வகை  |  odb

இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலித்தல்

ஆப்கானிஸ்தானில் ஒரு கடுமையான சுற்றுப்பயணத்தின் பின், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஸ்காட் மனமுடைந்து போனார். "நான் ஒரு இருண்ட இடத்திலிருந்தேன்" என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் "இயேசுவைக் கண்டடைந்து,  அவரைப் பின்தொடர ஆரம்பிக்கையில்" அவரது வாழ்க்கை தீவிரமாக மாறியது. இப்போது அவர் கிறிஸ்துவின் அன்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறார், குறிப்பாக அவர் ஆயுதப்படைகளில் ஊனமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்வான இன்விக்டஸ் கேம்ஸில்  தன்னுடன் போட்டியிடும் வீரர்களுடன் அதைச் செய்கிறார்.

ஸ்காட்டைப் பொறுத்தவரை, வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் ஆராதனை பாடல்களைக் கேட்பது ஆகியவை விளையாட்டுகளுக்குச் செல்வதற்கு முன் அவரை நிலைப்படுத்துகிறது. பின்னர், அங்குப் போட்டியிடும் சக வீரர்களுக்கு “இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கவும், இரக்கம், மென்மை மற்றும் கருணை காட்டவும்” தேவன் அவருக்கு உதவுகிறார்.

கலாத்தியாவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய ஆவியின் கனிகளில் சிலவற்றை ஸ்காட் இங்கே குறிப்பிடுகிறார். அவர்கள் கள்ள போதகர்களின் தாக்கத்தின் கீழ் போராடினர், எனவே பவுல் அவர்களை "ஆவியினால் வழிநடத்தப்பட்டு" (கலாத்தியர் 5:18) தேவனுக்கும் அவருடைய கிருபைக்கும் உண்மையாக இருக்கும்படி ஊக்குவிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஆவியின் கனியாகிய  "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (வ. 22-23) ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.

தேவனின் ஆவியானவர் நம்முள் வசிப்பதால், நாமும் ஆவியின் நற்குணத்தினாலும் அன்பினாலும் நிறைந்திடுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களிடம் கனிவும் கருணையும் காட்டுவோம்.

தேவன் அருளிய பாதுகாப்பு

நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மைல்கள் மிதிவண்டியில், எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகளில் ஒட்டுகிறோம். இந்த அனுபவத்தை மேம்படுத்த, எங்கள் மிதிவண்டிகளுடன்  சில பாகங்களை இணைத்துள்ளோம். ஜெனிபரின் மிதிவண்டியில் ஒரு முன் விளக்கு, ஒரு பின் விளக்கு, ஒரு ஓட்ட அளவி மற்றும் ஒரு சிறிய பூட்டு  ஆகியவை உள்ளன. என்னுடையதில்  தண்ணீர் புட்டி வைக்கும் பகுதியுண்டு. உண்மையில், இத்தகைய உதிரி இணைப்பு பாகங்களின்றி ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் வெற்றிகரமாகச் சவாரி செய்து, போதுமான தூரத்தை எளிதாகக் கடக்க முடியும். இவைகள் உதவிகரமானவை ஆனால் அவசியமானவையல்ல.

எபேசியர் புத்தகத்தில், அப்போஸ்தலன் பவுல் மற்றுமொரு துணை பாகங்களைப் பற்றி எழுதுகிறார்; ஆனால் இவை அத்தியாவசியமானவை. இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெற்றிகரமாக வாழ்ந்திட,  இவற்றை "தரித்துக்கொள்ளுங்கள்" என்றார். நம் வாழ்க்கை எளிதான பயணங்கள் அல்ல. நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம், அதில் நாம் "பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க" (6:11) வேண்டும், எனவே நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.

வேத ஞானம் இன்றி, நாம் தவறானதை ஏற்றுக்கொள்ள நடத்தப்படலாம். இயேசு தமது "சத்தியத்தின்படி" வாழ்ந்திட நமக்கு உதவாவிடில், நாம் பொய்களுக்கு அடிபணிவோம் (வ.14). "சுவிசேஷம்" இன்றி நமக்கு "சமாதானம்" இல்லை (வ.15). "விசுவாசம்" நம்மைக் காக்காவிடில், நாம் சந்தேகத்திற்கு ஆளாவோம் (வ.16). நமது "இரட்சிப்பு" மற்றும் பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக நன்றாய் வாழும்படி நம்மை நங்கூரமிடுகிறாா் (வ.17). இதுவே நமது கவசம்.

வாழ்க்கையின் உண்மையான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும்  பாதையில் நாம் பயணிப்பது எவ்வளவு அவசியம். பாதையில் எதிரிடும் சவால்களுக்குக் கிறிஸ்து நம்மை ஆயத்தப்படுத்தும்போது; தேவன் அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை நாம் “தரித்துக்கொள்ளுகையில்” நாம் அதனை நிறைவேற்றுகிறோம்.

 

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

ஆரோக்கியமான இருதயம்

மனித இருதயம் ஒரு அற்புதமான உறுப்பு. இந்த முஷ்டி அளவிலான உறுப்பு 7 முதல் 15 அவுன்ஸ் வரை எடை கொண்டது. தினமும் இது 100,000 முறை துடிக்கிறது மற்றும் 2,000 கேலன் இரத்தத்தை நம் உடலில் உள்ள 60,000 மைல் இரத்த நாளங்கள் வழியாக செலுத்துகிறது! இத்தகைய ஒரு திட்டமிட்டப் பணி மற்றும் அதிக பணிச்சுமையுடன், இதய ஆரோக்கியம் முழு உடலின் நல்வாழ்வுக்கு ஏன் மையமாக உள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது. நமது இருதயத்தின் நிலையும், ஆரோக்கியத்தின் தரமும் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர மருத்துவ அறிவியல் நம்மை ஊக்குவிக்கிறது.

மருத்துவ விஞ்ஞானம் நமது உடல் இதயங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகப் பேசுகையில், தேவன் மற்றொரு வகையான “இருதயம்" பற்றி இன்னும் அதிக அதிகாரத்துடன் பேசுகிறார். அவர் நம் வாழ்க்கையின் மனரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமாய் ஆவிக்குரிய மையத்தைக் குறித்து பேசுகிறார். இருதயம் வாழ்க்கையின் மையச் செயலாக்க உறுப்பாக என்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டும்: “எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள் 4:23). நம் இதயங்களைப் பாதுகாப்பது நம் பேச்சுக்கு உதவும் (வச. 24), கண்களால் பகுத்தறியும்படி நம்மை வற்புறுத்தும் (வச. 25), மேலும் நம் கால்களுக்குச் சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் (வச. 27) உதவுகிறது. வயது அல்லது வாழ்க்கையின் நிலை எதுவாக இருந்தாலும், நம் இருதயங்கள் பாதுகாக்கப்படும்போது, நம் உயிர்கள் பாதுகாக்கப்படும், நம் உறவுகள் பாதுகாக்கப்படும், மற்றும் தேவன் கனப்படுத்தப்படுகிறார்.