வகை  |  odb

பயத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்

2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் பெரும் பாதிப்பு உலகத்தை அச்சத்தில் விட்டுச் சென்றது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், நாடுகள் முடக்கப்பட்டிருந்தன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு வைரஸ் தொற்று வரக்கூடும் என்று அஞ்சினார்கள். பதட்டவியல் நிபுணரான கிரஹாம் டேவி, எதிர்மறையான செய்தி ஒளிபரப்புகள் "உங்களை சோகமாகவும் கவலையுற்றவர்களாகவும் மாற்றக்கூடும்" என்று நம்புகிறார். சமூக ஊடகங்களில் பரவிய ஒரு மீம், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும் ஒரு மனிதரைக் காட்டியது, மேலும் கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்துவது என்று அவர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அறையில் இன்னொரு நபர் வந்து டிவியை அணைத்தார், அந்த கேள்விக்கான பதில் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது தான் என்று பரிந்துரைத்தார்!

லூக்கா 12 கவலைப்படுவதை நிறுத்த உதவும் சில அறிவுரைகளை நமக்கு அளிக்கிறது: “அவருடைய ராஜ்யத்தையே தேடுங்கள்” (வச.. 31). அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஓர் உரிமை இருக்கிறது என்ற வாக்குறுதியில் கவனம் செலுத்தும்போது நாம் தேவனுடைய ராஜ்யத்தை தேடுகிறோம். நாம் சிரமத்தை எதிர்கொள்ளும்போது, ​​நம் கவனத்தை மாற்றி, தேவன் நம்மைப் பார்க்கிறார், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளலாம் (வச. 24-30).

இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார்: "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்." (வச. 32). நம்மை ஆசீர்வதிப்பத்தில் தேவன் மகிழ்கிறார்! ஆகாயத்து பறவைகள் மற்றும் காட்டுப்பூஷ்பங்களை காட்டிலும் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை அறிந்து  நாம் அவரை ஆராதிப்போம்(வச.. 22-29). கடினமான காலங்களில் கூட, நாம் வேதவசனங்களைப் படிக்கலாம், தேவனின் சமாதானத்திற்காக ஜெபிக்கலாம், நம்முடைய நல்ல, உண்மையுள்ள தேவன் மீது நம்பிக்கை வைக்கலாம்.

கடினமான களம் மற்றும் கனிவான இரக்கம்

 ஜேம்ஸுக்கு வெறும் ஆறு வயதாக இருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரர் டேவிட் ஒரு விபத்தில் பரிதாபமாக இறந்தார். அது டேவிட்டின் பதினான்காம் பிறந்தநாளுக்கு முந்தைய நாள். அதை தொடர்ந்த ஆண்டுகளில், சில சமயங்களில் தனது மூத்த மகன் வளர்ந்து வரும் போது சவால்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை நினைவூட்டிய ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் தனது தாயான மார்கரெட்டை ஜேம்ஸ் ஆறுதல்படுத்த பெரிதும் முயன்றார். ஜேம்ஸ் பாரியின் வளமான கற்பனையில், பல பத்தாண்டுகளுக்கு பிறகும், அவரது யோசனை மிகவும் விரும்பப்படும், ஒருபோதும் பழையதாகாத குழந்தைகளின் கதை கதாபாத்திரம் ஒன்றிற்கு உத்வேகம் அளிக்கும்: பீட்டர் பான். நடைபாதையின் ஊடே ஒரு பூ தன் வழியில் வெளிவருவது போல, நினைத்துப்பார்க்க முடியாத மன வேதனையின் கடினமான களத்திலிருந்து கூட நல்லது வெளிப்பட்டது.

தேவன், எல்லையற்ற படைப்பாற்றலின் வழியில், நம்முடைய மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து நல்லதை வெளியே கொண்டு வர முடியும் என்ற எண்ணம் எவ்வளவு ஆறுதலளிக்கிறது. பழைய ஏற்பாட்டிளுள்ள ரூத்தின் சரித்திரத்தில் இது ஒரு அழகான எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. நவோமி தனது இரண்டு மகன்களையும் இழந்து அவளுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் போனது. அவளுடைய விதவை மருமகள் ரூத் நவோமியுடன் தங்குவதற்கும் தன்னுடைய தேவனைச் சேவிப்பதற்கும் தேர்ந்தெடுத்தாள் (ரூத் 1:16). இறுதியில், தேவன் அவர்களின் தேவைகளை சந்தித்தவிதம் அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரூத் மறுமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றாள், “அவர்கள் அவருக்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள். அவர் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தந்தை” (4:17). அவரும் இயேசுவின் மூதாதையர்களிள் ஒருவராக பட்டியலிடப்படுட்டார் (மத்தேயு 1: 5).

தேவனின் கனிவான இரக்கம் நமது திறனுக்கு அப்பாற்பட்டு, ஆச்சரியமூட்டும் இடங்களில் நம்மைச் சந்திக்கிறது. பார்த்துத்துக்கொண்டே இருஙகள்! ஒருவேளை நீங்கள் இன்று அதைப் பார்ப்பீர்கள்.

சாளரங்கள்

இமயமலையின் அடிவாரத்திற்கு அருகில், ஒரு சுற்றுலா பார்வையாளர் சாளரங்கள் இல்லாத வீடுகளின் வரிசையை கவனித்தார். அவரது வழிகாட்டி, சில கிராமவாசிகள் தூங்கும்போது பேய்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடக்கூடும் என்று அஞ்சினர், எனவே அவர்கள் எதுவும் ஊடுருவமுடியாத சுவர்களைக் கட்டியுள்ளனர் என்று விவரித்தார்.  அம்மாதிரியான வீட்டின் உரிமையாளர் இயேசுவைப் பின்தொடரத் தொடங்கிவிட்டார் என்றால் நீங்கள் சொல்ல முடியும், ஏனென்றால் அவர் வெளிச்சம் உள்ளே வரும்படியான சாளரத்தை வைத்திருப்பார்.       

நாம் அதை அப்படியே நம் வாழ்வில் பார்ப்பதில்லை இருப்பினும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை நம்மில் நிகழக்கூடும்,. நாம் பயமுறுத்துகிற, இரு முனைக்கும் மத்தியில் உள்ள காலங்களில் வாழ்கிறோம். குடும்பங்களையும் நண்பர்களையும் பிளவுபடுத்தும் கோபத்தை உண்டுபண்ணும் விரிசல்களை சாத்தானும் அவனுடைய பேய்களும் தூண்டுகின்றன. அப்போது நான் அடிக்கடி என் சுவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது போல் உணர்கிறேன். ஆனால் நான் ஒரு சாளரத்தை வைக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

இஸ்ரேவேலர் உயர்ந்த சுவர்களில் தஞ்சம் புகுந்தனர், ஆனால் தேவனோ அவர்களுடைய பாதுகாப்பு அவரிடத்தில் உள்ளது என்று கூறினார். அவர் வானத்திலிருந்து ஆளுகை செய்கிறார், அவருடைய வார்த்தை அனைத்தையும் ஆளுகிறது (ஏசாயா 55: 10–11). இஸ்ரேவேல் அவரிடத்தில் திரும்பி வந்தால், தேவன் “அவர்கள் மேல் மனதுருகுவார்” (வச.. 7) மற்றும் உலகை ஆசீர்வதிப்பதற்காக அவர்களை தம்முடைய மக்களாக மீட்டெடுப்பார் (ஆதியாகமம் 12: 1–3). அவர் அவர்களை உயர்த்துவார், இறுதியில் அவர்களை வெற்றிகரமான அணிவகுப்பில் வழிநடத்துவார். அவர்களின் கொண்டாட்டம் “அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்” (ஏசாயா 55:13).

சில நேரங்களில் சுவர்கள் அவசியம். சாளரங்கள் கொண்ட சுவர்கள் மிகச் சிறந்தவை. நம் எதிர்காலத்திற்காக நாம் தேவனை நம்புகிறோம் என்பதை அவை உலகுக்குக் காட்டுகின்றன. நம் அச்சங்கள் உண்மையானவை. நம்  தேவன் பெரியவர். சாளரங்கள் நம்மை இயேசுவுக்கு நேராய் - “உலகின் ஒளி”க்கு நேராய் (யோவான் 8:12) - மேலும் அவரின் தேவை உள்ள மற்றவர்களுக்கு நேராய் திறக்கிறது.

இரக்கத்தை அதீதப்படுத்தல்

ருவாண்டன் இனப்படுகொலையில் தனது கணவனையும், குழந்தைகளில் சிலரையும் கொன்ற மனாசேயை அவர் எவ்வாறு மன்னித்தார் என்பதைப் பிரதிபலிக்கும் பீட்டா, “நான் மன்னிப்பது இயேசு செய்ததை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு தீய செயலுக்கான தண்டனையை அவர் எல்லா நேரத்திலும் எற்றுக்கொண்டார். அவருடைய சிலுவையே நாம் வெற்றியைக் காணும் இடம்- ஒரே இடம்!” சிறையில் இருந்து பீட்டாவுக்கு மனாசே ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருந்தார், அவரிடமும் தேவனிடமும் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு பெற வேண்டும் என்ற சிந்தனையால் அவரைப் பாதித்த வழக்கமான துர்கனவுகளையும் அவர் விவரித்தார். முதலில் அவள் தன் குடும்பத்தாரை கொன்றதின் நிமித்தம் அவனை வெறுத்தாகக் கூறி, இரக்கம் காட்ட மறுத்தாள். ஆனால் பின்னர் “இயேசு அவளுடைய எண்ணங்களுக்குள் ஊடுருவினார்”, தேவனின் உதவியுடன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவள் அவனை மன்னித்தாள்.  

இதில், மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கும்படி சீடர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுறுத்தலை பீட்டா பின்பற்றினார். அவர்கள் “ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாக பாவம் செய்தாலும், ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: 'நான் மனஸ்தாபப்படுகிறேன்,'என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்  (லூக்கா 17: 4). ஆனால், மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம், சீடர்களின் எதிர்வினையில் நாம் காண்கிறபடியால்: “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” (வச.. 5).

மன்னிக்க இயலாமை குறித்து ஜெபத்தில் போராடியதால் பீட்டாவின் விசுவாசம் அதிகரித்தது. அவளைப் போலவே, நாமும் மன்னிப்பதற்கு சிரமப்படுகிறோம் என்றால், அவ்வாறு செய்ய நமக்கு உதவும்படி அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் தேவனிடம் கேட்கலாம். நம்முடைய விசுவாசம் அதிகரிக்கும் போது, ​​மன்னிக்க அவர் நமக்கு உதவுகிறார்.

மூட்டை தூக்கும் செயல்பாடு

ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான கரேன், தனது மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்கு புரிந்துகொள்வது என்பதைக் கற்பிப்பதற்கான ஒரு செயல்பாட்டை உருவாக்கினார்.. இந்த “மூட்டை தூக்கும் செயல்பாட்டில்” - மாணவர்கள் தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான சுமைகள் சிலவற்றை எழுதினர். அந்த குறிப்புகள் ஒருவொருக்கொருவர் மாற்றி கொடுக்கப்பட்டதால், சக மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் பட்ட கஷ்டங்களைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுத்து பெரும்பாலும் அவர்களது சகாக்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. இளம் வயதினருடைய ப்ரஸ்பர மரியாதைக்குரிய ஆழ்ந்த உணர்வால் அந்த வகுப்பறை நிரப்பப்பட்டிருந்தது, அவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் அதிக பச்சாதாபம் கொண்டவர்களாகினர்.

வேதாகமம் முழுவதும், ஒருவருக்கொருவர் கண்ணியத்துடன் நடந்துகொள்வதற்கும் மற்றவர்களுடனான தொடர்புகளில் பச்சாத்தாபம் காட்டுவதற்கும் தேவன் தம் மக்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளார் (ரோமர் 12:15). ஆரம்ப கால இஸ்ரவேலின் வரலாற்றில் லேவியராகமம் புத்தகமத்தில், தேவன் இஸ்ரவேலரின் பச்சாத்தாபத்தை நோக்கி சுட்டிக்காட்டினார்-குறிப்பாக புறஜாதியினருடனான நடவடிக்கைகளில். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் “உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக”; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; (லேவியராகமம் 19:34). 

சில நேரங்களில் நாம் சுமக்கும் சுமைகள் நம்மை அந்நியர்களைப் போல – தனித்து விடப்பட்டவர்களாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டர்களாக – நம் சுற்றத்தாரிடம் கூட உணர வைக்கின்றன. இஸ்ரவேலர் தங்களோடிருந்த புறஜாதியினருடன் செய்ததைப் போன்றதொரு அனுபவம் நமக்கு எப்போதும் இருப்பதில்லை. ஆயினும்கூட, தேவன் நம் வாழ்க்கையின் பாதைகளில் அனுப்புகிறவர்களை நாம், நாம் விரும்பும் மரியாதையுடனும் புரிதலுடனும் எப்போதும் நடத்தலாம். ஒரு நவீனகால நடுத்தர பள்ளி மாணவன், இஸ்ரவேலர் அல்லது இதற்கு இடையில் யாராக இருந்தாலும், நாம் அப்படி செய்யும் போது தேவனை கனப்படுத்துகிறோம்.