எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

உண்மையான தாழ்மை, உண்மையில் பெரியது

எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர்       புரிந்துகொண்டார்.

இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின்  நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.

ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின்           சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல்  தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.

நினைத்துப் பார்க்க முடியாத மன்னிப்பு

ரேவன்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் எஞ்சியிரு ந்த மக்களிடையே இந்த ஜெபம் மிகவும் குறுகிப் போய்விட்டது என்று விடுதலையாளர்கள் கண்டார்கள், அங்கு ஏறத்தாள 50,000 பெண்களை நாசிக் படையினர் கொன்று விட்டனர். “ஓ, தேவனே, நல்லெண்ணம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் மட்டுமல்ல, கெட்ட எண்ணம் கொண்டவர்களையும் நினைத்தருளும். அவர்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள வேதனைகளை நினையாதிரும். நாங்கள் கனிகொடுக்க உதவிய இத்துன்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், எங்கள் கனிகளை நினைத்தருளும் – எங்களின் நட்புணர்வு, எங்களின் உண்மை, தாழ்மை, தைரியம், பெருந்தன்மை, மேன்மை பொருந்திய இருதயம் ஆகியவற்றை இவற்றின் வழியாக நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களை நீர் நியாயம் தீர்க்க வரும்போது, நாங்கள் இவர்களின் மூலம் பெற்ற கனிகள் இவர்களின் மன்னிப்பிற்கு காரணமாயிருப்பதாக” என்று ஜெபித்தனர்.

இந்த ஜெபத்தை எழுதிய, தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இப்பெண்ணுக்குள் இருந்த பயத்தையும், வேதனையையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவளுக்குள் இருந்து விவரிக்க முடியாத கிருபை நிறைந்த வார்த்தைகள் எப்படி வெளியாக முடிகிறது என்பதையும் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவள் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்தாள், அவள் தன்னைக் கொடுமை படுத்தியவர்களும் தேவனின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினாள்.

இந்த ஜெபம் கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்தை பிரதிபலிக்கின்றது. தவறான குற்றச் சாட்டுகளை இயேசுவின் மீது திணித்து, கேலி செய்து, அடித்து, ஜனங்களுக்கு முன்பாக அவமானப் படுத்தி, “வேறே இரண்டு குற்றவாளிகளோடு………. அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” (லூக். 23:32). கோரமான ஒரு மரச் சிலுவையில், உடல் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் தொங்கியவராய், மூச்சு விட திணறிய வேளையில், தன்னை துன்பப் படுத்தியவகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கலாம், அவர்களைப் பழிவாங்க அல்லது நியாயத்தீர்ப்பு வழங்க தீர்மானித்திருக்கலாம். ஆனால் இயேசு மனித குணங்களையெல்லாவற்றிற்கும் மாறாக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (வச. 34).

தேவன் அருளிய மன்னிப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் இயேசு அதனை நமக்குத் தந்தார், அவருடைய தெய்வீக கிருபை யாராலும் தரமுடியாத மன்னிப்பை இலவசமாகக் கொட்டுகிறது.

தண்ணீரின் வழியே

“த ஃப்ரீ ஸ்டேட் ஆஃப் ஜோன்ஸ்” (The Free State of Jones ) என்ற திரைப் படம், நியூட்டன் நைட் என்பவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடத்திய உள் நாட்டு யுத்தத்தைக் குறித்து விவரிக்கின்றது. ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த சிலரும், சில அடிமைகளும் யுனியன் இராணுவத்திற்கு உதவியாயிருந்தனர், பின்னர் யுத்தம் முடிந்தபோது, அடிமைகளின் எஜமானர்களையும் எதிர்த்தனர். அநேகர் நைட்டைத் தங்களுக்குத் தலைவராகக் கொண்டனர், ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த நைட்டின் உயிரை இரு அடிமைகள் காப்பாற்றினர், அவர்கள், அவரை யாரும் எளிதில் செல்ல முடியாத, அடர்ந்த காட்டுக்குள் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர், ஐக்கிய ஆட்சியாளரின் படைகளிடமிருந்து தப்பிச் சென்ற போது, அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தினர், இந்த அடிமைகள் மட்டும் அவரைக் கைவிட்டிருந்தால், அவர் மரித்திருப்பார்.

யூதாவின் ஜனங்கள் காயமுற்றவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், உதவியற்றவர்களாய் எதிரிகளைச் சந்தித்து வந்தனர். இஸ்ரவேலரை அசீரியர்கள் மேற்கொண்டனர். ஒரு நாள் அவர்கள் (யூதா) எதிரிகளால் மேற்கொள்ளப்படுவர் என ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார், பாபிலோனியர்கள் அவர்களை மேற்கொண்டனர். யூதாவுக்கு உதவி செய்யவும், அவர்களைக் கைவிடாமல், மீட்கும்படியாகவும் ஒரு தேவன் தேவை. தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பெற்ற போது அவர்களின் நம்பிக்கை அவர்களை எப்படி முன்னோக்கிச் செல்ல தூண்டியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார். ”பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசா.43:5) என்கின்றார் தேவன். எத்தனை பெரிய ஆபத்துக்களை அவர்கள் சந்திக்க நேரிட்டாலும், எவ்வளவு வேதனைகளை அவர்கள் சகித்தாலும் தேவன் அவர்களோடு இருக்கின்றார். அவர்கள் “தண்ணீர்களைக் கடக்கும் போது” அவர்களோடு இருப்பார், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச் செல்வார் (வச. 2), அவர் “அக்கினியில் நடக்கும் போது” கூடவே நடந்து வருவார், சுட்டெரிக்கும் நெருப்பிலும் அவர்களுக்கு உதவுகின்றார் (வச. 2).

தேவன் தன்னுடைய பிள்ளைகளின் கூடவே இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றார், வழிநடத்துகின்றார், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, வாழ்விலும், மரணத்திலும் கைவிடுவதில்லை என்பதாக வேதாகமம் முழுவதிலும் காண்கின்றோம். நீ கடினமான இடத்தில் இருந்தாலும் தேவன் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை தண்ணீரைக் கடக்கச் செய்வார்.

நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்கள்

ஒரு வாலிபனான டேனியல், தனக்குப் போதிய பணம் இல்லை என்ற பயத்தோடு, தன்னுடைய இளம்வயதிலேயே தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் குறியாக இருந்தான். ஒரு பிரசித்திப் பெற்ற கணினி தொழிற்சாலையில் பணியைத்துவக்கி, அதில் படிப் படியாக உயர்ந்தான், மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்தான். மிகப் பெரிய வங்கிக் கணக்கு, உயர் ரக கார், கோடிக் கணக்கான பெருமதியுள்ள வீடு என அவன் விரும்பியதையெல்லாம் வாங்கினான். ஆயினும் அவன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக காணப்பட்டான். “நான் மிகவும் ஆவலோடும் திருப்தியற்றவனாகவும் காணப்படுகிறேன்” என்றான் டேனியல். “உண்மையில் செல்வம் வாழ்வை மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது” என்றான். குவித்து வைக்கப் பட்டுள்ள பணத்தினால் நட்பையும், சமுதாய உறவையும், மகிழ்ச்சியையும் தரமுடியவில்லை, அதிக இருதய வேதனையைத் தான் கொண்டு வருகின்றது என்றான்.

சிலர் தங்களுடைய ஆற்றலையெல்லாம் செலவிட்டு, அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பதன் மூலம் தங்களின் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு முட்டாள் தனமான செயல். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என வேதாகமம் கூறுகின்றது (பிர.5:10). சிலர் தங்கள் எலும்புகள் தேயும் வரை வேலை செய்கின்றார்கள். அவர்கள் போராடி, தள்ளி, மற்றவர்களின் உடைமைகளோடு ஒப்பிட்டு, ஒரு பொருளாதார அந்தஸ்தை அடைய தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார நிலையை அடை ந்தும் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. பிரசங்கி கூறுவதைப் போன்று, “இதுவும் மாயையே” (வச. 10).

உண்மை என்னவெனின், தேவனைத் தவிர வேறெந்த காரியத்தையும் நிறைவேற்றும்படி நாம் உழைப்பதெல்லாம் வீண். நம்முடைய திறமைகளையெல்லாம் பயன் படுத்தி, கடினமாக உழைத்து, இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லது செய்யும்படி வேதாகமம் நம்மை அறிவுறுத்துகின்றது. நாம் எவ்வளவு தான் பொருட்களைச் சேர்த்தாலும், அது ஒரு போதும் நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்ய மாட்டாது. இயேசு ஒருவராலேயே உண்மையான பரிபூரண வாழ்வைத் தரமுடியும் (யோவா. 10:10) – அது அன்பின் உறவுகளினால் ஏற்படும் உண்மையான நிறைவு!

இரட்சிப்பைக் காணல்

தன்னுடைய ஐம்பத்திமூன்றாம் வயதில், சோனியா தன்னுடைய தொழிலையும், தன் தேசத்தையும் விட்டு விட்டு, அடைக்கலம் தேடி, வேறு இடத்திற்கு பிரயாணம் பண்ணும் ஒரு கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ளும்படி தள்ளப்பட்டாள். ஒரு தீவிரவாதக் கூட்டம் அவளுடைய உறவினரான ஒருவரைக் கொலை செய்ததோடு, அவளுடைய பதினேழு வயது மகனை, அவர்களின் கூட்டத்தில் சேரும்படி கட்டாயப் படுத்தியது. சோனியாவிற்கு அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழிதோன்றவில்லை.  “தேவனே, நான் எது தேவையோ அதைச் செய்வேன்,…..எதுவானாலும் செய்வேன், ஆனால் நானும் என்னுடைய மகனும் பட்டினியால் சாகக் கூடாது,……..அவன் அங்கே ஒரு சாக்கினுள் கட்டுண்டவனாகவோ அல்லது ஓர் ஓடையில் தூக்கி வீசப்பட்டவனாகவோ சாவதை விட, இங்கே கஷ்டப் பட்டாலும் அதையே விரும்புகின்றேன்” என்று ஜெபித்தாள்.

சோனியா மற்றும் அவளுடைய மகனுக்கும், அவளைப் போன்று அநியாயத்தையும் பேரிழப்பையும் சந்திக்கின்ற அநேகருக்கும் வேதாகமம் என்ன கூறுகின்றது? இயேசுவின் வருகையைக் குறித்து யோவான் ஸ்நானகன் அறிவித்தபோதே, நமக்கும், சோனியாவிற்கும், இந்த உலகிற்கும் நற்செய்தியைக் கூறினார், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப் படுத்துங்கள்” என்று அறிவித்தார் (லூக். 3:3). மேலும் அவர் இயேசு வரும் போது, அவர் மிகுந்த வல்லமையுள்ளவராய் நம்மை முற்றிலும் விடுவிப்பார் என்றார், இந்த விடுதலையை வேதாகமம் இரட்சிப்பு எனக் குறிப்பிடுகின்றது.

இரட்சிப்பு என்பதன் மூலம் நம்முடைய பாவம் நிறைந்த இருதயத்திற்கு சுகம் கொடுப்பதோடு, ஒரு நாள் இவ்வுலகின் அத்தனை கொடுமைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுப்பார். அனைத்து சரித்திரமும் மாறும், ஒவ்வொரு மனித அமைப்பும் மாற்றம் பெறும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் தரும் மாற்றம் வரும். “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (வச. 5) என்று யோவான் கூறினார்.

நாம் எத்தகைய கொடுமைகளைச் சந்தித்தாலும், கிறிஸ்துவின் சிலுவையும் உயிர்த்தெழுதலும், நாம் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம் என உறுதியளிக்கின்றன. ஒரு நாள், அவர் தரும் பூரண விடுதலையை நாம் அநுபவிப்போம்.

கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டோம்

எழுத்தாளரான மார்டின் லேய்ர்ட் வெளியில் நடை பயிற்சி செய்யும் போது, ஒரு மனிதன் நான்கு கெரி நீல டெரியர் வகை நாய்களைக் கொண்டு வருவதை அடிக்கடி பார்ப்பார். அவற்றில் மூன்று நாய்கள் திறந்த வெளியில் ஓடிவிடும். ஆனால் ஒன்று மட்டும் அதன் எஜமானனைச் சுற்றி சுற்றியே வருவதையும் கண்டார். ஒரு நாள் லேய்ர்ட் அதன் எஜமானனிடம், அந்த நாயின் வினோத நடத்தையின் காரணத்தைக் கேட்டார். அவர், அது பாதுகாப்பிற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய், அது தன்னுடைய வாழ் நாளில் அநேக நாட்களை கூண்டிற்குள்ளேயே கழித்தது. இப்பொழுது டெரியர் கூண்டிற்குள் இருப்பதைப் போன்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து சுற்றி சுற்றியே வருகிறது என்றார்.

 தேவன் நம்மை மீட்டுக்கொள்ளும் மட்டும் நாம் நம்பிக்கையற்றவர்களாய், பாவத்தில் சிக்கிக் கிடந்தோம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. சங்கீதக்காரன் எதிரிகளால் சூழப்பட்டப்போது, “மரணக் கண்ணிகள்” என்மேல் விழுந்தது, “மரணக் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” என்கிறார் (சங். 18:4-5). எதிரிகளால் சூழப்பட்டவராக, நெருக்கப்பட்டவராக, உதவிக்கேட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றார் (வச. 6). பூமியை அதிரச் செய்யும் வல்லமையோடு, “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கி விட்டார் (வச. 16).

இக்காரியங்களை தேவன் நமக்கும் செய்கிறார். அவர் சங்கிலிகளை உடைத்து நம்மை அடைத்து வைத்திருக்கும் கூண்டிலிருந்து விடுவிக்கிறார். அவர்  விடுவித்து, சுமந்து, “விசாலமான இடத்திலே என்னைக்கொண்டு வந்து” (வச. 19) நிறுத்துகிறார். அப்படியானால், நாம் இன்னமும் சிறைக்குள் அடைபட்டுள்ளோம் என்ற எண்ணத்தோடு, சிறிய வட்டத்திற்குள்ளாகவே  ஓடிக்கொண்டிருப்பது எத்தனை வருந்தக்கூடியது. அவருடைய வல்லமை நம்முடைய பயம், அவமானம், அடிமைத்தனத்தின் கட்டுகளை முறிக்கிறது. அந்த மரணக் கட்டுகளிலிருந்து தேவன் நம்மை விடுவித்தார், நாம் விடுதலையோடு ஓடுவோம்.

குழந்தைகளை தேவனிடம் வழி நடத்துதல்

பெற்றோர் தங்களுடைய குழ ந்தைகளுக்கு, தங்களுடைய மதத்தை உண்மையானது என்று  கற்றுக் கொடுப்பது அறநெறியாகாது எனவும், பெற்றோர் தங்களின் நம்பிக்கையை தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுப்பது குழந்தைகளை தவறான வழியில் நடத்துவதற்குச் சமம் எனவும் வெளிப்படையாக பேசக்கூடிய நாத்திகன் ஒருவன் கூறினான். இவை தீவிரவாத கருத்துக்களாக இருந்தபடியால், நான் சில பெற்றோரை அணுகி, அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் தங்களின் நம்பிக்கையை தங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் நம்மில் அநேகர் நம்முடைய குழந்தைகளின் மீது, அரசியல், ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பற்றிய நம்முடைய கருத்துகளை திணிக்கின்றோம், ஏனெனில் நம்மில் சிலர், ஏதோ காரணங்களுக்காகத் தேவனைப் பற்றிய நம்பிக்கையை வேறு விதமாகத் திரிக்கின்றார்கள்.

இதற்கு மாறாக, பவுல் தீமோத்தேயுவைப்பற்றி எழுதும் போது, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே, உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவன்” (2 தீமோ.3:15). தீமோத்தேயு வளர்ந்து  வாலிபனான போது, தன்னுடைய சுய முயற்சியினால் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. ஆனால் அவனுடைய தாயார் அவனுடைய இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பினார்கள், அவனும் தான் கற்றுக் கொண்டவற்றை, உறுதியாகத் தொடர்ந்தான் (வ.14) தேவனே நம்முடைய வாழ்வும், உண்மையான ஞானத்தின் உறைவிடமாகவும் இருப்பாராயின், நம்முடைய குடும்பங்களில் தேவனுடைய அன்பை மென்மையாக வளரச் செய்வது நமது முக்கிய கடமையாகும்.

நம்முடைய குழந்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டெலிவிஷன் காட்சிகள், திரைப்படங்கள், இசை, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் ஆகிய இவைகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  நம்பிக்கையைக் குறித்த அநேக ஊகங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவை நம் குழந்தைகளின் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் அநுபவித்தை அழகிய கிருபை, நம்முடைய குழந்தைகளையும் அந்த தேவனிடம் வழி நடத்தும்படி நம்மைக் கட்டாயப் படுத்துகின்றது.

தேவன் காத்திருந்தார்

டென்னிஸ் லெவர்டோவ், ஒரு புகழ் பெற்ற கவிஞராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அவளுடைய பன்னிரண்டாம் வயதில், புகழ் பெற்ற கவிஞரான டி.எஸ். எலியெட் என்பவருக்குத் தன்னுடைய பாடல்களை புத்திசாலித்தனமாக தபாலில் அனுப்பி வைத்தாள். பின்பு, தனக்கு ஒரு பதில் வருமெனக் காத்திருந்தாள். என்ன ஆச்சரியம்! எலியட் தன் கைப்பட எழுதிய இரண்டு பக்க ஊக்கமிகு வார்த்தைகளை அனுப்பினார். அவளுடைய  நீரோடையும் நீலக்கற்களும் (The Stream and the Sapphire) என்ற பாடல்களின் தொகுப்பிற்கு எழுதிய முகவுரையில் “கடவுள் நம்பிக்கையற்றிருந்த என் வாழ்வு எப்படி கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் கடந்து வந்தது” என்ற வழியை இப்பாடல்கள் காட்டுகிறது என்று எழுதியிருந்தாள். பிற்காலத்தில் அவள் எழுதிய பாடலான, (“Annunciation”) மரியாளுக்கு தேவதூதனின் வெளிப்பாடு பற்றிய பாடல், மரியாள் தன்னை தேவனுக்கு அர்ப்பணித்ததை விளக்குகின்றது. பரிசுத்த ஆவியானவர், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும் படி, மரியாளைக் கட்டாயப் படுத்தி, தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பவில்லை. அவருடைய நோக்கமெல்லாம், மரியாள் விருப்பத்தோடு, கிறிஸ்துவை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. “தேவன் காத்திருந்தார்” என்ற இரு வார்த்தைகளும் அந்தப் பாடலின் மையமாக மிளிர்ந்தன.

மேரியின் கதையின் மூலம், லெவர்டோவ் தன்னுடைய வாழ்க்கையை உணர்ந்தார், தேவன் அவளுக்காக காத்திருக்கின்றார், அவளை நேசிக்கும்படி ஆவலாயிருக்கிறார் என்பதை உணர்ந்தாள். தேவன் எதையுமே அவளிடம் கட்டாயப்படுத்தவில்லை. அவர் காத்திருந்தார். இந்த உண்மையை ஏசாயாவும் விளக்குகின்றார். இஸ்ரவேலர் மீது தன்னுடைய அன்பை பொழியும் படி, தேவன் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் ஆயத்தமாக நிற்கின்றார், என்கிறார். “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (30:18). தன்னுடைய ஜனங்களின் மீது இரக்கத்தைக் கொட்டும்படி ஆயத்தமாயிருக்கின்றார், ஆனாலும் அவர்கள் முழுமனதோடு, தான் கொடுக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென காத்திருக்கின்றார் (வ.19).

நம்மைப் படைத்தவர், இவ்வுலகத்தின் இரட்சகர், நாம் அவரை வரவேற்க வேண்டுமென காத்திருக்கிறார். எளிதாக நம்மை மேற்கொள்ள வல்ல தேவன், பொறுமையோடு காத்திருத்தலையே செயல் படுத்துகின்றார். பரிசுத்த தேவன், நமக்காக காத்திருக்கிறார்.

தந்தையின் ஆசிர்வாதம்

எங்களுடைய ஆலயத்தில் அநேக மக்கள், தங்களுடைய தகப்பனாருடன் சரியான உறவில் இல்லாத படியால், ஓர் அன்பான தந்தையாக நின்று, அவர்களை ஆசிர்வதிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். தங்களுடைய பிள்ளைகளிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்த்தல், பிள்ளைகளை அன்போடு சந்திப்பதில்லை, அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தூரத்தில் வைத்துவிடல் போன்ற பல காரணங்களுக்காக மன்னிப்பை கேட்பதன் மூலம் ஆசிர்வதித்தல், மேலும் பிள்ளைகளைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைதல், அவர்களை ரசித்தல், அவர்கள்மேல் மிகவும் அன்பு செலுத்துவது, போன்ற பல காரணங்கள் மூலம் அவர்களை ஆசிர்வதித்தேன். நான் இவ்வாறு ஆசிர்வாதங்களைப் பகிர்ந்து கொண்ட போது, என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நானும் என் தந்தையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெற வேண்டியுள்ளது, என்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தேன்.

நம்முடைய உலகத் தந்தையைக் குறித்து, நாம் வைத்திருக்கும் உருக்குலைந்த வடிவத்தை மாற்றி, மறுபடியும் புதிப்பித்து தருகின்றவர் நம்முடைய தந்தையாம் தேவன் என்று வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய பரம தந்தை, நம்மை “தம்முடைய பிள்ளைகளாக” ஏற்றுக் கொண்டதினால், அவர் நம்மேல் பாராட்டின “மிகப் பெரிய அன்பு” விளங்குகின்றது (1 யோவா. 3:1) நாம் தேவனுடைய மகன் அல்லது மகள் என்பதே, இந்த நிலையற்ற, பயம் நிறைந்த உலகில், நாம் வாழுவதற்கு தேவன் தந்துள்ள அடிப்படை ஆதாரம். “நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப் படுகின்றோம், ஆனால்,” இனி எவ்விதமாயிருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை’’ என்று யோவான் கூறுகின்றார் (வச. 2). நம்முடைய பரமத் தந்தை நம்மை நேசித்து, நம்முடைய தேவைகளையெல்லாம் சந்தித்து வருகின்றார், அதை அவர் நிறுத்துவதேயில்லை என்ற நம்பிக்கையே, ஒவ்வொருநாளும் வரும் சவால்களைச் சந்திக்க பெலன் தருகின்றது. அவர் கூறியவற்றில் நாம் நிலைத்திருக்கும் போது, நாமும் அவரைப் போலாவோமென்று யோவான் எழுதுகின்றார் (வச. 2).

நம்முடைய எதிர்பார்ப்புகள், காயங்கள், தோல்விகளின் மத்தியில், நம்முடைய நல்ல தந்தை, குறைவற்ற அன்பையும் நம் மீது பொழிகின்றார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை வலியுறுத்துகின்றார், ஏனெனில், அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கின்றார்.