2014 ஆம் ஆண்டில், உயிரியலாளர்கள் பிலிப்பைன்ஸில் ஒரு ஜோடி ஆரஞ்சு பிக்மி கடல் குதிரைகளை கைப்பற்றினர். அவர்கள் கடல்வாழ் உயிரினங்களையும், ஆரஞ்சு பவள கடல் விசிறி என்னும் ஒரு உயிரினத்தையும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சார்ந்துகொண்டனர் அழைத்துச் சென்றனர். பிக்மி கடல் குதிரைகள் தங்கள் பெற்றோரின் நிறத்துடனோ அல்லது அவற்றின் சுற்றுச்சூழலுடனும் ஒன்றிணைகிறதா என்று கண்டறிய விரும்பினர். பிக்மி கடல் குதிரைகள் மந்தமான பழுப்பு நிறக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, விஞ்ஞானிகள் ஒரு ஊதா நிற பவளக் கடல் விசிறி உயிரினத்தை தொட்டியில் விட்டனர். ஆரஞ்சு நிற பெற்றோரின் குழந்தைகள், ஊதா நிற கடல் விசிறிக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டது. அவைகளுக்கு இயல்பாகவே இருக்கும் பெலவீனமான சுபாவத்தை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறமாற்றிக்கொள்ளும் தேவன் கொடுத்த திறனைக்கொண்டு மாற்றியமைத்துக்கொண்டது. 

சூழ்நிலையோடு ஒத்துப்போவது என்பது அவசியப்படக்கூடிய ஒரு சுபாவம். இருப்பினும், இரட்சிப்பைப் பெறவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் உலகில் தனித்து நிற்கவும் தேவன் நம் அனைவருக்கம் அழைப்புக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை கனப்படுத்தும்படிக்கு கிறிஸ்தவ விசுவாசிகளை அப்போஸ்தலர் பவுல் வலியுறுத்துகிறார். நம்முடைய சரீரத்தை “ஜீவபலியாக” (ரோமர் 12:1) செலுத்துவதின் மூலம் அவருக்கு நாம் ஆராதனை செய்யமுடியும். பாவத்தால் நம்முடைய சரீரம் பெலவீனமடைந்ததால், நம்முடைய சிந்தையை புதுப்பித்து, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” தேவனை மறுதலித்து பாவத்தை மகிமைப்படுத்தாமல் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆவியானவர் எடுத்துக்கொள்கிறார் (வச. 2). 

இவ்வுலகத்திற்கு ஒத்த வாழ்க்கை வாழுவது என்பது வேதத்திற்கு புறம்பாய் வாழும் வாழ்க்கையாகும். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நாம் இயேசுவைப்போல பார்க்கவும் ஜீவிக்கவும் முடியும்.