எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லாரன்ஸ் டார்மனிகட்டுரைகள்

ஜாக்கிரதையுடனும் விழிப்புடனும்

எங்கள் அக்கம் பக்கத்தை நன்கு காணக்கூடிய ஜன்னலருகே என் மேஜை இருந்தது. அங்குள்ள மரங்களில் வந்து அமரும் பறவைகளை ஜன்னலருகிலிருந்து நன்றாகக் காண முடிந்தது. சில பறவைகள் ஜன்னலருகே வந்து ஜன்னல் திரையிலுள்ள பூச்சிகளைச் சாப்பிடும்.

அப்பறவைகள் சாப்பிட அமரும் முன்பு, சுற்றும் முற்றும் நன்கு கவனித்துப் பார்த்து விட்டு, ஆபத்து ஏதும் இல்லை என உணர்ந்த பின்பே உட்காரும். அப்படி இருந்தும், சில நொடிகளுக்கு ஒரு முறை, சுற்றும் முற்றும் கவனித்துப் பார்க்கும்.

இப்பறவைகள் காட்டும் ஜாக்கிரதையுடன் கூடிய விழிப்புணர்வு, கிறிஸ்தவர்கள் எவ்வாறு விழித்திருக்க வேண்டும் என்று வேதம் கூறுவதை நினைவுபடுத்துகிறது. இவ்வுலகத்தில் சோதனைகள் பல உள்ளதால், அதினால் உண்டாகும் ஆபத்துகளை மறவாதிருக்க நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆதாம், ஏவாளைப் போல நாமும் “புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது” (ஆதி. 3:6) என்று உலகக் காரியங்களினால் கவர்ந்திழுக்கப்பட்டு சுலபமாய் மாட்டிக்கொள்கிறோம்.

ஆகவே தான் பவுல், “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்” (1 கொரி. 16:13) என எச்சரிக்கிறார். அதைப்போலவே பேதுருவும், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேது. 5:8) எனக் கூறுகிறார்.

நம்முடைய அன்றாட உணவிற்காக உழைக்கும் பொழுது, நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறித்து விழிப்புடன் இருக்கிறோமா? நாம் தேவனையே சார்ந்து, சுயத்தின்மீதோ, தன்னிச்சையான செயல்பாட்டின்மீதோ சார்ந்திராமல் எப்பொழுதும் ஜாக்கிரதையாயிருக்கிறோமா?

நான் உன்னோடு இருக்கிறேன்

ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கைக்கு இளநிலை உதவியாளராக நான் பணியாற்றி வந்தபொழுது, கிறிஸ்தவனாக மாறின ஒருவரைப்பற்றிய கதையை அதில் எழுதினேன். ஆச்சரியப்படத்தக்க விதமாக, அவன் அவனது பழைய வாழ்க்கையை முற்றிலுமாக விட்டுவிட்டு, இயேசுவை அவனுடைய புதிய எஜமானாக ஏற்றுக்கொண்டான். அந்தப் பத்திரிக்கை வெளியான சில நாட்களில், “டார்மனி, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எழுதினால், இந்த ஊரில் உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது,” என்று பெயர் அறிவிக்கப்படாத ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு பயமுறுத்தினார்.

மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்ததினால் நான் பயமுறுத்தப்பட்டது, அது முதல் தடவை அல்ல. ஒருமுறை நான் கிறிஸ்துவைப் பற்றிய கைப்பிரதியை, ஒரு மனிதனிடம் கொடுத்தபொழுது உடனே என் கைப்பிரதிகளோடே ஓடிவிடாவிட்டால் விளைவுகள் வேறாக இருக்குமென்று அவன் பயமுறுத்தினான். அந்த இரு தடவைகளிலும் நான் பயத்தினால் பின் வாங்கினேன். ஆனால், இவை வார்த்தைகளினால் உண்டாக்கப்பட்ட பயமுறுத்தல்கள்தான். அநேக கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பயமுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் மிகச் சாதாரணமாக தெய்வ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்துவதுகூட மக்களிடம் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதுள்ளது.

“நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளை யெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார். இயேசுவும் சீஷர்களிடம் “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (மத். 10:16) என்று கூறினார். ஆம், நாம் பயமுறுத்தல்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும், துன்புறுத்தல்களையும், வேதனைகளையும் கூட அனுபவிக்கலாம். ஆனால் “நான் உன்னுடனே இருக்கிறேன்”(எரேமியா 1:8) என்று தேவன் எரேமியாவிடம் உறுதிபடக் கூறுகிறார். அப்படியே இயேசுவும் “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று அவரைப் பின்பற்றினவர்களிடம் உறுதியுடன் கூறினார்.

கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.

பிறருக்காக மரித்தல்

எனக்கு பறவைகள் மேல் அதிகப் பிரியம். ஆகவே எனது மகள் ஆலிஸிற்காக கூட்டில் அடைக்கப்பட்ட 6 பறவைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றேன். அந்தப் பறவைகளுக்கான தேவைகளை ஆலிஸ் அனுதினமும் கவனித்து வந்தாள். அதில் ஒரு பறவை நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டது. ஒருவேளை, பறவைகளை கூட்டிற்குள் அடைத்து வைக்காமலிருந்தால், அப்பறவைகள் நன்றாக வளரலாமோ என்று எண்ணினோம். ஆகவே மற்ற 5 பறவைகளையும் கூட்டிலிருந்து திறந்து விட்டோம். அவைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியே பறந்து சென்றன.

“அப்பா, ஒரு பறவையின் மரணம் மற்றப்பறவைகளை விடுதலை செய்ய வைத்தது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று ஆலிஸ் அவளது தகப்பனாரிடம் குறிப்பிட்டுக் கூறினாள்.

நமக்காக இயேசு செய்தது இதுதானே? ஒரு மனிதனின் (ஆதாம்) பாவம் உலகத்திற்கு ஆக்கினையைக் கொண்டுவந்ததுபோல, ஒரு மனிதனின் (இயேசு) நீதியினால் அவரை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது (ரோம. 5:12–19). “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவா. 10:11) என்று இயேசு கூறினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”
(1 யோவா. 3:16) என்று அதை செயல்படத்தக்க முறையில் யோவான் விளக்குகிறார். இது உண்மையில் சரீரப்பிரகாரமான மரணத்தைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் தியாகமான அன்பில் நமது வாழ்க்கையை இணைக்கும்பொழுது, “நாம் நமது ஜீவனைக் கொடுக்கிறோம்” என்று அர்த்தமாகும். உதாரணமாக நாம் நமது உலகப்பிரகாரமான பொருட்களை தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவற்றை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் (வச. 17), அல்லது நமது உதவியோ அல்லது ஆறுதலோ தேவையான ஒருவருடன் நமது நேரத்தை செலவழிக்க முன்வர வேண்டும்.

இன்றையதினம் யாருக்காக நீங்கள் தியாகம் பண்ணப்போகிறீர்கள்?

சிறந்த மருந்து

கானாவிலுள்ள அக்காரா நகரில் நடந்த போக்குவரத்து சண்டைகளுக்கு, வாடகைக் கார் (taxi) மற்றும் சிற்றுந்து (mini bus) ஓட்டும் வாகன ஓட்டிகள் மத்தியில் காணப்பட்ட கவனமற்ற முறையில் காரை ஓட்டுதல், வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் எரிச்சல், மேலும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற செயல்களே காரணங்களாக இருந்தன. ஆனால், போக்குவரத்தில் நான் கண்ட ஒரு நிகழ்ச்சி வேறுபட்ட விளைவை உண்டுபண்ணினது. ஒரு வாடகைக்காரை கவனமற்று ஓட்டிவந்த ஓட்டுநர் கிட்டத்தட்ட ஒர்  பேருந்தின்மேல் மோதி விட்டான். அந்தப் பேருந்து ஓட்டுநர் கோபப்பட்டு வாடகைக் கார் ஓட்டுநரை சத்தமாக திட்டப்போகிறான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, முகத்தில் ஏற்பட்ட கோப உணர்வை மாற்றி தவறுபுரிந்த வாகன ஓட்டியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சிரித்தான். அந்தச்சிரிப்பு ஆச்சரியமான விளைவுகளை உண்டுபண்ணினது. அந்த வாடகைக்கார் ஓட்டுநரும் பதிலுக்கு அவனது கைகளை உயர்த்தி, மன்னிப்பு கேட்டு, சிரித்துவிட்டு நகர்ந்து சென்றான். இறுக்கமான சூழ்நிலை தளர்ச்சி அடைந்தது.

சிரிப்பு, நமது மூளையில் ஆச்சரியமான வேதிமாற்றங்களை உண்டுபண்ணுகிறது. நாம் சிரிக்கும்பொழுது, நமது மூளையில் எண்டார்வின் (endorphin ) என்ற வேதிப்பொருள் செலுத்தப்படுகிறது. அது நமது சரீரப்பிரகாரமான சோர்வை தணிக்கும் சக்தி உடையது. சிரிப்பு இறுக்கமான சூழ்நிலையை மாற்றி அமைப்பதோடு, நமக்கு உள்ளாக இருக்கும் மன இறுக்கத்தையும் தளர்வுறச் செய்கிறது. நமது உணர்வுகள் நம்மை மட்டும் அல்லாது நம்மைச் சுற்றியுள்ள பிறரையும் பாதிக்கிறது. “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து,” (எபே. 4:31–32) என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.

கோபமோ, மன இறுக்கமோ அல்லது கசப்பான உணர்வுகளோ நமக்கும் தேவனுக்கும், நமக்கும் பிறருக்கும் இடையே உள்ள உறவைப் பாதிப்பதாக இருந்தால் நம்முடைய சொந்த சந்தோஷத்திற்கும், உடல் நலத்திற்கும் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்பதை நினைவு கூருவது நல்லது.

தொடரச் செய்

தொடர் ஒட்டங்களை காண எனக்குப் பிடிக்கும். அந்த விளையாட்டு ஓட்ட வீரர்களுக்கு தேவையான உடல் வலிமை, வேகம், திறன், சகிப்புத்தன்மை இவற்றை எண்ணும்பொழுது வியப்பாயிருக்கிறது. ஆனால், அவ்வோட்டத்தின் ஒரு மிக முக்கியமான தருணம் என்னுடைய விசேஷித்த கவனத்தை மட்டுமல்லாமல் கவலையையும் சேர்த்து ஆவல் கொள்ளச் செய்யும். அது, அக்கோல் அடுத்த வீரரிடம் கைமாறும் தருணமே. ஒரு நொடி தாமதமானாலோ, அல்லது கை நழுவி விழுந்தாலோ அந்த ஒட்டத்தில் தோற்றுப் போகலாம்.

ஒரு வகையில் பார்த்தால், கிறிஸ்தவர்களும், விசுவாசம் மற்றும் தேவனையும், அவருடைய வார்த்தையையும் அறிகிற…

அவர் சொல்வதைச் செய்தல்

எனக்கு ஒரு நிலத்தடி நீர்த்தொட்டி தேவையாயிருந்தது. அதை எப்படி கட்ட வேண்டும் என்பதை துல்லியமாக முடிவு செய்தபடியால் தெளிவான வழிமுறைகளைக் கட்டுமான பணியாளரிடம் தெரிவித்தேன். ஆனால்,  அதற்கடுத்த நாள்,  அப்பணியை மேற்பார்வையிட்ட பொழுது, நான் கூறிய வழிமுறைகளை அந்த கட்டுமான பணியாளர் பின்பற்றாததைக் கண்டு கோபமடைந்தேன். நான் கூறிய திட்டத்தை அவன் மாற்றியதால் நான் எதிர்பார்த்த விளைவும் இல்லை. மேலும்,  என்னுடைய கட்டளைகளை பின்பற்றாததற்கு அவன் கூறிய காரணங்கள் என்னை எரிச்சலூட்டியது.

பின்பு அக்கட்டுமானர் அப்பணியை மாற்றி அமைத்து கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருக்கையில்,  என்னுடைய…

மதிப்பிற்குரிய வாழ்க்கை

மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு சொற்பொழிவில், ஒரு அரசியல்வாதியும், மதிப்பிற்குரிய தலைவருமானவர், அவரது தேசத்தின் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பலர் நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அறிவித்ததின் மூலம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். லஞ்ச ஊழலுக்கு உட்பட்ட ஒழுக்கக் கேடான, பகட்டான வாழ்க்கை முறை, வெறுப்பூட்டுகிற வார்த்தைகள் மற்றும் பல கேடுபாடுகளுடன் அவர்கள் வாழ்கிறார்களென்று பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கடிந்துகொண்டு, அவர்கள் சீரான வாழ்க்கை வாழ வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார். எதிர்பார்த்ததுபோல அவருடைய கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு-கண்டனம் தெரிவித்தார்கள்.

நாம் பொதுவாழ்க்கையில் உள்ள அதிகாரியாகவோ, தலைவராகவோ…

உங்களது பிதா அறிவார்

கோடை காலத்தில் ஒரு நாள் இரவு, என் தகப்பனாருடன் கூட, தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்திருந்தேன். அப்பொழுது எனக்கு நான்கு வயது. எனது தாயார் குழந்தையோடு ஒரு தனி அறையில் இருந்தார்கள். எப்பொழுதும் வெப்பமாக இருக்கும் வட கானாவில் இது நடந்தது. என் உடல் முழுவதும் வியர்த்து, என் தொண்டை தாகத்தால் மிகவும் வறண்டது. அதனால் என் தகப்பனாரை எழுப்பினேன். எனது தாகத்தைத் தீர்க்க என் தகப்பனார் அந்த நடு இரவில் எழுந்து ஒரு குவளையிலிருந்த தண்ணீரை எனக்கு ஊற்றிக் கொடுத்தார். அன்றிரவு செய்ததுபோல…

தவறாக இடத்தில் நம்பிக்கை

வெவ்வேறு பறவை இனங்கள் வாழ்ந்த அடர்ந்த காடுகள் நிறைந்த “கானா நாட்டிலுள்ள” ஒரு கிராமத்தில் நான் வாழ்ந்து வந்ததால் சிறு பிராயத்திலிருந்தே பறவைகளை உற்றுநோக்கி நேசிப்பது எனக்கு விருப்பமாக இருந்தது. அதை என் பழக்கமாக்கிக் கொண்டேன். இப்பொழுது நான் வாழும் புறநகர் பகுதியில் சில காகங்களின் செயல்களை சமீபத்தில் கவனித்த எனக்கு ஓர் ஆவலை உண்டாக்கியது. அவை ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இலைகள் இல்லாத ஓர் மொட்டை மரத்தை நோக்கிப் பறந்தன. அவை உறுதியான கிளைகளில் அமர்வதற்குப் பதிலாக, அவற்றின் எடையைத் தாங்காமல் வளைந்து ஒடிந்துவிடும்…