ஜீவனைக் கண்டடைதல்
“நீ ஒரு உதவாக்கரை. உன்னால் குடும்பத்திற்கு அவமானம்தான்,” என்று ரவியின் தந்தை அவனைப் பார்த்து கூறிய வார்த்தைகள் அவன் இருதயத்தை ஊடுருவிக்குத்தியது. அவனுடைய உடன் பிறப்போடு ஒப்பிடும்பொழுது, அவனை இழிவாகவே கருதினார். அவன் விளையாட்டுத் துறையில் சிறந்திருக்க முயற்சித்து முன்னேறிய பொழுதும், தோல்வியுற்றவனாகவே உணர்ந்தான். “என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நான் முற்றிலும் தோல்வியுற்றவனா? ஏதாவது ஒரு வழியில் வலியில்லாமல், ஜீவனை விட முடியுமா?” என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான். இவ்வெண்ணங்கள் அவனை தொடர்ந்து தொந்தரவு செய்தன. ஆனாலும் அதைக் குறித்து அவன் யாரிடமும் பேசவில்லை. ஏனென்றால் அவன் கலாச்சாரத்தில் அப்படி பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இல்லை. “தனிப்பட்ட வேதனையை உன்னுடனேயே வைத்துக்கொள்; சிதைந்து கொண்டிருக்கும் உன் வாழ்வை நீயாகவே தூக்கி நிறுத்து,” என்றுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆகவே ரவி தனியாகவே போராடினான். பின்பு அவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து தோல்வியடைந்து, மருத்துவமனையில் குணமடைந்து கொண்டிருந்த பொழுது, அவனைச் சந்திக்க வந்த ஒருவர், ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து யோவான் 14ஆம் அதிகாரத்தை அவன் தாயாரிடத்தில் வாசிக்கக் கொடுத்தார். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (வச. 19) என அவன் தாயார் வாசித்தார். அதைக் கேட்டபொழுது “இதுதான் என்னுடைய ஒரே நம்பிக்கையாக இருக்கக்கூடும். ஜீவனின் அதிபதியினால் வகுக்கப்பட்ட ஒரு புதிய ஜீவவழி” என எண்ணி, “இயேசுவே நீர் கூறியது போல, நீரே ஜீவன் அளிக்கும் ஜீவ ஊற்றாக இருப்பின், எனக்கு அந்த ஜீவனைத் தாரும்” என் ஜெபித்தான்.
விரக்தியான தருணங்களை நம் வாழ்வில் நாம் காணக்கூடும். ஆனால் ரவியை போல நாமும் “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிற” இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோம் (வச. 6). வளமிக்க திருப்திகரமான வாழ்வை நமக்களிக்க தேவன் வாஞ்சிக்கிறார்.
நண்பனால் ஏற்பட்ட காயங்கள்
சார்ல்ஸ் லோயரி (Charles Lowery) தன் முதுகின் கீழ் பகுதியிலுள்ள வலியைக் குறித்து தன்னுடைய நண்பனிடம் முறையிட்டான். அனுதாபத்தை எதிர்பார்த்த அவனுக்கு அதற்கு மாறாக நேர்மையான ஒரு பதில் கிடைத்தது. “உன் பிரச்சனை முதுகு வலியாக எனக்கு தோன்றவில்லை. உன்னுடைய பிரச்சனை உன் வயிறு. ஏனெனில் அது பெரிதாக இருப்பதால், உன் பின் பகுதியில் அழுத்தம் தருகிறது,” என்று அவன் நண்பன் கூறினான்.
புண்படக்கூடிய மனநிலைக்கு தான் செல்லாதபடி தன்னைக் காத்துக் கொண்டதாக ரெவ் (Rev) பத்திரிக்கையில் தன்னுடைய பகுதியில் இதை சார்லஸ் பகிர்ந்து கொண்டார். பின்பு, எடையை குறைத்ததும் அவருடைய வலி பறந்தோடியது. “மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:5-6) என்பதை சார்லஸ் அறிந்துகொண்டார்.
பிரச்சனை என்னவெனில், நாம் அநேகந்தரம் விமர்சனங்களால் தப்பித்துக் கொள்வதைக் காட்டிலும், துதியினால் வீழ்ச்சியடைவதையே விரும்புகிறோம். ஏனென்றால் உண்மை வலிக்கும். “நான்” என்னும் சுயத்தை அது காயப்படுத்துகிறது, சங்கடப்படுத்துகிறது. ஆனால் ஒரு நல் மாற்றத்தை முன்வைக்கிறது.
உண்மையான நண்பர்கள் நம்மை காயப்படுத்தி சந்தோஷமடைய மாட்டார்கள். மாறாக, நம்மை ஏமாற்றக் கூடியவர்களாய் இல்லாமல் மிகுந்த அன்பு செலுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். நம் குறையை அறிந்தும், அதனை ஏற்று, மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் காரியத்தை கூட அவர்கள் தைரியத்தோடும், அன்போடும் சுட்டிக் காண்பிப்பார்கள். நாம் கேட்க நினைப்பதை மட்டுமில்லாமல், நாம் கேட்க வேண்டிய காரியங்களையும் நமக்கு தெரிவிப்பார்கள்.
அப்படிப்பட்ட தோழமைகளை சாலமோன் கனப்படுத்துவதை நீதிமொழிகள் புத்தகத்திலே காணலாம். இயேசு இதையும் தாண்டி நம்மை உணர்த்துவதோடு, நாம் எவ்வளவாய் நேசிக்கப்படுகிறோம் என்பதையும் அறிந்துக்கொள்ள, அவரை நிராகரித்து நாம் ஏற்படுத்திய காயங்களை அவரே சுமந்து கொண்டார்.
ஒரு பாதுகாப்பான இடம்
ஜப்பானிய இளைஞன் ஒருவனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பயம். மற்றவர்களை சந்திக்காமல் இருக்க பகல் முழுவதும் தூங்கி, இரவு முழுவதும் டிவி பார்த்து கொண்டிருந்தான்; அவன் ஒரு ‘ஹிக்கிகோமோரி’ (hikikomori). அதாவது, நவீன காலத் துறவி. இந்தப் பிரச்சனை அவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய பொழுது ஆரம்பித்ததுதான். சமுதாயத்திற்கு ஏற்றவன் அல்ல என்ற எண்ணம் மேலோங்கியது. இறுதியில் அவன் தன் குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களிடமும் முழுமையாகத் தொடர்பை துண்டித்துக் கொண்டான். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வர டோக்கியோவில் (Tokyo) உள்ள ஐபாஷோ (Ibasho) என்னும் வாலிபர் சங்கத்திலே சேர்ந்து உதவி பெற்றுக்கொண்டான். ‘ஐபாஷோ’ என்றால் பாதுகாப்பான இடம் என்று அர்த்தம். அதாவது, சமுதாயத்திற்குள், உடைந்துபோன மக்கள் தங்களை மீண்டுமாய் சமுதாயத்தில் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பான ஓர் இடம்.
நம்முடைய சபையை ‘ஐபாஷோ’ போலவும், அல்லது அதற்கும் மேலாகவும் எண்ணிக் கொண்டால் எப்படி இருக்கும்? சந்தேகமின்றி உடைந்து போன மக்களைக் கொண்ட சமுதாயம் தான் நம் சமுதாயம். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் பொழுது, அவர்களுடைய பழைய வாழ்வு, சமுதாயத்திற்கு எதிரானதும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுமாயிருந்தது என்று குறிப்பிடுகிறார் (1 கொரி. 6:9-10). ஆனால் கிறிஸ்துவுக்குள் அவர்கள் புது சிருஷ்டிகளாக்கப்பட்டு முழுமையானார்கள். விடுவிக்கப்பட்ட இவர்களைப் பார்த்து பவுல், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பொறுமையாயிருக்கவும், தயவு பாராட்டவும், பொறாமை, பெருமை மற்றும் கோபமின்றி இருக்கவும் உற்சாகப்படுத்தினார் (13:4-7).
எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையோ, மனமுறிவுகளையோ எதிர்கொண்டாலும், தேவனுடைய அன்பை அறிந்து கொண்டு, அநுபவிக்கும் ஐபோஷா போன்ற இடமாக சபை இருக்க வேண்டும். காயப்பட்டிருக்கிற இந்த உலக மக்கள், கிறிஸ்துவின் மனதுருக்கத்தை அவரை பின்பற்றுகிற அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார்களாக.
கலோரிகளுக்கேற்ற மதிப்புதானா?
எனது தேசமாகிய சிங்கப்பூரில் கிடைக்கும் தட்டையான ரொட்டி வகையை சேர்ந்த முட்டை பரோட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், 57 கிலோ எடையுள்ள ஒருவன் 8 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடங்கள் ஒடினால் 240 கலோரிகளை எரிக்கலாம் என்பதை படித்துக் கலக்கமடைந்தேன். ஏனென்றால், அது ஒரே ஒரு முட்டை பரோட்டாவுக்குச் சமம்.
நான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அந்த எண்களெல்லாம் எனக்கு புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. என்னையறியாமல், இவ்வளவு கலோரிகளுக்கு ஏற்ற மதிப்புடையதா இந்த உணவு, என கேட்க…
யார் அவர்களுக்கு கூறுவார்கள்?
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சமாதானம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு தீவிலிருந்த கிரு ஒனோடா என்ற ஜப்பானிய லெப்டினன்ட் யுத்தம் நின்றதை அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. யுத்தம் நின்றுவிட்டது என்று அச்சடிக்கப்பட்ட கைப்பிரதிகள் அவன் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. அவன் இருக்குமிடத்திலிருந்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்ற கட்டளையை அவன் 1945ல் பெற்றான். ஆகவே ஒனோடோ, போடப்பட்ட கைப்பிரதிகள் எதிராளியின் தந்திரமான பொய்ப்பிரச்சாரம் என்று அந்தக் கைப்பிரதி கூறின செய்தியை நிராகரித்து விட்டான். யுத்தம் முடிந்து ஏறக்குறைய…
மனித இனம் (ஓட்டம்)
அலாரம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகருக்கு எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது, ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
மனித இனம் (ஓட்டம்)
அலார்ம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகர் எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
அன்பு செலுத்தக் கற்றுக் கொள்ளுதல்
அன்பு, “உலகம் சுழல்வதை விட” அதிகம் செய்கிறது என்று ஓர் பழைய பாடல் சொல்கிறது. அன்பு நம்மை அதிகமாய் குறைபட்டுக் கொள்ளச் செய்யும். “பிறர் நம்மை பாராட்டாமல் இருக்கும் பொழுது நாம் ஏன் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்? அன்பு செலுத்திவிட்டு பின் நான் ஏன் என்னையே புண்படுத்திக் கொள்ள வேண்டும்?” ஆனால் பவுல் அப்போஸ்தன் மிகவும் தெளிவான, எளிதான அன்பை விடாது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.…
தேவனே உதவி செய்யும்!
என் சிநேகிதி தான் தாயாகப்போவதை அறிவித்தபொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள நாட்களை எண்ணினோம். பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டது. என் இதயம் நொறுங்கியது. எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. அவர் நமது பிதா; நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்கிறார்.
தேவன் அற்புதங்களைச் செய்வதில் வல்லவர் என்பது எனக்குத் தெரியும். யவீருவின் மகளுக்கு ஜீவனை மீட்டுத்தந்தார் (லூக். 8:49–55).…