வகை  |  odb

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

தாழ்மையை தரித்தல்

“ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “அண்டர்கவர் பாஸ்” என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார்.  மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.

 

நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (வ.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

பாவ அறிக்கை

“அதை மறைக்க கூடாது” என வின்ஸ்டனுக்குத் தெரியும். எனவே அவன் ஒரு தந்திரமான யுக்தியைக் கையாண்டான்.  "தந்திரமாக மறைப்பது" என்று அதைப் பற்றிக் கூறுவோம். வின்ஸ்டன் தூக்கி எறியப்பட்ட, கவனிக்கப்படாத காலணிகளை கண்டால், சாதாரணமாக அந்தத் திசையில் வளைந்து, அதை எடுத்துவிட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக நடந்து செல்வான். கதவைத் தாண்டும்வரை தன்னை எவரும் பார்க்கவில்லை என்று அறிந்துகொண்டால், வின்ஸ்டன் உங்கள் காலணிகளை எடுத்துக்கொண்டு மெதுவாக செல்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

 

 சில சமயங்களில் "தேவன் நம் கடந்தகால பாவத்தை கண்டுகொள்ள மாட்டார்" என நாமும் தந்திரமாக நடக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. அவர் கவனிக்கமாட்டார் என்ற நினைவில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். இது பெரிய விஷயமில்லை, "அது" எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நம்மை நாமே பகுத்தறிகிறோம். ஆனால், வின்ஸ்டனைப் போன்றதான இந்நடவடிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, நம் பாவத்தின் அவமானத்தின் காரணமாக நாம் அப்பாவங்களை மறைக்க முயற்சிக்கலாம் (ஆதியாகமம் 3:10) அல்லது எதுவுமே நடக்காதது போல் நடிக்கலாம். ஆனால் வேதாகமம் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நம்மை அழைக்கிறது: தேவனின் இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் அவரிடம் ஓட சொல்கிறது. நீதிமொழிகள் 28:13 நமக்குச் சொல்லுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று

 

நம் பாவத்தை யாரும் கவனிக்கவில்லையென்று, அதை நாம் செய்யாதது போல் தந்திரமாக நடக்க முயற்சிக்க வேண்டியதில்லை. நம் தவறுகளைப்

பற்றிய உண்மையை நம்பகமான நண்பரான தேவனிடம் சொல்லும்போது, இரகசியப் பாவச்சுமையிலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை பெறுவோம் (1 யோவான் 1:9).

சரியான ஒன்றைச் செய்வது

“ஜேசன்” என்ற கைதியின் கடிதம் என்னையும் என் மனைவியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக நாய்க்குட்டிகளை, "வளர்ப்பு" நாய்களாக பயிற்றுவிக்கிறோம். அத்தகைய ஒரு நாய்க்குட்டி அடுத்த பயிற்சி கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. அது சிறை கைதிககளால் பயிற்றுவிக்கப்பட்ட நாயாகும். ஜேசன் எங்களிடம் எழுதிய இக்கடிதம், அவரது கடந்த காலத்தின் வேதனையை வெளிப்படுத்தியது. பின்னர் அவன் கூறினான், "ஸ்னிக்கர்ஸ் நான் பயிற்றுவித்த பதினேழாவது சிறந்த நாய். அது என்னை நிமிர்ந்து பார்த்த போது, இறுதியில் நான் சரியான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது போல் உணர்ந்தேன்".

 

மனவருத்தம் என்பது ஜேசனுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். யூதாவின் ராஜாவான மனாசேக்கு அனைத்தும் ஏராளம் இருந்தது. 2நாளாகமம் 33, அவனுடைய சில அட்டூழியங்களை கோடிட்டுக் காட்டுகிறது: புறமத தேவர்களுக்கு வெளிப்படையாகவே பாலியல் சார்ந்த பலிபீடங்களைக் கட்டுதல் (வ. 3), சூனியம் செய்தல் மற்றும் தனது சொந்தக் குழந்தைகளை பலியிடுதல் (வ. 6). அவன் இந்த மோசமான பாதையில் முழு தேசத்தையும் வழிநடத்தினான் (வச. 9).

 

“கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்” (வ.10. இறுதியில், தேவன் அவனது கவனத்தை திருப்பினார். பாபிலோனியர்கள் படையெடுத்து, ”அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்”(வ.11), ”தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்” (வ.12) தேவன் அவனுக்கு செவிசாய்த்தார், அவனை மீண்டும் ராஜாவாக மாற்றினார். மனாசே புறமத நடைமுறைகளுக்குப் பதிலாக, உண்மையான ஒரே தேவ வழிபாட்டைத் துவங்கினான் (வ. 15-16).

 

உங்கள் மனவருத்தங்கள் உங்களை  மேற்கொண்டு விடும் போல் தோன்றுகிறதா? இப்போதும் தாமதமாகவில்லை. மனந்திரும்புதலின் தாழ்மையான ஜெபம்‌ செய்யுங்கள். தேவன் அதைக் கேட்பார்.