எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

சிறப்பாய் செய்தாய்!

என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார். 

எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.

அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).

வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).

தேவ சித்தம்

சிலவேளைகளில் தேவசித்தத்திற்கு கீழ்படிவது கடினம். அவர் நம்மை சரியான காரியத்தை செய்ய தூண்டுவார். அவர் நம்மை முறுமுறுப்பில்லாமல் பாடுகளை சகிக்கவும், கடினமான மக்களை நேசிக்கவும், “நீ அதை செய்யக்கூடாது” என்று நமக்குள்ளே ஒலிக்கும் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படியவும், நாம் எடுக்க விரும்பாத அடிகளை எடுத்து வைக்கவும் அழைத்திருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆத்துமாவைப் பார்த்து, “ஆத்துமாவே, கேள். அமைதியாயிரு: இயேசு என்ன செய்ய சொல்லுகிறாரோ, அதைச் செய்” என்று சொல்லவேண்டும்.  

“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது” (சங்கீதம் 62:1). “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு” (62:5). இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறார்; பின்னர் தன் ஆத்துமாவிடம் சொல்லுகிறார். “அமர்ந்திருக்கிறது” என்பது மனஅமைதிக்கான தீர்மானம். “அமர்ந்திரு” என்பது அந்த தீர்மானத்தை நினைவுகூருவதற்கான தூண்டுதல்.

தாவீது, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அமர்ந்திருப்பதை தெரிந்துகொண்டார். நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கும் அழைக்கப்பட்டதற்குமான நோக்கமும் அதுவே. “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42) என்பதை ஒத்துக்கொண்டால் நாம் சமாதானமாய் வாழலாம். தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்வதும் நம்முடைய ஆழமான உணர்வுகளுக்கு அவரே ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்வதுமே நம்முடைய முதன்மையும் மேன்மையுமான அழைப்பு. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்று சங்கீதக்காரன் பாடுகிறான். 

நாம் “நம்புகிறது அவராலே வரும்” என்பதினால், நாம் உதவிக்காய் அவரையே நாடுவது நல்லது (62:5). அவரிடத்தில் உதவி கோரினால், அவர் நம்மை மீட்டுக்கொள்வார். அவரால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத எதையும் செய்யும்படிக்கு நம்மை தூண்டமாட்டார். 

கிறிஸ்துவின் நற்கந்தம்

ஒரு கிராம ஊழியரை எனக்குத் தெரியும். அவருடைய இரண்டு பேரன்களும் என்னுடைய சிறந்த நண்பர்கள். அவர் நகரத்திலுள்ள கடைக்குச் செல்லும்போது, அங்கு அவர் அறிமுகமானவர்களோடு அரட்டை அடிக்கும்போதும் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்துக்கொண்டிருப்போம். அவர்கள் எல்லாருடைய பெயர்களையும், அவர்களுடைய கதைகளையும் அவர் அறிந்திருந்தார். அவர் அங்கும் இங்கும் நின்று சுகவீனமாயிருக்கும் குழந்தையைப் பற்றியோ, பிரச்சனையான திருமணத்தைப் பற்றியோ கேட்டு ஒரு சில உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவார். அவர் வேதத்தைப் பகிர்ந்துக்கொண்டு தேவைப்பட்டால் அவர்களுக்காக ஜெபிப்பார். நான் அந்த மனுஷனை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் ஒரு சிறப்பானவர். அவர் ஒருபோதும் யாரிடத்திலும் தன்னுடைய விசுவாசத்தைத் திணிக்கமாட்டார். அதை அப்படியே விட்டுவிடுவார்.  

பவுல் குறிப்பிடும் “நற்கந்தம்” இந்த வயதான போதகரிடம் இருந்தது (2 கொரிந்தியர் 2:15). “கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை” (வச. 14) பரப்புவதற்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார். அவர் இப்போது தேவனிடம் சென்று விட்டார். ஆனால் அவருடைய நறுமணம் லொமேட்டா நகரம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது.

“சாதாரண மக்கள் யாரும் இல்லை. மனிதனோடு பேசுவது வெறுமையாய் போகாது என்று சி.எஸ்.லூயிஸ் எழுதியிருக்கிறார். இதை மற்றொரு வழியில் கூறும்போது, ஒவ்வொரு மனித தொடர்புக்கும் நித்திய பின்விளைவுகள் உண்டு. நம்முடைய விசுவாசம் மற்றும் மென்மையான வாழ்க்கையின், அமைதியான சாட்சியின் மூலம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறுவதின் மூலமும், நம்மை சுற்றியிருக்கிற மக்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்புகள் உள்ளன. கிறிஸ்துவைப் போல வாழும் வாழ்க்கை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். 

நம்பத்தகுந்த கிறிஸ்தவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து, ஒழுங்கு விதிமுறைகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மதுபானம், புகையிலை, சிலவகையான பொழுதுபோக்கு ஆகியவைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. “நம்முடைய ஊழியர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிறோம்” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அவைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை என்பதினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கடினமாய் தெரியவில்லை. ஆனால் என்னுடைய விவாத பார்வையில் ஏன் அந்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஆனவம், உணர்வற்ற தன்மை, முரட்டுத்தனம், ஆவிக்குரிய மாறுபாடு, விமர்சனம் போன்ற காரியங்கள் தடைசெய்யப்படவில்லை என்று எண்ணத்தோன்றியது. 

இயேசுவை பின்பற்றுவதை விதிமுறைப் பட்டியலைக் கொண்டு தீர்மானிக்கமுடியாது. அது அளவிடமுடியாத வாழ்க்கையின் மிக நுட்பமான ஒரு குணாதிசயம். ஆனால் அது “அழகானது” என்று மட்டும் கூறமுடியும். 

மத்தேயு 5:3-10இல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் அந்த அழகை விவரிக்கிறது. இயேசுவின் ஆவியை உடையவர்கள் தாழ்மையும் வலிமையும் கொண்டவர்கள். மற்றவர்களுடைய உபத்திரவத்தைப் பொருட்படுத்துவார்கள். சாந்தகுணம் மற்றும் இரக்கமுள்ளவர்கள். தங்களால் நன்மையான காரியம் செய்யவும் மற்றவர்களும் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்கள், துன்பப்பட்டு தோற்றுப்போனவர்களின் மீது இரக்கம் காட்டுவார்கள். இயேசுவை நேசிப்பதையே பிரதானமாய் வைத்து செயல்படுவர். சமாதானமாயிருப்பார்கள், தன் சமாதானத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வர். தனக்கு தீமைசெய்கிறவர்களிடமும் தயவுகாட்டுவார்கள். அவர்கள் “பாக்கியவான்கள்,” அதாவது, மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று அர்த்தம். 

இந்த வகையான வாழ்க்கைமுறை மற்றவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை இயேசுவை நாடி வரச்செய்கிறது.

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

எடுக்கப்பட்டது

என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே" (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.

ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார். 

தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).

என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.

உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்

பல வருடங்களுக்கு முன் நானும் என் மகன் ஜோஷும் ஒரு மலைப்பாதையில் மேலே ஏறினபோது, ஒரு புழுதிபுயல் காற்றில் மேலே வருவதை கண்டோம். நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தபோது ஒரு மிருகம் தூசியின் மத்தியில் ஒரு பதுங்கு குழியை தோண்டிகொண்டிருந்தது. அதனுடைய தலை மற்றும் தோள்பட்டை அந்த குழியினுள் இருந்தது. தன்னுடைய முன்னங்கால்களை கொண்டு தீவிரமாக குழிதோண்டி தன்னுடைய பின்னங்கால்களை கொண்டு குழியிலிருந்து மண்ணை வெளியே தள்ளியது. தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அது எங்களை கவனிக்கவில்லை.

நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த ஒரு நீண்ட குச்சியை கொண்டு அதன் பின்னிருந்து அதனை குத்தினேன். நான் அதை காயப்படுத்தவில்லை, ஆனால் அது எகிறி மேலே குதித்து எங்களுக்கு நேராக திரும்பியது. நூறு அடி ஓட்டத்தில் ஜோஷும் நானும் ஒரு புதிய உலக சாதனை படைத்தோம்.

நான் என்னுடைய துடுக்குத்தனத்திலிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன்: சிலநேரம் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது, விசேஷமாக இயேசுவுக்குள் சகவிசுவாசிகளாக உள்ளவர்களிடம் உள்ள உறவில். அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயரை “நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்” (1 தெசலோனிக்கேயர் 4:12) உற்சாகப்படுத்துகிறார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கிருபையை கொண்டு வேதவாக்கியங்களை பகிர முயற்சிக்க வேண்டும். மற்றும்சில நேரங்களில் சீர்படுத்தும் கனிவான வார்த்தைகளை வழங்கக்கூட  அழைக்கப்பட்டிருப்போம். ஆனால் மற்றவருடைய வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வது அவசியம். தேவனுடைய குடும்பத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கு அது ஒரு உதாரணமாக இருக்கும் (வ 12). “ஒருவரில் ஒருவர் அன்பு கூர்வதே” (வ 9)  நம்முடைய அழைப்பு.

ஓஸ்-ன் அவ்வளவு அற்புதமான மாந்திரிகன் அல்ல

ஒரு ஆங்கில புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஓஸ்-ன் மாந்திரிகன் என்ற  நாடகத்தில் டோரதி, சோலைக்கொள்ளை பொம்மை,  தகர மனிதன், கோழையான சிங்கமும் மேற்கின் பொல்லாத சூனியக்காரிக்கு சக்தியளித்த விளக்குமாற்றை கொண்டுவருகிறார்கள். அதற்கு பதிலாக ஓஸ்-ன் மாந்திரிகன் அவர்கள் நால்வருக்கும்  அவர்களது ஆழ் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்து இருந்தான்: டோரதி மீண்டும் வீடு செல்வதற்கு ஒரு சவாரி, சோலைக்கொள்ளை பொம்மைக்கு  மூளையும், தகர மனிதனுக்கு இதயமும்,  கோழையான சிங்கத்திற்கு  தைரியமும். ஆனால் அந்த மாந்திரீகனோ அவர்களை தினமும் ஏமாற்றி அடுத்த நாள் வர கூறுவான்.

அவர்கள் அந்த மாந்திரீகனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது, டோரோதியின் நாய்  டோடோ அங்கிருந்த திரையை இழுத்துவிட, திரைக்கு  பின்னால் இருந்து பேசிக்கொண்டிருக்கும் மாந்திரீகன் ஒரு மாந்தரீகனே  அல்ல, நெப்ராஸ்க்கா என்ற ஊரில்  இருந்து வந்த ஒரு பயந்த அமைதியற்ற மனிதன் என்று தெரிய வருகிறது. 

இதன்  நூலாசிரியர் ல. பிராங்க் பாம்-க்கு, கடவுளை பற்றி பிரச்சினை இருந்ததால்  நம் பிரச்சனைகளை நாம் தான்  தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை  மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்.

இதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் திரையை பின்னிழுத்து திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமானவரை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் உதவவில்லை என்றாலும் யோவான் கூறுவது தெளிவாக உள்ளது : தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், அதை சுற்றி பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 4:2,6). எப்பேர்ப்பட்ட தொல்லைகள் நம்மை பூமியில் வாதித்தாலும் (அதி 2-3), தன் நகங்களை கடித்து கொண்டு முன்னும் பின்னுமாக  தேவன் நடப்பதில்லை. அவருடைய  சமாதானத்தை நாம் அனுபவிப்பதற்கு, நம்  நன்மைக்காக  அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முடிவுகளை தேவனிடம் விட்டு விடுங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்.  அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து " கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்" என்று அறிமுகப்படுத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.

இதைக்குறித்து நினைக்கும்போது "சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.

லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை  அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (வச. 20).

நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.