எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெய்மி பெர்னாண்டஸ் காரிடோகட்டுரைகள்

காலத்திற்கு அப்பாற்பட்டு

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:68-69

2016 ஆண்டு, வில்லியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) நானூறாவது நினைவு ஆண்டினை கூறும் வண்ணம் பிரிட்டனிலும் (Britain) மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடகக் கம்பெனிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. காலத்தால் அழிக்க முடியாத நாடகத் தொகுப்புகளை இயற்றிய அதிசிறந்த ஆங்கில நாடக ஆசிரியராக அவரைக் கருதிய மக்கள் அனைவரும் கச்சேரிகள், விரிவுரைகள் மற்றும் கொண்டாட்டங்களில்…

மாற்றத்திற்கு தயாரா?

நாம் தேர்ச்சிபெற நினைக்கும் காரியங்களில், அநேகமாக இச்சையடக்கமே கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். எத்தனை முறைகள் ஒரு மோசமான பழக்கவழக்கத்தினால் அல்லது மட்டமான மனப்பான்மையினால் இல்லையெனில் தவறான மனப்போக்கினால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்படி உறுதிமொழி எடுக்கிறோம். யாரையாவது நமக்கு பொறுப்பாளியாக நாம் கணக்கொப்புவிக்கும்படியாக இருக்கக் கேட்கிறோம். ஆனால் நாம் மனம் மாற தேவையான பெலனோ, திறனோ நமக்கு இல்லை என்பது நமது உள்ளத்தின் ஆழத்திலே நமக்குத் தெரியும். நாம் அதைக்குறித்து பேசலாம், திட்டமிடலாம், சுய உதவி புத்தகங்கள் வாசிக்கலாம். ஆனால், நமக்குள் இருக்கும் வேண்டாத…

ஒருபொழுதும் முயற்சியை விட்டு விடாதே

ஜூப் சோயிடிமெக், நெதர்லேண்டில் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுபவராக அறியப்பட்டிருந்தார். அவ்வாறு அவர் தலைசிறந்து விளங்கக் காரணம், அவரது முயற்சியை ஒருபொழுதும் இடையிலே கைவிடாதே, அவர் டூர் டி பிரான்ஸ் என்று நடைபெற்ற உலக புகழ் பெற்ற சைக்கிள் பந்தயத்தில் 16 முறை பங்கெடுத்தார். 5 முறை இரண்டாவது இடத்திலேயே வந்தும், அவர் விடாமுயற்சியோடு தொடர்ந்து பங்கெடுத்து 1980ல் முதல் இடத்தைப் பெற்றார். இதுதான் விடாமுயற்சி.

வெற்றி பெற்றவர்களில் அநேகர், “ஒருபொழுதும் முயற்சியை கைவிடாதே” என்ற சிறப்பான ஏணியின் மூலமாகத்தான் வெற்றியை அடைந்துள்ளார்கள். ஆயினும் அநேகர்…

நமது முக்கிய கரிசனை

சிநேகிதர்களால் வரும் மனஅழுத்தம், அன்றாட வாழ்வில் ஒரு பகுதி சில சமயங்களில் ஒரு தீர்மானம் எடுக்குமுன் நமது சொந்த கருத்திற்கோ அல்லது அது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ, இருக்காதோ என்று எண்ணுவதை விட, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்பதை வைத்தே நாம் நமது தீர்மானங்களை எடுக்கிறோம். இவன் இப்படிப்பட்டவன் என்று பிறர் நம்மை தீர்மானித்து விடுவார்கள் என்றோ அல்லது பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும், அவனைச் சுற்றியிருந்த மக்களால் இந்த அழுத்தத்திற்கு உட்பட்டார்.…

என் கைகளை அவர் பழக்குவிக்கிறார்.

டேவிட் உட் என்ற NBAயின் முன்னாள் விளையாட்டு வீரர், டாக்ரஸ் டி பாஸ்கோனியா சார்பில் விளையாடிய பொழுது ஸ்பானியா நாட்டு கூடைப்பந்து விளையாட்டில் இறுதிக் கோப்பைக்கான போட்டியில் அவரோடு கூட நான் இருந்தேன். ஒரு போட்டிக்கு முன் அவர் “என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சங்கீதம் 144:1 ஐ வாசித்தார். பின்பு என்னிடம் திரும்பி “பார் தேவன் இந்த வசனத்தை எனக்காகவே எழுதியுள்ளார். துள்ளி வரும் பந்துகளைப் பிடிக்கவும் பந்தை சரியான முறைகளில்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).