“ஜேசன்” என்ற கைதியின் கடிதம் என்னையும் என் மனைவியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக நாய்க்குட்டிகளை, “வளர்ப்பு” நாய்களாக பயிற்றுவிக்கிறோம். அத்தகைய ஓர் நாய்க்குட்டி அடுத்த பயிற்சி கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. அது சிறை கைதிககளால் பயிற்றுவிக்கப்பட்ட நாயாகும். ஜேசன் எங்களிடம் எழுதிய இக்கடிதம், அவரது கடந்த காலத்தின் வேதனையை வெளிப்படுத்தியது. பின்னர் அவர் கூறினார், “ஸ்னிக்கர்ஸ் நான் பயிற்றுவித்த பதினேழாவது சிறந்த நாய். அது என்னை நிமிர்ந்து பார்த்தபோது, இறுதியில் நான் சரியான ஏதோ ஒரு காரியத்தைச் செய்ததுபோல் உணர்ந்தேன்”.

மனவருத்தம் என்பது ஜேசனுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். யூதாவின் ராஜாவான மனாசேக்கு அனைத்தும் ஏராளம் இருந்தது. 2 நாளாகமம் 33, அவருடைய சில அட்டூழியங்களை கோடிட்டுக் காட்டுகிறது: புறமத தேவர்களுக்கு வெளிப்படையாகவே பாலியல் சார்ந்த பலிபீடங்களைக் கட்டுதல் (வ. 3), சூனியம் செய்தல் மற்றும் தனது சொந்தக் குழந்தைகளை பலியிடுதல் (வ. 6). அவர் இந்த மோசமான பாதையில் முழு தேசத்தையும் வழிநடத்தினார் (வச. 9).

“கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்” (வ.10). இறுதியில், தேவன் அவரது கவனத்தை திருப்பினார். பாபிலோனியர்கள் படையெடுத்து, ”அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவரைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்” (வ.11). ”தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்” (வ.12). தேவன் அவனுக்கு செவிசாய்த்தார், அவனை மீண்டும் ராஜாவாக மாற்றினார். மனாசே புறமத நடைமுறைகளுக்குப் பதிலாக, உண்மையான ஒரே தேவ வழிபாட்டைத் துவக்கினார் (வ. 15-16).

உங்கள் மனவருத்தங்கள் உங்களை  மேற்கொண்டுவிடும்போல் தோன்றுகிறதா? இப்போதும் தாமதமாகவில்லை. மனந்திரும்புதலின் தாழ்மையான ஜெபம்‌ செய்யுங்கள். தேவன் அதைக் கேட்பார்.