ருவாண்டன் இனப்படுகொலையில் தனது கணவனையும், குழந்தைகளில் சிலரையும் கொன்ற மனாசேயை அவர் எவ்வாறு மன்னித்தார் என்பதைப் பிரதிபலிக்கும் பீட்டா, “நான் மன்னிப்பது இயேசு செய்ததை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு தீய செயலுக்கான தண்டனையை அவர் எல்லா நேரத்திலும் எற்றுக்கொண்டார். அவருடைய சிலுவையே நாம் வெற்றியைக் காணும் இடம்- ஒரே இடம்!” சிறையில் இருந்து பீட்டாவுக்கு மனாசே ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருந்தார், அவரிடமும் தேவனிடமும் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு பெற வேண்டும் என்ற சிந்தனையால் அவரைப் பாதித்த வழக்கமான துர்கனவுகளையும் அவர் விவரித்தார். முதலில் அவள் தன் குடும்பத்தாரை கொன்றதின் நிமித்தம் அவனை வெறுத்தாகக் கூறி, இரக்கம் காட்ட மறுத்தாள். ஆனால் பின்னர் “இயேசு அவளுடைய எண்ணங்களுக்குள் ஊடுருவினார்”, தேவனின் உதவியுடன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவள் அவனை மன்னித்தாள்.  

இதில், மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கும்படி சீடர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுறுத்தலை பீட்டா பின்பற்றினார். அவர்கள் “ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாக பாவம் செய்தாலும், ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: ‘நான் மனஸ்தாபப்படுகிறேன்,’என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்  (லூக்கா 17: 4). ஆனால், மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம், சீடர்களின் எதிர்வினையில் நாம் காண்கிறபடியால்: “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” (வச.. 5).

மன்னிக்க இயலாமை குறித்து ஜெபத்தில் போராடியதால் பீட்டாவின் விசுவாசம் அதிகரித்தது. அவளைப் போலவே, நாமும் மன்னிப்பதற்கு சிரமப்படுகிறோம் என்றால், அவ்வாறு செய்ய நமக்கு உதவும்படி அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் தேவனிடம் கேட்கலாம். நம்முடைய விசுவாசம் அதிகரிக்கும் போது, ​​மன்னிக்க அவர் நமக்கு உதவுகிறார்.