வகை  |  odb

இயேசுவில் இளைப்பாறுதலை கண்டறிதல்

அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின்  தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: "நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்" என்றார். துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.

இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். "என்னிடத்தில் வாருங்கள்" என்கிறார். நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).

நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.     

banner image

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22

கலாத்தியர்களின் இந்த அத்தியாயத்தில் பவுல் பாவத்தைப் பற்றிப் பேசவில்லை.…

banner image

மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரிந்தியர் 12:15

ஒருதரம், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்" (ரோமர் 5:5);…

banner image

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் (வ.16). எபேசியர் 3:14-21

கோடீஸ்வர நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் 2009 இல் உருவாக்கப்பட்ட…

banner image

அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும். யாத்திராகமம் 32:21-32

எகிப்து சிறையில் 400 நாட்களைக் கழித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்…

banner image

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23

பிப்ரவரி 2020 இல், கோவிட்-19 நெருக்கடி துவங்கிய காலம். ஒரு செய்தித்தாள்…

banner image

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய…

ஒரு குரங்கு, ஒரு கழுதை மற்றும் நான்

இரயில்களை சரியான தண்டவாளத்திற்கு மாற்றுவது எப்படி என்று ஜாக் அறிந்திருந்தான். ஒன்பது வருட அனுபவத்தில், தென்னாப்பிரிக்காவின் உய்டென்ஹேஜ் நிலையத்திற்கு வரும் ரயில்கள், அவை செல்ல வேண்டிய திசையை பேரொலி மூலம் சுட்டிக்காட்டியதால், அவன் தண்டவாள மாற்றுக் கருவியைச் சரியாக இயக்குவான்.

ஜாக் மனிதனல்ல ஒரு பபூன் குரங்கு. அவனை ரயில்வே சிக்னல்மேன் ஜேம்ஸ் வைட் பராமரித்து வந்தார். ஜாக்கும் தன் பங்கிற்கு அவருக்கு உதவியது. ஓடும் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்ததில் வைட் தனது இரண்டு கால்களையும் இழந்தார். வீட்டுவேலைகளில் அவருக்கு உதவ ஜாக் பயிற்றுவிக்கப்பட்டான். விரைவில் ஜாக் அவருக்கு வேலையில் உதவினான், உள்வரும் ரயில்களின் சமிக்ஞைகளுக்கு ஏற்ப அதன் தடங்களுக்கு ஏற்ற நெம்புகோல்களை இழுப்பதன் மூலம் எவ்வாறு தடம் மாற்றவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது.

வியக்கத்தக்க விதத்தில் ஒருவருக்கு உதவிய மற்றொரு மிருகத்தைப் பற்றி வேதம் சொல்கிறது, அது பிலேயாமின் கழுதை. பிலேயாம் ஒரு புறஜாதி தீர்க்கதரிசி, இஸ்ரவேலுக்குத் தீங்கு செய்ய எண்ணிய ஒரு ராஜாவுக்குச் சேவையாற்றினான். ராஜாவுக்கு உதவியாக பிலேயாம் கழுதையின் மேல் ஏறிச் சென்றபோது, ​​“கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்” அது பிலேயாமிடம் பேசியது (எண் 22:28). கழுதையின் பேச்சு, கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறக்கும் விதத்தின் ஒரு பகுதியாக இருந்தது (v. 31), உடனடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து, தேவஜனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவனைத் தடுத்தது.

ஒரு ரயில்வே பபூன்? பேசும் கழுதை? ஏன் கூடாது? தேவன் இந்த அற்புதமான விலங்குகளை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அவர் உங்களையும் என்னையும் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமேயில்லை. அவரையே நோக்கிப்பார்த்து அவருடைய பலத்தை நாடினால், நாம் நினைத்ததை விட அதிகமாகச் சாதிக்க முடியும்.