பரலோகில் மீண்டும் இணைதல்
எனது தாயாரின் அஞ்சலி செய்தியை எழுதுகையில், "மரித்தார்" என்ற வார்த்தை ஏதோ இறுதியானதாய் எனக்குத் தோன்றவே அதனை மாற்றி "இயேசுவின் கரங்களுக்குள் அழைக்கப்பட்டார்” என்றெழுதினேன். என் தாயாரில்லாத குடும்ப புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்து சிலநேரம் வருந்தினேன். சமீபத்தில், மரித்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களைத் தத்ரூபமாய் வரையும் ஒரு ஓவியரைக் கண்டேன். புகைப்படங்களின் உதவியால் குடும்ப படத்தில் மரித்த நபர்களை இணைப்பதில் அவர் வல்லவர். எனதருகே என் தாயார் இருந்த அவ்வோவியத்தை கண்ணீர் மல்க ரசித்தேன். அவருடைய அந்தக் கலை, தேவன் வாக்களித்த பரலோக இணைப்பை எனக்கு நினைவூட்டியது.
இயேசுவின் விசுவாசிகள் "மற்றவர்களைப்போலத் துக்கிக்க" தேவையில்லை என்று உறுதியளிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13). "இயேசுவானவர் மரித்த பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்."(வ.14). பவுல், இயேசுவின் இரண்டாம் வருகையையும், இயேசுவோடு விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு இணைவதையும் அறிவிக்கிறார் (வ.17).
இயேசுவை நம்பி மறித்த நம் அன்பானவர்கள் மரிக்கையில், பரலோகில் ஒன்றினைவோமென்பது தேவனின் வாக்குத்தத்தமாகும். நாம் மரிக்குமட்டுமோ அல்லது இயேசு வருமட்டுமோ, உயிர்த்த நமது ராஜாவுடன் வாழப்போகும் வாக்கு பண்ணப்பட்ட எதிர்காலத்தைக் குறித்த உறுதியான நிச்சயத்தோடு, நமது மரணத்தையும் எதிர்கொள்வோம்.
அன்பில் வேரூன்றியது
நான் அந்தப் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அடைந்தபோது தனிமையையும், பயத்தையும் அதிகம் உணர்ந்தேன். ஏனெனில், அங்கே எனது தாயாரை தனியொருவளாகப் பராமரிக்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தையும், பரிச்சயமான சூழலையும் விட்டு சுமார் 1200 கி.மீ தூரம் கடந்து வந்துள்ளேன். ஆனால் நான் எனது சாமான்களை அவ்விடத்தில் இறக்குமுன்பே, மணி என்ற அந்த மனிதர் ஒரு பெரிய புன்னகையுடன் எனக்கு உதவ முன்வந்தார். நாங்கள் ஆறாவது தளத்திற்கு வந்தடைந்த போது, அவருடைய சிகிச்சைக்கு உறுதுணையாயிருந்த, அவரது மனைவி பாக்கியாவைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். நாங்கள் தேவனுக்குள் ஒருவரோடொருவர் சார்ந்திருந்ததால், இந்தத் தம்பதியினர் எனக்கு ஒரு குடும்பமாகவே சீக்கிரம் மாறிவிட்டனர். நாங்கள் ஒன்றாகவே சிரித்தோம், பகிர்ந்தோம், அழுதோம், ஜெபித்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்திருந்தாலும், தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்ததால், அன்பில் வேரூன்றப்பட்டு ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள முடிந்தது.
தனது மாமியாகிய நகோமியை பராமரிக்க ரூத் தீர்மானித்ததால், தனக்குப் பாதுகாப்பாயிருந்த பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறினாள். "அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்;" (ரூத் 2:3). அந்த வயலின் எஜமானான போவாஸிடம் அவன் வேலைக்காரன் வந்து, "காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்” (வ.7). நகோமிக்காகத் தான் அக்கறைப்பட்டது போலவே, தனக்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் உள்ள பாதுகாப்பான இடத்தை ரூத் கண்டுகொண்டாள் (வ. 8–9). போவாஸின் பெருந்தன்மையைக் கொண்டு ரூத்தையும், நகோமியையும் தேவன் போஷித்தார் (வ.14–16).
வாழ்வின் சூழல்கள் நம்மை நமது சௌகரியமான சூழலைத் தாண்டிக் கொண்டு செல்லும். நாம் தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைந்திருந்தால், நம்மை அன்பில் வேரூன்றச்செய்து, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கும்படி செய்வார்.
ஒளிரும் பரதேசிகள்
2020ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சான் டியாகோ கடற்கரையின் ஒளிரும் அலைகளின் மீது, மிதவைதட்டின் உதவியோடு வீரர்கள் உலா வந்தனர். இந்த ஒளிரும் அலைகள், பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய உயிரிகளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அதற்கு கிரேக்கத்தில், “பரதேசி” அல்லது “சுற்றித் திரிபவன்” என்று பொருள். இந்த உயிரிகள் பகல் நேரத்தில், சிவப்பு அலைகளை உருவாக்கி அவற்றை இரசாயன ஆற்றலாக மாற்றும் சூரிய ஒளியை உள்வாங்குகிறது. இரவில் அவை நீல நிற மின்சார ஒளியை உருவாக்கும்.
பரலோகவாசிகளாகிய கிறிஸ்தவர்கள், பூமியில் வாழும் நாட்களில் இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும், பரதேசிகளாகவும் சுற்றித் திரிபவர்களாகவுமே வாழுகிறார்கள். தேவன் நமக்கு வகுத்திருக்கிற திட்டத்தை கடினமான சூழ்நிலைகள் தொந்தரவுசெய்யும்போது, உலகத்தின் ஒளியான இயேசுவைப் போல இருளில் பிரகாசிக்கும் ஒளியாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தேவனோடு இருக்கிற உறவு மற்றும் அவர் மூலமாய் நமக்கு உண்டாகும் நீதியைவிட மேன்மையானது வேறு இல்லை (பிலிப்பியர் 3:8-9). இயேசுவை அறிகிற அறிவும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும், பாடுகளின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்கிறது (வச. 10-16).
தேவகுமாரனோடு நாம் அனுதினமும் நேரம் செலவிடும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கும் வகையில் சவால்களை சந்திக்கும் சத்தியத்தை அறிகிற அறிவிற்கு நேராய் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (வச. 17-21). நாம் பரதீசு சேரும் நாள்வரை, தேவனுடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காய் நாம் செயல்படமுடியும்.
உக்கிராணத்துவ வாய்ப்பு
விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எலியட் கடற்கரையோரமாய் நடந்துகொண்டிருக்கையில், அங்கே ஆமை முட்டைகள் கூடையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். அதை வைத்திருந்த நபர், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு தன்னார்வ குழுவினர்களைக் கூட்டிக்கொண்டு, கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கவனமாய் சேகரிப்பதாகச் சொன்னார். முட்டையிலிருந்து வெளிவரும் கடல் ஆமைக் குஞ்சுகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தலினால் உயரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. “என்னதான் நாங்கள் முயற்சி செய்தாலும்,” ஆயிரத்தில் ஒரு ஆமைதான் முதிர்ச்சி பருவத்தை எட்டுகிறது என்றும் அவர் சொன்னார். ஆனால் அதற்காக அவர் சோர்ந்துபோகவில்லை. அந்த ஆமை இனத்தைப் பாதுகாக்கும் அவரது அயராத முயற்சி, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. தற்போது நான் கடல் ஆமையின் படம் போட்ட ஒரு பேட்ஜ் அணிந்திருக்கிறேன். அது தேவனுடைய படைப்புகளை பாதுகாக்கவேண்டிய என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது.
தேவன் உலகத்தை உண்டாக்கியபோது, அனைத்து உயிரினங்களும் அதில் வாழுவதற்கேதுவான ஒன்றாகவே அதை உண்டாக்கினார் (ஆதி. 1:20-25). தமது சாயலாக மனிதனை உண்டாக்கியபோது, “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்” (வச. 26) என்று தன் நோக்கத்தை பிரதிபலித்தார். தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளை நிர்வகிக்கக்கூடிய ஓர் உக்கிராணத்துவப் பொறுப்பை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.
வளைந்துகொடுக்கும் நம்பிக்கையின் தசைகள்
மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பயணத்தின் போது, கரடியின் (மரங்களில் வாழும் ஒரு மெதுவாக நகரும் வெப்பமண்டல அமெரிக்க பாலூட்டி) அருகில் ஓய்வெடுக்க நிறுத்தினேன். அந்த உயிரினம் தலைகீழாக தொங்கியது. அது முற்றிலும் அமைதியாக இருப்பது போல் இருந்தது. நான் பெருமூச்சு விட்டேன். எனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, நான் அமைதியாய் இருந்தேன். எதையாவது நான் செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். என்னுடைய இயலாமையை எண்ணி வேதனையடைந்த நான், நான் மிகவும் பலவீனமானவன் என்கிற எண்ணத்தை நிறுத்த ஏங்கினேன். ஆனால் கரடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு கையை நீட்டி, அருகிலுள்ள கிளையைப் பிடித்து, அதில் மீண்டும் அசையாமல் நின்றிருப்பதை நான் கவனித்தேன். அசையாமல் இருப்பதற்கு ஒரு வலிமை தேவை. அங்கேயே நான் நின்றிருப்பதற்கோ அல்லது மெல்லமாய் நகர்வதற்கோ ஒரு அபார வலிமை தேவை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் தேவனை நம்புவதற்கு, எனக்கு அமானுஷ்ய சக்தி தேவைப்படுகிறது.
சங்கீதம் 46 இல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 7). சங்கீதக்காரன், இந்த உண்மையை உறுதியுடன் மீண்டும் கூறுகிறார் (வச. 11).
அசையாமல் நின்றிருக்கும் கரடியைப் போலவே, நமது அன்றாட சாகசங்களுக்கு மெதுவான நடைகள் மற்றும் நீடிய பொருமையும் சாத்தியமற்றது போல் தோன்றும். நாம் தேவனின் மாறாத தன்மையை நம்பியிருக்கும் போது, அவர் நமக்கு எது சரியென்று தீர்மானிக்கும் அவருடைய பலத்தை சார்ந்து இருக்க முடியும்.
நாம் துன்பங்களைத் தொடர்ந்து போராடினாலும் அல்லது காத்திருப்புடன் போராடினாலும், தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நாம் பெலனுள்ளவர்களாய் உணராவிட்டாலும், அவர் நம் நம்பிக்கையின் தசைகளை வளைக்க உதவுவார்.
பரலோக திருவிருந்து
ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11இன் ஈகிள் லூனார் மாட்யூல் முதன்முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியபோது, விண்வெளி பயணிகள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தங்கள் விமானத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தனர். விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் கொண்டு வர அனுமதி பெற்றார். அங்ஙனம் அவர் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார். வேதத்தைப் படித்த பிறகு, சந்திரனில் உண்ட முதல் உணவாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பார். அவர் “எங்கள் தேவாலயம் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் திராட்சை ரசத்தை ஊற்றினேன்; நிலவின் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பில் திராட்சரசம் மெதுவாகவும் அழகாகவும் கோப்பையின் பக்கமாக மிதந்தது" என்று எழுதுகிறார். ஆல்ட்ரின் இந்த பரலோக திருவிருந்தை அனுபவித்தபோது, அவரது நடவடிக்கைகள், சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது இரண்டாவது வருகையின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது.
அப்போஸ்தலனாகிய பவுல், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” (1 கொரிந்தியர் 11:23) தம் சீஷர்களுடன் இயேசு எப்படி அமர்ந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ளும்படி நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்து விரைவில் பிட்கப்படப்போகிற தன்னுடைய சரீரத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார் (வச.24). அவர் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நமது மன்னிப்பையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திய “புதிய உடன்படிக்கையின்” அடையாளமாக திராட்சை ரசத்தை அறிவித்தார் (வச.25). எப்பொழுதும், எங்கும் நாம் திருவிருந்தை எடுத்துக்கொண்டாலும், இயேசுவின் பலியின் உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகையின் மீதான நம்பிக்கையையும் நாம் அறிவிக்கிறோம் (வச. 26).
நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உயிர்த்தெழுந்தவரும் மீண்டும் வரப்போகிறவருமான ஒரே மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டாடலாம்.
தேவனின் நிறைவான ஆசீர்வாதம்
திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.
உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).
நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
நம்பிக்கையின் வானவில்லைக் கண்டறிதல்
அக்டோபர் விடுமுறையின் போது, நாள்பட்ட வலியுடன் போராடிய நான் சில நாட்கள் அறையிலேயே ஓய்வெடுக்க வேண்டியதாயிருந்தது. வானத்தின் மேகமூட்டம் போல் என் மனநிலை மாறியது. கடைசியாக என் கணவருடன் அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்த்து மகிழ நான் கிளம்பியபோது, சாம்பல் மேகங்கள் எங்கள் கண்களை மறைத்தன. ஆனாலும், நிழல் படிந்த மலைப்பகுதிகளையும் மந்தமான அடிவானத்தின் சில புகைப்படங்களையும் நான் எடுத்தேன்.
இரவு முழுவதும் மழை பெய்ததால் நான் ஏமாற்றமடைந்து, நான் எடுத்த டிஜிட்டல் புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் என் கணவரிடம் கேமராவைக் கொடுத்தேன். “ஒரு வானவில்!” நான் எடுத்த புகைப்படத்தில், ஒரு மாலை நேர வானவில் பதிவாகியிருந்தது. சோர்வுற்றிருந்த என்னுடைய ஆவியை புதுப்பிக்க தேவன் அருளிய இந்த நம்பிக்கையின் அடையாளத்தை நான் எப்படி தவறவிட்டேன் (ஆதியாகமம் 9:13-16).
உடல் அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் பெரும்பாலும் விரக்தியின் ஆழத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். தேவனுடைய பிரசன்னத்திற்காகவும் அவருடைய அளவற்ற வல்லமையையும் நினைவுகூர்ந்து நம் ஆவி புத்துணர்வு அடைய நாம் ஏங்குகிறோம் (சங்கீதம் 42:1-3). நாம் எவ்வளவு இக்கட்டான சூழலுக்குள் கடந்துசென்றாலும், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரிடத்தில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம் (வச. 4-6).
மோசமான அணுகுமுறைகள் அல்லது கடினமான சூழ்நிலைகள் நம் பார்வையை மங்கச் செய்யும் போது, அவரை நோக்கிக் கூப்பிடவும், வேதத்தை வாசிக்கவும், அவரையே முழுமையாய் நம்பவும் தேவன் நம்மை அழைக்கிறார் (வச. 7-11). நாம் தேவனைத் தேடும்போது, இருள் சூழ்ந்த நேரத்தில் வளைந்து நிற்கும் நம்பிக்கையின் வானவில்லை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவிசெய்வார்.
புயலை தகர்க்கும் நம்பிக்கை
2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28).
வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம்.
உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.