நீங்கள் யார்?
பத்தாண்டுகளாகப் பிள்ளை இல்லாத நானும் எனது மனைவியும், 2011 ஆம் ஆண்டு புது நாட்டில் புதிய வாழ்வைத் துவங்கினோம். இந்த குடியேற்றம் உற்சாகமளித்தாலும், நான் அதிகம் நேசித்த ஒளிபரப்புப் பணியை விடவேண்டியிருந்தது. குழப்பமடைந்த நான், என் நண்பனிடம் யோசனை கேட்டேன்."என் அழைப்பு என்னவென்றே எனக்குத் தெரியவில்லை" என்று அவனிடம் மனச்சோர்வோடு பேசினேன்.
"நீ இங்கே ஒளிபரப்பு செய்யமாட்டாயா?" என்று கேட்ட அவனிடம். இல்லையென்றேன். "உன் திருமண வாழ்க்கை எப்படியுள்ளது" என்று அவன் கேட்க, எங்கள் பேச்சு சற்று திசைமாறினாலும்; நானும் என் மனைவியும் நன்றாக இருப்பதாகவே அவனிடம் கூறினேன். நாங்கள் இருவருமே மனமுடைந்து இருந்தோம், ஆனால் இந்த சோதனை எங்களை இன்னும் நெருக்கமாக்கியிருந்தது.
"சுவிசேஷத்தின் அஸ்திபாரமே அர்ப்பணிப்புதான்" என்று, அவன் புன்னகைத்தான். "உன்னுடைய இந்த அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கை இந்த உலகிற்கு எவ்வளவாய் தேவை! நீ செய்வதைக் காட்டிலும், நீ வாழும் விதமே இந்த உலகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை." என்றான்.
கடினமான பணிச்சூழல் தீமோத்தேயுவை மனஞ்சோர செய்கையில், அப்போஸ்தலன் பவுல் அவனுக்கு எந்த இலக்கையும் தரவில்லை. மாறாக தீமோத்தேயுவை பக்தியுள்ள ஒரு வாழ்வு வாழவும், அவனுடைய பேச்சு, நடக்கை, அன்பு, விசுவாசம் மற்றும் கற்பின் மூலம் ஒரு முன்மாதிரியைக் காட்டவும் உற்சாகப்படுத்துகிறார் (4:12–13,15). அவருடைய விசுவாச வாழ்வினால் பிறர்வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.
நம்முடைய பணிகளின் வெற்றியைக் கொண்டு நமது வாழ்வை மதிப்பீடு செய்வது சுலபம், ஆனால், நமது குணாதிசயமே முக்கியம். நான் அதைத்தான் மறந்துபோனேன். உண்மையான வார்த்தை, கருணையான செயல், அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கையும்கூட பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனெனில் இவைகள் மூலம் தேவனுக்கே உரித்தான நன்மைகள் இவ்வுலகை அசைக்கின்றன.

ஒருவருக்கொருவர் ஊக்குவித்தல்
மருத்துவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின் சோர்ந்துபோய் நான் சோபாவில் அமர்ந்தேன். எதைக்குறித்தும் சிந்திக்கப் பிடிக்கவில்லை, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை. சந்தேகமும், ஊக்கமின்மையும் என்னை அமிழ்த்த, தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் வந்த விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுமி தன் தம்பியிடம், "நீ சிறந்த வீரன்" என்றாள். அவ்வாறே அவனை அவள் தொடர்ந்து ஊக்கமளிக்கையில், அச்சிறுவன் சிரித்தான். நானும் சிரித்தேன் .
தேவஜனங்கள் எப்போதுமே மனமடிவினாலும், சந்தேகத்தாலும் பாதிக்கப்பட்டனர். தேவனுடைய சத்தம் பரிசுத்த ஆவியானவரால் மனிதருக்குக் கேட்கும் என்பதை உறுதிப்படுத்தும் சங்கீதம் 95 ஐ மேற்கோள்காட்டி, எபிரெய நிருபத்தின் ஆக்கியோன் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் செய்த தவறுகளை விசுவாசிகள் தவிர்க்கும்படி எச்சரிக்கிறார் (எபிரெயர் 3:7–11). "சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." என்றும் "நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (ஊக்கமளியுங்கள்)" என்றும் எழுதினார் (வ.12–13).
நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவில் இருக்க, நமக்குத் தேவையான உதவி. நாம் நீடிய பொறுமையோடு இருப்பதற்குத் தேவையான பெலனை விசுவாசிகளின் ஐக்கியம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் (வ.13). ஒருவர் சந்தேகிக்கையில், மற்றொருவர் அவரை உறுதிப்படுத்தி உத்தரவாதம் செய்யலாம். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்த, தேவஜனமாகிய நமக்குத் தேவனே பெலனளிக்கிறார்.

எச்சரிப்பின் சப்தங்கள்
நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார்.
சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார்.
நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

சூடான உணவு
பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள்.
இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார்.