்லது மூழ்கடிக்கக்கூடியதாய் தோன்றினாலும் அவருடைய அன்பு நம்மை சூழ்ந்துகொள்கிறது. அவர் நமக்கு செவிக்கொடுகிறார், பதிலளிக்கிறார், நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்…. இப்பொழுதும், எப்பொழுதும் நித்தியகாலமாகவும் (சங்கீதம் 91).

நாம் அமைதலாய் இருப்பதை பற்றிக்கொள்ளலாம், தேவனுடைய நிச்சயமான அன்பு மற்றும் மாறாத அவருடைய பிரசன்னத்தின் மீது நாம் சாய்ந்து கொள்ளலாம். நாம் அவரில் அமைதலாயும், இளைப்பாறவும் செய்யலாம், ஏனெனில் நாம் அவருடைய மாறாத உண்மைத்தன்மையின் தங்குமிடத்தின் கீழ் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.