நமக்கு மேல் பாடுவது
ஒரு இளம் தந்தை தனது ஆண் குழந்தையை கைகளில் பிடித்து, அவனிடம் பாடி, இனிமையான தாளத்தில் ஆட்டினார். குழந்தைக்கு காது கேட்கும் திறன் இல்லாதிருந்தது, எனவே அந்த பாடலின் மெட்டையோ அல்லது சொற்களையோ அதனால் கேட்க முடியவில்லை. ஆயினும் தந்தை அழகான, கனிவான அன்பில் தனது மகனை நோக்கி தொடர்ந்து பாடினார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவரது பிள்ளையிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான புன்னகை பதிலாகக் கிடைத்தது.
தந்தை-மகன் பரிமாற்றத்தின் பிம்பங்களுக்கும் செப்பனியாவின் வார்த்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பழைய ஏற்பாட்டின் இந்த தீர்க்கதரிசி, தேவன் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் என்று கூறுகிறார் (செப்பனியா 3:17). தேவன் தம்முடைய அன்புக்குரிய மக்களுக்கு அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச.15). இனி அவர்கள் பயப்பட தேவையில்லை, அதற்கு பதிலாக மகிழ்ந்து களிகூரலாம் என்று செப்பனியா கூறுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் மீட்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் தேவன் நமக்காய் பாடும் தெய்வீக அன்பிற்கு செவிகொடுக்க விரும்புவதும் முயற்சிப்பதும் இல்லை. அவர் நம்மீது அதிக அன்பு கொண்டிருப்பது அந்த இளம் தந்தையைப் போன்றது. அவருடைய மகனால் கேட்க முடியாத போதிலும் அவனிடம் அன்பாகப் பாடினார். அவர் நமது தண்டனையை சுமந்து கொண்டார். நாம் மகிழ்ச்சியடைய மேலும் காரணத்தைத் தருகிறார். அவருடைய குரலில் சந்தோஷம் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க நாம் இன்னும் அருகில் நெருக்கமாக சென்று கேட்க முயற்சி செய்யலாம். பிதாவே, உங்கள் அன்பான மெட்டுக்களை கேட்க மற்றும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க எங்களுக்கு உதவும்.
மூட்டை தூக்கும் செயல்பாடு
ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான கரேன், தனது மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்கு புரிந்துகொள்வது என்பதைக் கற்பிப்பதற்கான ஒரு செயல்பாட்டை உருவாக்கினார்.. இந்த “மூட்டை தூக்கும் செயல்பாட்டில்” - மாணவர்கள் தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான சுமைகள் சிலவற்றை எழுதினர். அந்த குறிப்புகள் ஒருவொருக்கொருவர் மாற்றி கொடுக்கப்பட்டதால், சக மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் பட்ட கஷ்டங்களைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுத்து பெரும்பாலும் அவர்களது சகாக்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. இளம் வயதினருடைய ப்ரஸ்பர மரியாதைக்குரிய ஆழ்ந்த உணர்வால் அந்த வகுப்பறை நிரப்பப்பட்டிருந்தது, அவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் அதிக பச்சாதாபம் கொண்டவர்களாகினர்.
வேதாகமம் முழுவதும், ஒருவருக்கொருவர் கண்ணியத்துடன் நடந்துகொள்வதற்கும் மற்றவர்களுடனான தொடர்புகளில் பச்சாத்தாபம் காட்டுவதற்கும் தேவன் தம் மக்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளார் (ரோமர் 12:15). ஆரம்ப கால இஸ்ரவேலின் வரலாற்றில் லேவியராகமம் புத்தகமத்தில், தேவன் இஸ்ரவேலரின் பச்சாத்தாபத்தை நோக்கி சுட்டிக்காட்டினார்-குறிப்பாக புறஜாதியினருடனான நடவடிக்கைகளில். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் “உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக”; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; (லேவியராகமம் 19:34).
சில நேரங்களில் நாம் சுமக்கும் சுமைகள் நம்மை அந்நியர்களைப் போல – தனித்து விடப்பட்டவர்களாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டர்களாக – நம் சுற்றத்தாரிடம் கூட உணர வைக்கின்றன. இஸ்ரவேலர் தங்களோடிருந்த புறஜாதியினருடன் செய்ததைப் போன்றதொரு அனுபவம் நமக்கு எப்போதும் இருப்பதில்லை. ஆயினும்கூட, தேவன் நம் வாழ்க்கையின் பாதைகளில் அனுப்புகிறவர்களை நாம், நாம் விரும்பும் மரியாதையுடனும் புரிதலுடனும் எப்போதும் நடத்தலாம். ஒரு நவீனகால நடுத்தர பள்ளி மாணவன், இஸ்ரவேலர் அல்லது இதற்கு இடையில் யாராக இருந்தாலும், நாம் அப்படி செய்யும் போது தேவனை கனப்படுத்துகிறோம்.
ஓய்வெடுப்பதற்கான காரணம்
நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்! இதய நோய் அபாயம் உள்ள நடுத்தர வயது ஆண் நிர்வாகிகள் ஒவ்வொருவரை பற்றிய ஆய்வுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பின்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் பங்கேற்பாளர்களைப் பின்தொடர்ந்தனர். விஞ்ஞானிகள் தங்கள் மூல கண்டுபிடிப்புகளில் தாங்கள் தேடாத ஒன்றைக் கண்டறிந்தனர்: விடுமுறைக்கு நேரம் ஒதுக்கியவர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.
வேலை என்பது வாழ்க்கையின் மிகவும் அவசியமான பகுதியாகும் - ஆதியாகமம் 3-ல் அவருடனான நம் உறவு முறிந்து போவதற்கு முன்பே தேவன் நமக்கு நியமித்த ஒரு பகுதி. தேவனின் மகிமைக்காக வேலை செய்யாதவர்கள் அனுபவிக்கும் வேலையின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி சாலமோன் எழுதுகிறார். அதனை "ஆர்வத்துடன் பாடுபடுவது" மற்றும் "அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது" என்று அடையாளப்படுத்துகிறார் (பிரசங்கி 2: 22-23). அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படாவிட்டாலும் கூட அவர்களின் “மனதுக்கு இளைப்பாறுதலில்லை” என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இன்னும் செய்து முடிக்க வேண்டியவைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் (வச. 23).
நாமும் சில சமயங்களில், நாம் “காற்றைத் துரத்துகிறோம்” என்பதைப்போல உணரலாம் (வச. 17). மேலும் நாம் நம் வேலையை “முடிக்க” முடியாமல் விரக்தியடைகிறோம். ஆனால் தேவன் நம் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்போது - நம்முடைய நோக்கம் - நாம் கடினமாக உழைத்து, ஓய்வெடுக்கவும் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அவர் நமக்கு அனைத்தையும் தருவதால், அவர் நம் தேவைகளை சந்திப்பவராக இருப்பதை நாம் நம்பலாம். “அவர் இல்லாமல் யாரால் உண்ணமுடியும் அல்லது இன்பம் காண முடியும்?” என்பதை சாலமோன் ஒப்புக்கொள்கிறார் (வச. 25). ஒருவேளை அந்த சத்தியத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் நாம் அவருக்காக உத்தமமாய் பணியாற்றலாம் (கொலோசெயர் 3:23). மேலும் ஓய்வு நேரங்களுக்கு நம்மை நாம் அனுமதிக்கலாம்.
மேல்நோக்கி பார்த்தல்
மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது கண் காலப்போக்கில் வலது கண்ணை விட கணிசமாக பெரிதாகிறது - கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியது. முதுகெலும்பில்லாத உயிரிகளை படிக்கும் விஞ்ஞானிகள் கணவாய் அதன் சிறிய வலது கண்ணை இருண்ட ஆழத்தை நோக்கிப் பார்க்க பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர் பெரிய இடது கண் சூரிய ஒளியை நோக்கி மேல்நோக்கி பார்க்கிறது.
நாம் தற்போதைய உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பது பற்றியும் “நாம் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால்” எதிர்காலத்தின் நிச்சயம் என்ன என்பதையும் பற்றிய ஒரு சித்தரிப்பாக கணவாய் இருக்கிறது (கொலோ. 3:1). பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தில் “மேலானவைகளையே நாடுங்கள்” என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனென்றால் நம் வாழ்க்கை "கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது." (வச. 2-3)
பூமியில் வசிப்பவர்கள் பரலோகத்தில் நம் வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்பதால் நம்முடைய தற்போதைய எதார்த்தத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்க்கப் பயிற்சி அளிக்கிறோம். ஆனால் கணவாயின் இடதுகண் காலப்போக்கில் வளர்ந்து பெரியதாகவும் அதிக உணர் திறன் கொண்டதாகவும் உருவாகிறது. அதேபோல ஆவிக்குரிய உலகில் தேவன் செயல்படும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வில் நாமும் வளர்கிறோம். இயேசுவில் உயிரோடு இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாம் “மேலே” பார்க்கும் போது நம் கண்கள் அதை மேலும் மேலும் பார்க்கத் தொடங்கும்.
சொல்லுவதற்கு ஓடுதல்
நவீன கால மாரத்தான் ஓட்டப்பந்தயமானது பூர்வ கால கிரேக்க ராஜ்ஜியத்தில் தூது செய்தி கொண்டு சென்ற ஃபிடிப்பைடஸ்-ன் அடிப்படையாக கொண்டது. புராண வரலாற்றின்படி, கி மு 490-ஆம் வருடம், படையெடுத்து வந்த பெர்சியர்களை எதிர்த்து வென்ற கிரேக்கர்களின் வெற்றியை அறிவிப்பதற்கு மாரத்தானில் இருந்து ஏதென்ஸ் வரை ஃபிடிப்பைடஸ் சுமார் 40 கி மீ ஓடினார். இன்றைய மாரத்தான் போட்டிகள் ஒரு தடகள பொடியாக தனிப்பட்ட திருப்திக்கு ஓடப்படுகிறது. ஆனால் ஃபிடிப்பைடஸ்-க்கு ஒரு பெரிதான நோக்கம் இருந்தது. அவரு எடுத்து வாய்த்த ஒவ்வொரு அடியும் தன தேசத்தினருக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியை தருவதாக இருந்தது .
அதே போல் 500 வருடங்களுக்கு பிறகு, இரு பெண்களும் நற்செய்தியை அறிவிக்க ஓடினார்கள்- வரலாற்றின் மிக முக்கியமான செய்தி. மரியாளும் மகதலேனா மரியாளும் இயேசுவை அடக்கம் பண்ண கல்லறை வெறுமையாக இருந்ததை பார்த்த போது தேவதூதர் ஒருவர் வந்து அவர்களிடம் இயேசுவை பற்றி “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினான். “அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும்” வேகமாக ஓடிச்சென்று சீஷர்களிடம் கூறினார்கள்.
நாமும் அதே ஆனந்த சந்தோஷத்துடன் உயிர்த்தெழுந்த இயேசுவை குறித்து மற்றவர்களிடம் பகிர ஊக்குவிக்கப் படுவோமாக. அதை பகிர நாம் தூரம் ஓட வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மருகே வசிக்கும் நண்பர்களிடம் இதை நற்சிதேஹியை பகிர்ந்தாலே போதும் மரணத்தை வென்ற ஆருடன் நாமும் வெற்றியுடன் வாழ மற்றவர்களுடன் பகிர்வோம்.
கூட இருப்பது
கேளிக்கை பூங்காவில் வேலை செய்யும் ஜென், ரோஹித் கண்ணீரோடு தரையிலே சரிந்ததைக் கண்டதும், உடனே அவனுக்கு உதவி செய்ய விரைந்தாள். ரோஹித், மனஇருக்கத்தால் பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன். நாள் முழுதும் தான் மகிழ்ச்சியாக அனுபவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவாரி செய்யும் இயந்திரம் பழுதடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டு அழுதுக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை எழுந்து நிற்கவைக்கவோ அல்லது சமாதானப்படுத்தவோ முயற்சிப்பதற்கு பதிலாக, ஜென், தரையிலே ரோஹித்துடன் உட்கார்ந்து, அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அவனை அழ அனுமதித்தாள்.
ஜென்னின் இந்தச் செயல், துன்பத்தோடும் அல்லது துக்கத்தோடும் இருப்பவர்களோடு எவ்வாறு நாமும் துணை நிற்பது என்பதற்க்கு ஒரு அழகிய உதாரணமாய் இருக்கிறது. தன்னுடைய வீடு, தன் மிருகஜீவன்கள் (வருமானம்), தன் ஆரோக்கியத்தின் இழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தன் பத்து பிள்ளைகளின் இறப்பினால் முடங்கிப்போன யோபுவின் துன்பத்தைப்பற்றி வேதாகமம் கூறுகிறது. யோபின் துக்கத்தை அறிந்த அவருடைய நண்பர்கள் யோபுவுக்கு ஆறுதல் சொல்லவும் - அவரவர் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள் (யோபு 2:11). யோபு துக்கத்தோடே தரையிலே உட்கார்ந்திருந்தார்.
அவருடைய நண்பர்கள் வந்தபோது, அவர்களும் யோபுடன் உட்கார்ந்து - ஏழு நாட்கள் - அவருடைய துக்கம் கொடிதாயிருந்ததினால் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
பிறகு, தங்களுடைய மனிதத்தன்மையின் அடிப்படையில் யோபுவின் நண்பர்கள் அவருக்கு உணர்வற்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் முதல் ஏழு நாட்கள், வார்த்தைகளற்ற மென்மையான பரிசாகிய அவர்களுடைய பிரசன்னத்தை மட்டும் கொடுத்தார்கள்.
மற்றவர்களுடைய துக்கத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், வெறுமனே அவர்களோடு கூட இருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அன்பு செலுத்த இந்த புரிந்துக்கொள்ளுதல் தேவையற்றது.
கொடுக்கப்பட்ட காலணி
ஒரு இளம் பள்ளி மாணவன் தனது ஓட்ட பந்தயத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் வேளையில். அவனது வீடு தீவிபத்தினால் நாசமானது. அதினிமித்தம் அவனால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவன் இந்த பந்தயத்தில் பங்கு பெறாததினால் அவனுடைய நாலு வருடபயிற்சி வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல இதில் பங்கு பெறவில்லையென்றால் அடுத்த கட்டமான மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற முடியாது.
மாவட்ட உடற்பயிற்சி கழகம் அந்த மாணவனின் நிலைமையை கேள்விப்பட்டு, ஆலோசனை செய்து அவனுக்கென்று தனியாக ஒரு தேர்ச்சி ஒட்டப்பந்தயத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தேர்ச்சியானது சற்று கடினமான மைதானத்தில் ஓடவேண்டியதாய் இருந்தது. அதுமாத்திரமல்ல தன்னுடைய ஓட்டப்பந்தய காலணி தீயில் அழிந்துபோனதால் சாதாரண காலணிகளை கொண்டு ஓடவேண்டியதாய் இருந்தது. ஆச்சரியப்படும் விதமாய் பந்தயநாளிலே அவனோடுகூட ஓடும் நபர்கள் ஒரு புதிய ஓட்டப்பந்தய காலணிகளை அவங்கென்று கொடுத்தார்கள்.
அந்த போட்டியாளர்களுக்கு காலணிகளை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவனுக்கு காலனி இல்லாததை அவர்களுக்கு ஆதாயமாக எடுத்திறுக்கலாம். ஆனால் அவர்களோ அன்போடு உதவிசெய்தார்கள். பவுல் நம்மையும் அதைபோல் தயவென்னும் நற்குணம் உடையவர்களாய் "அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலா 5:13) என்று வலியுறுத்துகிறார். நாம் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல் இருக்கும்படி பரிசுத்த ஆவியை சார்ந்திருப்போமானால் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் அன்பாய் இருக்கலாம்.
வறட்சியில் பிழைப்பது
2019-ல் பருவமழையின் தோல்வி காரணமாக சென்னை நகரில் ஒரு மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீர் வண்டிகளில் இருந்து நீர் பிடிப்பதற்காக தெருவெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள். பசுமையாய் இருக்கவேண்டிய புறநகர் பகுதிகளில் கூட புல்களும் செடிகளும் காய்ந்து கிடந்தன.
இவ்விதமான உலர்ந்த செடிகளும், களைகளும், “கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன்” (எரே. 17:5) என்னும் எரேமியாவின் விவரிப்பை மனதிற்கு கொண்டு வருகின்றன. அவர் சொல்வதென்னவென்றால், “மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொள்கிறவன், அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணமாட்டான்” (வச. 5-6). மாறாக தேவன் மேல் நம்பிக்கை வைத்து தங்களுடைய பலத்த, நீண்ட வேர்களால் அவரிடமிருந்து சக்தியைப் பெருகிறவர்கள் பஞ்ச காலத்திலும் கூட செழித்து ஒங்குவார்கள்.
செடிகளுக்கும் மரங்களுக்கும் - இரண்டிற்குமே - வேர் இருந்தால்கூட செடிகள் தங்கள் வாழ்க்கை ஆதாரங்களோடு இணைந்திராவிட்டால் அவை உலர்ந்து அழியும். மரங்களோ தங்களுடைய வேர்களை நன்றாக ஊன்றி கடினமான நாட்களில் கூட தங்களை பராமரிக்கும் ஆதாரத்தில் நங்கூரம் பாய்ச்சி செழிக்கின்றன. தேவனைப் பற்றிக் கொண்டு அவருடைய பலத்தையும், சத்துவத்தையும், வேதாகமத்திலிருந்து ஞானத்தையும், அவரோடு ஜெபத்தின் மூலம் உறவு கொள்ளுகிறதினால் பெற்றுக் கொள்ளும்போது நாமும் கூட அவர் தரும் வாழ்வாதாரத்தில் தழைக்கலாம்.
எங்கள் இதயங்களில் அச்சிடப்பட்டுள்ளது
பாடகர் குழு இயக்குனர் அரியான் அபெலா தன்னுடைய குழந்தைப் பருவத்தை, தன் கைகளை மறைக்க, அவைகளின் மேல் உட்கார்ந்து கழித்தார். விரல்கள் காணாமல் அல்லது ஒன்றோடொன்று ஒட்டின விரல்களோடு பிறந்த அவளுக்கு இடது கால் இல்லை மற்றும் வலது காலின் விரல்களும் இல்லை. ஒரு இசை விரும்பி மற்றும் சுப்ரனோ பாடகியான அவள் அரசாங்கத்தின் ஸ்மித் கல்லூரியில் இசையில் முக்கிய படிப்பைப மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாள். ஒரு நாள் அவளுடைய பாடகர் குழு ஆசிரியர் அவளை பாடகர் குழுவை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அவளுடைய கைகள் நன்கு தெரியும்படி இருந்தது. அந்த தருணத்தில் இருந்து அவர் ஆலயத்தின் பாடகர்களை நடத்திக்கொண்டு மற்றொரு பல்கலைக்கழகத்தில் பாடகர் குழு இயக்குனராக பணியாற்றி தன்னுடைய தொழிலைக் கண்டுக்கொண்டார். “என் ஆசிரியர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றை கண்டுபிடித்தனர்” என்று விளக்குகிறார்.
அவளுடைய எழுச்சியூட்டும் கதை “நம்முடைய பரிசுத்த ஆசிரியர் நம்முடைய வரம்புகளை பொருட்படுத்தாமல் நம்மிடத்தில் என்ன பார்க்கிறார் ?” என்று விசுவாசிகளைக் கேட்கத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னையே பார்க்கிறார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27).
மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருடைய மகிமையான சாயலைத் தாங்கியவர்களான நாம், அவரை பிரதிபலிக்க வேண்டும். அபெலாவுக்கு அவளுடைய கைகள் அல்லது விரல்களின்மை அல்ல மாறாக இயேசுவே மிக முக்கியமானவராக இருந்தார். இது எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்டு அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம்” என்று 2 கொரிந்தியர் 3:18ல் வாசிக்கிறோம்.
அபெலாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மறுரூபப்படுத்தும் வல்லமையினால் நடத்தப்பட்டு (வச. 18), தேவனினை கனப்படுத்தும் வாழ்க்கை பாடலாக வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும்.