அன்பின் பூட்டு
பாரிஸில் உள்ள பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தின் கற்பனைக்குறிய ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் காதலர்களின் ஆயிரக்கணக்கான பெயரின் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த கொண்டிப்பூட்டுகளைக் கண்டு ஆச்சரியத்துடன் நின்றேன். சீன் ஆற்றின் நடப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பாலம் முழுவதும், ஒரு ஜோடியின் “என்றென்றைக்கும்” என்ற உறுதிமொழியினால் காதலர்களின் அடையாளமான இந்தப் பூட்டுகளால் மூழ்கியிருந்தது. 2014ம் ஆண்டு இந்தப் பூட்டுகள் அதிர்ச்சியூட்டும் 50 டன் எடை கொண்டு, பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், இந்தப் பூட்டுக்களை அகற்றவேண்டியிருந்தது.
அன்பு பாதுகாப்பானது என்ற உறுதி வேண்டி மனிதன் எவ்வளவாய் ஏங்குகிறான் என்பதை இந்த ஏராளமான காதல் பூட்டுகள் சுட்டிக்காட்டுகிறது. உன்னதப்பாட்டு, பழைய ஏற்பாட்டில் ஒரு புத்தகம், இரண்டு காதலர்களுக்கிடையே ஒரு உரையாடலைச் சித்தரிக்கிறது. அந்தப் பெண் பாதுகாப்பான அன்பிற்காக ஏங்குவதை “நீர் உம்மடைய இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்” (உன்ன. 8:6) என்று கேட்கிறாள்.
உன்னதப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற நீடித்த காதல் அன்புக்கான ஏக்கம், புதிய ஏற்பாட்டில் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம் (1:3) என்ற சத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. மனித அன்பு சிக்கலானதாயிருக்கும் மற்றும் காதல் பூட்டுகளை பாலத்திலிருந்து அகற்றிவிட முடியும் ஆனால் நம்மில் வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவி தேவனின் முடிவில்லாத அன்பையும் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைக்காக அவர் வைத்திருக்கிற நிரந்திர உறுதியான அன்பையும் நிரூபிக்கிறது.
தேவனால் பெயரிடப்படல்
சுட்டி, சீனி, குண்டு. இவை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் சில “புனை பெயர்கள்”. அநேகமான இப்பெயர்கள் அவர்களின் குணாதிசயம், சரீரத் தோற்றம், ஆகியவற்றை விளக்குவதாக இருக்கும், இவை தங்களின் பிரியத்தைக் காட்டும் பெயர்கள்.
புனைபெயர்கள் குழந்தைகளுக்கு மட்டும் வைக்கப் படுவதில்லை, இவற்றின் பயனை நாம் வேதாகமத்திலும் காண்கின்றோம். எடுத்துக் காட்டாக, யோவான், யாக்கோபு என்ற இரு சீஷர்களுக்கும் இயேசு “இடிமுழக்க மக்கள்” (மாற்.3:17) என்று புனை பெயரிட்டார். தனக்குத் தானே புனைபெயரிடும் அரிய நிகழ்வையும் வேதாகமத்தில் காணலாம். நகோமி என்ற பெயர் கொண்ட ஒரு பெண், தன்னை “மாரா” என்று அழைக்குமாறு கூறுகின்றாள். அதற்கு “கசப்பு” என்று அர்த்தம் (ரூத். 1:20), ஏனெனில், அவளுடைய கணவனும், இரு மகன்களும் மரித்துப் போயினர். தேவன் அவளுடைய வாழ்வைக் கசப்பாக்கினார் என்பதாக அவள் உணர்ந்தாள் (வ.21).
நகோமி தனக்கு கொடுத்த புதிய புனைபெயர் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை, ஏனெனில் அவளை நிலைகுலையச் செய்த அந்த இழப்புகளோடு அவளுடைய கதை முடிந்து போகவில்லை. அவளுடைய துயரத்தின் மத்தியில், தேவன் அவளுக்கு ஓர் அன்பான மருமகள், ரூத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவள், மறுமணம் செய்து, ஒரு மகனைப் பெற்றெடுத்ததின் மூலம், நகோமிக்கு திரும்பவும் ஒரு குடும்பத்தை உருவாக்கினாள்.
நாமும் சில வேளைகளில் நமக்கு, “தோற்றவன்”, “நேசிக்கப்படாதவன்” போன்ற கசப்பான புனைபெயர்களை, நாம் அநுபவிக்கும் கஷ்டங்களையோ அல்லது நாம் இழைத்த தவறுகளையோ தழுவி, கொடுக்கும்படி முனைவோம். ஆனால், இந்தப் பெயர்கள், நம்முடைய கதையின் முடிவு ஆகிவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்துள்ள பெயரான “சிநேகிக்கப்பட்டவன்” (ரோம.9:25) என்ற பெயரால், நம்முடைய கசப்பான பெயரை மாற்றுவோம். நம் வாழ்வின் மிக சவாலான வேளைகளில், தேவன் தரும் வழியை எதிர்நோக்கி இருப்போம்.
காட்டிக்கொடுக்கப் படல்
2019 ஆம் ஆண்டு, லியானார்ட் டா வின்சியின் ஐநூறாவது மறைவு தினத்தை நினைவு கூரும் வகையில், உலகளவில் கலை கண்காட்சி நடத்தப்பட்டது. அவர் வரைந்த அநேக படங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், முழுவதுமாக வரையப்பட்ட ஐந்து படங்கள் தான், டா வின்சிக்கு உலகளவில் பெருமை சேர்த்தது, அதில் கடைசி இராப்போஜனம் படமும் அடங்கும்.
இந்த நுணுக்கமான படத்தில், இயேசு தன்னுடைய சீடர்களோடு கடைசி உணவைச் சாப்பிட்ட காட்சி, யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி காட்டப்பட்டுள்ளது. இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” (யோவா.13:21) என்று கூறிய போது, சீஷர்கள் குழப்பமடைந்த காட்சியை இந்த படம் சித்தரிக்கின்றது. கலக்கமடைந்த சீஷர்கள், காட்டிக் கொடுப்பவன் யார் என்று தங்களுக்குள்ளே விவாதித்தனர், அச்சமயம், யூதாஸ் தன்னந்தனியாக அந்த இரவில், தன்னுடைய போதகரும், நண்பருமான இயேசுவின் நடவடிக்கைகளைக் குறித்து, அதிகாரிகளுக்குச் சொல்லும்படி வெளியேறினான்.
காட்டிக் கொடுத்தான். யூதாஸ் இழைத்த துரோகத்தின் வேதனையை இயேசுவின் வார்த்தைகளில் காணலாம். “என்னுடனே அப்பம் புசிக்கிறவன், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” (வ.18) என்றார். ஒரு நண்பன், தன்னோடு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவன், அந்த நெருங்கிய உறவை, இயேசுவுக்கு தீங்கு இழைக்க பயன்படுத்திக் கொண்டான்.
ஒரு நண்பனின் துரோகத்தை நாம் அனைவருமே அநுபவித்திருக்கலாம். இத்தகைய வேதனையின் போது, நாம் எவ்வாறு செயல் படுவோம்? இயேசு தனக்கு துரோகம் செய்தவன், தன்னோடு அப்பம் புசித்தவன் (யோவா.13:18) என்பதைக் குறிப்பிட, சங்கீதம் 41:9 ல் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறுகின்றார். நமக்கு நம்பிக்கை தருகின்றார் தன்னுடைய உற்ற நண்பன் செய்த வஞ்சகச் செயலால், வேதனையுற்ற தாவீது, தேவன் தன் மீது பிரியமாய் இருக்கிறார், என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் நிலை நிறுத்துவார் என்பதால் ஆறுதல் அடைகின்றார் (சங்.41:11-12).
நண்பர்கள் நம்மை ஏமாற்றும் போது, தேவனுடைய அன்பு நம்மைத் தாங்குகின்றது, அவருடைய வல்லமையான பிரசன்னம் நம்மோடிருந்து, அழிவுக்குள்ளாக்கும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ள நமக்கு பெலனளிக்கும்.
ஓரத்தில் காணப்பட்ட போது
ஒரு மோட்டார் வாகன செயல்முறை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பிரமிக்கச் செய்யும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த நான், ஓடுவதற்கு தயாராக இருந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பார்த்த நான், 3 குழந்தைகள், அருகில் இருந்த மரத்தில் ஏறியிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர்களால் இக்கூட்டத்தினரின் முன்பாக நின்று கொண்டு, இந்த செயலைப் பார்க்க முடியவில்லை.
உயரமான இடத்திலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளை கவனித்த எனக்கு, லூக்கா கண்டுபிடித்த செல்வந்தனான ஆயக்காரன் சகேயு (லூக்.19:2) நினைவுக்கு வந்தான். இந்த வரி வசூலிப்பவர்களை, இஸ்ரவேலர், ரோம அரசுக்காக வேலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த ஜனங்களிடமிருந்தே அதிக வரியை வசூலித்து, தங்களின் வருமானத்தையும் பெருக்கிக் கொள்பவர்களாகவும் பார்க்கின்றார்கள். எனவே, சகேயு தன்னுடைய சொந்த சமுதாயத்தினராலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான்.
இயேசு எரிகோவிற்குச் சென்ற போது, சகேயு அவரைப் பார்க்க ஆவலாயிருந்தான். ஆனால் ஜனக் கூட்டத்தினிடையே அவரைப் பார்க்க கூடாதவனாக இருந்தான். ஒரு வேளை விரக்தியையும் தனிமையையும் உணர்ந்த அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, இயேசுவை எப்படியாகிலும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் (வ.3-4). அங்கே, அந்த கூட்டத்தினருக்கு வெளியே, இயேசு அவனைத் தேடி, அவனுடைய விருந்தினராக, அவனுடைய வீட்டிற்கு தான் வர விரும்புவதைத் தெரிவிக்கின்றார் (வ.5).
இவ்வுலகத்தில், “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (வ.9-10) என்பதை சகேயுவின் கதை நமக்கு வெளிப்படுத்துகின்றது, இயேசு அவனுக்கு தன்னுடைய நட்பையும், இலவச ஈவாகிய இரட்சிப்பையும் கொடுத்தார். நம்முடைய சமுதாயத்தின் ஓரத்தில் இருப்பதாக நாம் உணர்ந்தாலும், “கூட்டத்தின் கடைசிக்குத்” தள்ளப்பட்டாலும், தேவன் அங்கேயும் நம்மைக் காண்கின்றார் என்ற உறுதியோடு இருப்போம்.
கிரகணம்
கண்களைப் பாதுகாக்கும் உபகரணத்தோடும், வீட்டில் செய்த சில தின்பண்டங்களோடும் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய இடத்திற்குச் சென்றேன். பல மில்லியன் மக்களோடு நானும் என்னுடைய குடும்பத்தினரும் மிக அரிதாக நடைபெறக் கூடிய முழு சூரிய கிரகணத்தைப் பார்த்தோம், சூரியனின் முழுபகுதியையும் நிலவு மறைத்தது.
கோடை காலத்தின், ஒரு பிரகாசமான மதிய வேளையில், இந்த கிரகணத்தின் காரணமாக இருள் சூழ்ந்தது. நமக்கு இந்த கிரகணம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவும் படைப்புகளின் மீது தேவன் கொண்டுள்ள வல்லமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது (சங். 135:6-7). ஆனால் சரித்திரம் முழுமையையும் பார்ப்போமாகில், பகல் வேளையில் இருள் சூழ்வதை பயத்தோடு, ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதுகின்றனர் (யாத். 10:21; மத். 27:45), இதனை, கெட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு ஓர் அடையாளமாகக் கருதுகின்றனர்.
இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த போது, ஆமோஸ் தீர்க்கதரிசியும் இருளை குறித்து இவ்வாறு தான் எண்ணியிருப்பார். தேவனை அவர்கள் மறந்தால் அழிவு அவர்கள் மேல் வரும் என வடதேசத்தைக் குறித்து ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார், தேவன் இதற்கு அடையாளமாக, “அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப் பகலிலே தேசத்தை அந்தகாரப் படுத்துவேன்” (ஆமோ. 8:9) என்றார்.
ஆனால் தேவனுடைய மேலான நோக்கமும், விருப்பமும் என்னவெனில், எல்லாவற்றையும் சரிப்படுத்துவதே, ஜனங்கள் அடிமைகளாக இரு ந்தாலும், ஒரு நாள், தேவன் அவர்களை மீட்டு, எருசலேமுக்குக் கொண்டு வருவார், “ அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்துவேன்” (9:12) என்கின்றார்.
இஸ்ரவேலரைப் போன்று, நம்முடைய வாழ்வு, மிகஇருண்ட வேளையில் இருந்தாலும், எல்லா ஜனத்திற்கும் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் படி தேவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு ஆறுதளிப்பதாக உள்ளது (அப். 15:14-18).
திரையிட்டு மறைக்கப்பட்டது
என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.
முழுமையாக வெளிப்படுத்தல்
“மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற அமெரிக்க நடிகையான எமிலி பிளன்ட்டினுடைய அழகிய குரலை திரைப் பட ரசிகர்கள் கேட்டிருப்பர். இவளுடைய திருமண வாழ்வின் நான்காவது ஆண்டில், வியத்தகு வகையில் அவளுடைய கணவன் அவளின் குரல் வளத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நேர்முக பேட்டியின் போது, அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான், அவன் முதன் முறையாக அவள் பாடுவதைக் கேட்ட போது, “இதனைக் குறித்து எப்பொழுது என்னிடம் சொல்லலாம் என்றிருந்தாய்?” என்று நினைத்ததாகக் கூறினான்.
நம்முடைய உறவுகளிலும், அநேக நேரங்களில் நம்மை வியக்கச் செய்யும், புதியதும், எதிர் பாராததுமான விளக்கங்களைக் கற்றுக் கொள்வோம். மாற்கு சுவிசேஷத்தில், ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுவைக் குறித்து ஒரு தெளிவற்ற காட்சியையே கொண்டிருந்தனர், அவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கலிலேயா கடலில் இயேசுவைச் சந்தித்தபோது, அவர் தன்னை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார், இம்முறை இயற்கையின் சக்திகளுக்கு மேலாக அவருக்கிருந்த வல்லமையைக் காண்பித்தார்.
ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்த பின்பு, இயேசு தன் சீஷர்களை கலிலேயா கடலின் வழியாக அனுப்புகின்றார், அங்கு அவர்கள் வலிமையான புயலில் சிக்கிக் கொள்கின்றனர். விடிவதற்கு சற்று முன்பு, தண்ணீரின் மேல் ஒருவர் நடந்து வருவதை சீஷர்கள் கண்டு பயந்தனர். அவர்களுக்குப் பழக்கமான குரலில், கிறிஸ்துவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கேட்டனர், “திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” (மாற்.6:50) என்ற வார்த்தைகளைக் கேட்டனர். பின்பு அவர் சீற்றத்தோடிருந்த கடலை அமர்த்தினார். இந்த வல்லமையைக் கண்ட சீஷர்கள் “மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” (6:51), ஆயினும் கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக கிரகித்துக் கொள்ள போராடினர்.
நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்திலும், இயேசுவின் வல்லமையை நாம் அநுபவிக்கும் போது தான் அவர் யார் என்பதைப் பற்றிய முழு காட்சியை பெற்றுக் கொள்கின்றோம், அது நம்மை வியக்கச் செய்கின்றது.
புத்தகத்தில் ஆழ்ந்த இன்பம்
சுன்டொகு (Tsundoku) என்ற ஜப்பானிய வார்த்தை எனக்கு மிகவும் தேவையானது! இது நாம் இன்னமும் வாசிக்காமல், படுக்கைக்கு அருகிலுள்ள மேசையில் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைக் குறிக்கும். நாம் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைப் புத்தகங்கள் கொடுக்கின்றன, அவை, நம்மை வேறொரு காலத்திற்கும் இடத்திற்கும் கொண்டுசெல்பவை. அவை தரும் மகிழ்ச்சியையும் உட்கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு விரும்புகின்றேன், ஆகவே தான் நான் இவற்றை வைத்துள்ளேன்.
புத்தகங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு உதவியாகவும் இருக்கின்றன என்ற உண்மை எல்லா புத்தகங்களுக்கும் மேலான புத்தகமான வேதபுத்தகத்திற்கு மிகப் பொருத்தமானது. இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பெற்ற புதிய தலைவனான யோசுவாவை தேவன் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம் (யோசு. 1:8).
யோசுவா சந்திக்க இருக்கின்ற கஷ்டங்களை அறிந்த தேவன், அவனிடம், “நான் உன்னோடும் இருப்பேன்” (வச. 5) என்கின்றார். யோசுவா தேவனுடைய நியாயப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் போது, அவருடைய உதவி அவனுக்குக் கிடைக்கும். தேவன் அவனிடம், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” (வச. 8) என்றார். யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வைத்திருந்த போதிலும், அதன் உட்கருத்தையும், தேவன் யார் என்பதையும், அவர் தன்னுடைய ஜனங்களுக்கு வைத்திருக்கின்ற நோக்கத்தையும் அறிந்துகொள்ளும்படி, அதை உண்மையாய் தேட வேண்டுமென தேவன் விரும்புகின்றார்.
உன் வாழ்நாட்களைக் கடந்து செல்வதற்கு உனக்கு அறிவுரை தேவையா? சத்தியம் அவசியமா? ஊக்கம் வேண்டுமா? வேதபுத்தகத்தை வாசிக்க நேரம் செலவிட்டு, அதற்குக் கீழ்ப்படிவாயானால், வாழ்விற்குத் தேவையான பெலனைக் கொடுக்கும் வாசனை நிரம்பிய வார்த்தைகளை அதன் பக்கங்களில் காண்பாய் (2 தீமோ. 3:16,17).
எப்பொழுதும் நம்மோடிருக்கும் அவருடைய பிரசன்னம்
2018 ஆம் ஆண்டு, உலக கோப்பையின் போது, கொலம்பியாவின் முன்னோடி வீரரான ரடாமேல் ஃபால்கா, எழுபதாவது நிமிடத்தில் போலந்துக்கு எதிராக கோல் அடித்து, வெற்றியைப் பிடித்தார். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில், ஃபால்காவின் கோல், முப்பதாவது கோலாகும். சர்வ தேச போட்டிகளில் பங்கு பெற்ற கொலம்பியா வீரர்களில், அதிக கோல் போட்டவர் என்ற பெயரையும் வாங்கித்தந்தது.
ஃபால்கா, கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது, தனது ஒவ்வொரு வெற்றியின் போதும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கோலுக்குப் பின்னரும் தன்னுடைய மேல் சட்டையை உயர்த்திக் காட்டுவார், உள்சட்டையில், “இயேசு உன்னோடு இருக்கும் போது, நீ தனியாயிருப்பதில்லை” என்ற வார்த்தை இருக்கும்.
ஃபால்காவின் வார்த்தைகள் நம்மையும் தேவன் தருகின்ற உறுதியளிக்கும் வாக்குத்தத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறது. “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்றார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தன்னுடைய சீஷர்களிடம், அவருடைய ஆவியின் மூலமாக, அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடனே இருக்கும் என உறுதியளிக்கிறார் (வ.20, யோவா.14:16-18). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களோடிருந்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்த செய்தியை அருகிலும், தூரத்திலும் உள்ள பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்தினார். அவர்கள் அறியாத இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் தனிமையை உணர்ந்த போதும், கிறிஸ்துவின் வார்த்தைகள் அவர்களின் செவிகளில் எதிரொலித்தன, தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதை நினைவு படுத்தியது.
நாம் எவ்விடத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டிற்கு அருகிலோ, வெகு தொலைவிற்கோ அல்லது இயேசுவை அறியாதவர்களின் மத்தியில் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். நாம் தனிமையாயிருப்பது போல உணர்ந்தாலும், நாம் இயேசுவிடம் ஜெபிக்கும் போது, அவர் நம்மோடிருக்கிறார் என்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம்.