வகை  |  odb

மற்றவர்களுக்கு கைகொடுப்போம்

எங்களுடைய மகனை நாங்கள் தத்தெடுப்பதற்கு முன்பு அவனுடைய ஆரம்பநாட்களை அவன் சிறுவர் விடுதியில் கழித்தான். அந்த விடுதியை விட்டு எங்களோடு அவனை கூட்டிவருவதற்கு முன், அவனுடைய பொருட்களையெல்லாம் எடுத்துவரும்படி கூறினோம். ஆனால் பொருட்கள் என்று அவனிடத்தில் எதுவுமில்லை. அவனுக்காய் நாங்கள் வாங்கிச் சென்றிருந்த புத்தாடையை மாற்றச்செய்தோம். அங்கிருந்த சில பிள்ளைகளுக்கும் ஆடைகள் வாங்கிச் சென்றிருந்தோம். அவனுடைய நிலைமையை நினைத்து நாங்கள் பரிதாபப்பட்டாலும் அவனுடைய சரீரப்பிரகாரமான தேவைகளையும் உணர்வு ரீதியான தேவைகளையும் தற்போது எங்களால் சந்திக்க முடிந்ததை எண்ணி மகிழ்ந்தேன். 

சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தின் தேவைக்காய் நன்கொடை சேகரித்த ஒரு நபரை நாங்கள் பார்த்தோம். என்னுடைய மகன் அவருக்கு தன்னுடைய பொம்மைகளையும், சில நாணயங்களையும் கொடுத்து உதவினான். அவனுடைய பொருட்களை அவன் தனக்கென்று கெட்டியாய் பிடித்து வைத்திருந்திருக்க முடியும். 

அவனுடைய அந்த தாராள குணத்திற்கான காரணமே ஆதித்திருச்சபையின் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் குறைவுள்ளவர்கள் யாருமில்லை. “அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” (அப்போஸ்தலர் 4:33-34). ஜனங்கள் தங்கள் ஆஸ்திகளை விற்று மற்றவர்களின் தேவைகளை சந்தித்துக்கொண்டனர். 

பொருளோ அல்லது புலப்படாத ஏதோ ஒரு தேவையோடிருக்கிறவர்களின் தேவையை நாம் உணர்ந்தால், தேவையுள்ளவர்களின் தேவையை முழுமனதுடன் சந்தித்த ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போன்று நம்மையும் உதவசெய்வதற்கு தேவன் கிருபை செய்வார். அது நம்மை “ஒரே இருதயமும் ஒரே மனதும்” (வச. 32) கொண்ட கிருபையின் பாத்திரங்களாய் மாற்றுகிறது. 

நாம் புரிந்துகொள்ளாதபோது..

“அவருடைய திட்டம் எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் அவரைத் தானே நம்பியிருந்தேன். கடைசியில் இப்படி நடந்துவிட்டதே.” ஒரு நல்ல ஓட்டப்பந்தய வீரனாய் மாறவேண்டும் என்னும் கனவை தற்காலிகமாய் தொலைத்த ஒரு மகன் தன் தாயாரிடத்தில் இப்படியாய் சொல்லுகிறான். எதிர்பாராத அல்லது வேதனை தரக்கூடிய சில அனுபவங்களை சந்தித்து கேள்வியோடும் ஆச்சரியத்தோடும் பயணிக்காதவர்கள் நம்மில் யாருண்டு? குடும்ப நபர்கள் திடீரென்று நம்மிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுகிறார்கள், உடல்நலக் குறைவு ஏற்படுகிறது, எதிர்பாராத விதமாய் அலுவலகம் இடமாற்றப்படுகிறது, வாழ்க்கையையே திசைதிருப்பும் விபத்து நேரிடுகிறது. 

யோபுவின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்கள், யோபு 1-2 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யதார்த்தமாய் சொன்னால், பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை சூழல் கொண்ட ஒரு நபர் என்றால், அது யோபு தான். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (1:1). ஆனால் நாம் விரும்புகிற பாதையில் நம்முடைய வாழக்கை பயணிப்பதில்லை. யோபுக்கும் அப்படித்தான். நமக்கும் அப்படித்தான். அவனுடைய மனைவியே “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (2:9) என்று அவனிடத்தில் சொல்லுகிறாள். யோபு அவளுக்கு பொருந்தக்கூடிய ஒரு ஞானமான பதிலை சொல்லுகிறான். அந்த பதில் நமக்கும் நேர்த்தியாய் பொருந்தும். நாம் சந்திக்கிற சிறியதோ அல்லது பெரிய பிரச்சனைகளோ “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (வச. 10). 

நம்முடைய கடினமான வாழ்க்கைச் சூழ்நிலையிலும் தேவன் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அவருடைய பெலத்தினாலே, நம்முடைய நம்பிக்கையும் கனமும் குறையாமல் இருக்கக்கடவது. 

மெய்யான அன்பு

பேரிடரின்போது, ஜெர்ரி தன்னுடைய உடற்பயிற்சி மையத்தையும் மூட வேண்டியிருந்தது. அதினால் மாதக்கணக்காய் வருமானமின்றி தவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் அவனுடைய நண்பனிடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சரியாய் மாலை 6:00 மணிக்கு வரும்படிக்கு சொல்லியிருந்தது. ஜெர்ரிக்கு அது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் குறித்த நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். திடீரென்று பல கார்கள் அணிவகுக்கத் துவங்கியது. அதில் முதல் காரில் வந்தவர் ஒரு கூடையை அந்த கட்டடத்தின் அருகாமையில் வைத்துவிட்டுபோக, தொடர்ந்து வந்த ஏறத்தாழ 50 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து ஜெர்ரியைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தி, அந்தக் கூடையின் அருகாமையில் நிறுத்தி, அதில் வாழ்த்து அட்டைகளையும் பணத்தையும் வைத்துவிட்டு சென்றனர். அதின் மூலமாக ஜெர்ரியை உற்சாகப்படுத்தினர். 

பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தியாகமே அன்பின் நிஜமான தன்மை. கொரிந்திய சபையை சேர்ந்தவர்களுக்கு, மக்கதோனியா சபையை சேர்ந்தவர்கள் “தங்கள் திரணிக்கு மிஞ்சி” கொடுத்து அப்போஸ்தலர்களின் தேவையை சந்தித்தார்கள் என்று பவுல் கூறுகிறார் (2 கொரி. 8:3). பவுலுக்கும் தேவ ஜனத்திற்கும் கொடுக்கும் வாய்ப்புக்காய் “அவர்கள் மிகவும் வேண்டிக்கொண்டார்கள்” என்றும் கூறுகிறார். இயேசுவின் தியாகமான இருதயமே அவர்களைக் கொடுக்கத் தூண்டியது. அவர் பரலோகத்தின் மேன்மையை துறந்து, தன் ஜீவனைக் கொடுக்கும்பொருட்டு பூமிக்கு வந்து அடிமையின் ரூபமெடுத்தார். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும்... உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (வச. 9).

மற்றவர்களுடைய தேவையை அன்போடு சந்திக்க, இந்த தருமக் காரியத்தில் பெருக நாமும் தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளலாமே (வச. 7). 

கேட்பது முக்கியம்

“சீக்கிரம் வாருங்கள், நாங்கள் பனிப்பாறையை மோதிவிட்டோம்.”RMSகார்பாத்தியா கப்பலின் செய்தித் தொடர்பாளர் ஹெரால்ட் காட்டம், 1912 ஏப்ரல் 15ஆம் தேதி, காலை 12:25க்கு, மூழ்கிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட முதல் செய்தி இதுவே. அந்த பேரிடரிலிருந்து டைட்டானிக் கப்பலை விரைந்து சென்று அதில் பயணம்செய்த 706 உயிர்களை காப்பாற்றிய முதல் கப்பல் இந்த கார்பாத்தியா தான். 

சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க, கார்பாத்தியாவின் கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான், “இவை அனைத்துமே ஆச்சரியமாய் நடந்தேறிய தெய்வீகச் செயல்” என்றாராம். “வயர்லஸ் கருவியை இயக்கும் கருவி அந்த நேரத்தில் தன்னுடைய கேபினில் இருந்தது... அவர் சாதாரணமாய் உடை மாற்றும்போதே அந்த தகவலை கேட்க நேர்ந்தது... இன்னும் பத்து நிமிடத்தில் அவர் தன் படுக்கைக்கு போயிருந்திருப்பார்.. அந்த செய்தியை கேட்க முடியாமல் போயிருந்திருக்கும்.” 

கேட்பது அவசியம்; குறிப்பாய் தேவனுடைய சத்தத்தை கேட்பது மிக அவசியம். சங்கீதம் 85ன் ஆசிரியர் கோராகின் புத்திரர்கள், “கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன் ; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (வச. 8-9) என்று கீழ்ப்படிதலுக்கு வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய எச்சரிக்கை கடுமையானது. ஏனென்றால் அவர்களின் முற்பிதாவாகிய கோராகு தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் பண்ணி வனாந்திரத்தில் அழிந்துபோனவர் (எண். 16:1-35). 

டைட்டானிக் மூழ்கிய அன்றிரவு அருகிலிருந்த வேறொரு கப்பலின் வயர்லெஸ் செய்தி தொடர்பாளர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் அந்த செய்தியை கேட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருந்திருக்கக்கூடும். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவோமாகில் இன்றும் கடினமான வாழ்க்கைப் பாதையினூடாய் கடந்துபோகும் நம்மை அவர் திசைதிருப்புவார்.