எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்!

பிரபலமான வீடு புதுப்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினி அடிக்கடி “கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறுவது வழக்கம். அதற்கு பின்பு, தாங்கள் வர்ணம் பூசி, புதுப்பித்த வீட்டைக் காண்பிப்பாள். அப்படி ஒருநாளின் நிகழ்ச்சியில், தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பிரமிக்கத்தக்க அழகைப் பார்வையிட்ட அதின் உரிமையாளர், ஆச்சரியத்தில், “ஓ! அழகாயிருக்கிறது” என்று மூன்று முறை உணர்ச்சிப்பொங்க கூறினாள்.

வேதாகமத்தில் “கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்” என்று சொல்லத்தூண்டும் வேதப்பகுதிகளில் ஒன்றுதான், ஏசாயா 65:17-25. என்ன ஆச்சரியமான காட்சி! புதிய வானமும் புதிய பூமியும் மீண்டும் உண்டாக்கப்படபோகிறது (வச. 17). அது மிகவும் நிஜமான ஒரு உலகம்; வாழ்க்கையை மாற்றும், பாதுகாப்புள்ள உலகம். அங்கே “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” (வச. 21). வன்முறைகள் எல்லாம் கடந்த காலமாய் மாறிவிடும்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை” (வச. 25).

ஏசாயா 65இல் பதிவாகியுள்ள இந்த பிரமிக்கத்தக்க படைப்புகள் எதிர்காலத்தில்தான் நடக்கப்போகிறது. அதை நடப்பிக்கும் தேவன் தற்போது வாழ்க்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்று உறுதியளிக்கிறார். சீரமைக்கப்படவேண்டிய தேவை உனக்கு இருக்கிறதா? சந்தேகம், கீழ்ப்படியாமை, வேதனை போன்றவற்றால் உன் வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறதா? இயேசு, வாழ்க்கையை சீரமைத்து அழகாய் மாற்றுவது நிஜம். அவரை நம்பி, அவரையே சார்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது சாத்தியமாகிறது.

கனமான ஆனால் நம்பிக்கையான

பீனட்ஸ் என்ற துண்டு நகைச்சுவை தொடரில், மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் லூசி ஐந்து சென்டுக்கு "மனநல உதவி" என்று விளம்பரம் செய்தார். லினஸ் அவளது அலுவலகத்திற்கு தனது வழியைக் கண்டுபிடித்தார் மற்றும் அவரது "ஆழ்ந்த மனச்சோர்வை" ஒப்புக் கொண்டார். அவரது நிலை குறித்து அவர் என்ன செய்ய முடியும் என்று அவர் அவளிடம் கேட்டபோது, ​​லூசியின் விரைவான பதில், “அந்த நிலையிலிருந்து வெளிவரும்படியாக ! தயவுசெய்து ஐந்து சென்டுகள்” என்றார்.

இத்தகைய இலகுவான பொழுதுபோக்கு அப்போதைய தருணத்திற்கு புன்னகையைத் தரும் அதே வேளையில், நிஜ வாழ்க்கையில் நம்மைப் பிடிக்கக்கூடிய சோகமும், இருளும் அவ்வளவு எளிதில் நிராகரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையற்ற தன்மையும் மற்றும் விரக்தியின் உணர்வுகளும்  உண்மையானவை, சில சமயங்களில் தொழில்முறை கவனம் தேவை.

உண்மையான வேதனையை நிவர்த்தி செய்ய லூசியின் ஆலோசனை உதவாது. இருப்பினும், 88-ஆம் சங்கீதத்தின் ஆசிரியர் அறிவுறுத்துதலையும் மற்றும் நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் வழங்குகிறார். ஒரு லாரி சுமை பிரச்சனைகள் அவரது வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. எனவே, கலங்கமில்லா நேர்மையுடன், அவர் தனது இருதயத்தை தேவனிடம்  ஊற்றினார். "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளாத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." (வச. 3). "என்னை பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்" (வச. 6). "இருள் என் நெருங்கிய நண்பனாதது" (வச. 18). சங்கீதக்காரனின் வலியைக் கொண்டு நாம் கேட்கிறோம், உணர்கிறோம், அடையாளம் காணலாம். ஆனாலும், அது அல்ல. அவரது புலம்பல் நம்பிக்கையுடன் உள்ளது. “ என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உமது சமூகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். ”(வச. 1-2; வி.வி 9, 13 ஐ காண்க). கனமான விஷயங்கள் வர கூடும் ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் தேவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

தேவனுடன் போரை எதிர்கொள்வது

அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள்  மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்."
 
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.

4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின்  ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!

தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்

“தேவன் அழுகிறார்” பில் ஹேலியின் பத்து வயது மகள் இயேசுவில் பலதரப்பட்ட விசுவாசிகள் குழுவுடன் மழையில் நின்றபோது முணுமுணுத்த வார்த்தைகள் அவை. அவர்கள் தேவனைத் தேடவும், அமெரிக்காவிலுள்ள இன வேறுபாட்டின் மரபுகளை புரிந்துக்கொள்ளவும் வந்திருந்தனர். முன்னாள் அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் நின்றபோது ​​அவர்கள் ஜெபத்தில் கைகோர்த்தார்கள். பின்னர் திடீரென்று காற்று வீசத் தொடங்கியது மழை பெய்யத் தொடங்கியது. தலைவர் இனரீதியான ஒற்றுமைக்காக அழைப்புவிடுத்தபோது மழை இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது. ஒற்றுமையையும், மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என கூடிவந்தவர்கள் நம்பினர்.

கல்வாரியிலும் அப்படியே நடந்தது - தேவன் செயல்பட்டு கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு தனது கடைசி சுவாசத்தை சுவாசித்தபோது, “பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது”  (மத்தேயு 27: 51-52). இயேசு யார் என்பதை சிலர் நிராகரித்தாலும் அவரைக் காவல்செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நூற்றுக்கதிபதி வேறு முடிவெடுத்திருந்தார். “நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” (வச. 54)

இயேசுவின் மரணத்தில் தேவன் தன்னை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் பாவ மன்னிப்பை வழங்கும் வேலையில் இருந்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2 கொரிந்தியர் 5:19). ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்குவதை விட தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை நிரூபிக்க சிறந்த வழி வேறென்னென இருக்க முடியும்?

உங்கள் நற்கீர்த்தி என்ன?

உள்ளூர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில், டெட் அரங்கத்தில் மிக அதிகமாக பேசுபவராகவும் ஆதிக்கம் நிறைந்த நபராகவும் இருந்தார். ஒரு சீர்குலைக்க கூடிய நிலை அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவர் 6 அடி 6 அங்குலம் உயரமும் 130 கிலோவுக்கு அதிக எடையும் கொண்டவர். கூட்டத்தை தூண்டும் சேன்ட்சாட் பள்ளி நிகழ்வுகள் பழம் பெருமை வாய்ந்தவை.
ஆனால் டெட் தனது சமூகத்தில் புகழ் பெற்றது விளையாட்டில் உற்சாகம் ஊட்டுபவராக இருந்ததினால் அல்ல. ஒரு இளைஞனாக அனுபவித்த மது அடிமை தனத்தினாலும். கடவுள் மீது மற்றும் குடும்பத்தின் மீது அன்புக்காகவும், அவருடைய தாராள மனப்பான்மைக்காகவும், கருணைக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். 7 மணி நேரம் நடைபெற்ற அடக்க ஆராதனையில், நற்செய்தி மூலம் கிறிஸ்துவின் வல்லமையாலே இருளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதனின் துடிப்பான கிறிஸ்துவைப் போன்ற வழிகள் பற்றி சாட்சியம் அளிக்க ஒருவருக்குப் பின் ஒருவராக முன்வந்தனர்.
எபேசியர் 5:8ல் பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு நினைவுபடுத்துகிறார், “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்.” ஆனால் உடனேயே குறிப்பிட்டது என்னவென்றால், "இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்." இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே அழைப்பு. டெட் போன்ற ஒளியின் பிள்ளைகள் இந்த உலகின் இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிறைய வழங்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகள்” தவிர்க்கப்படவேண்டும். (பார்க்க வச. 3-4, 11) நம்முடைய சமூகங்களிலும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இயேசுவால் பிரகாசிக்கப்பட்டவர்களின் அற்புதமான தனித்துவமான சாட்சி தேவை. (வசனம் 14) என்பது ஒளி இருளில் இருந்து வேறுபட்டது போல எவ்வளவு தனித்துவமானது.

ஏற்றுக்கொள்ளும் மரபு

சமூக உரிமை ஆர்வலர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1968-ல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிகாகோவில் உள்ள தனது கல்லூரி ஓய்வறையின் கூரைக்கு ஏறினதை பற்றி “சுவர்களை உடைத்தல்” என்ற தன்னுடைய புத்தகத்தில், கிளென் கேஹ்ரேய்ன் எழுதுகிறார். “துப்பாக்கிச் சூட்டின் சத்தம் பெரிய கட்டிடங்களில் இருந்து முன்னும் பின்னுமாக எதிரொலித்தது, விரைவில் எனது கூரையிலிருந்து ஒரு பரந்த, இன்னும் கொடூரமான காட்சியை பார்த்தேன். . . . இரண்டு வருடங்களுக்குள் விஸ்கான்சின்-ன் சோளக்காட்டுக்குள் இருந்து சிக்காகோவின் உள் நகரத்தின் போர் மண்டலத்திற்கு நான் எப்படி வந்தேன்?”. இயேசுவின் மீதும் தனது பின்னணியிலிருந்து வேறுபட்ட மற்ற மக்களின் மீதான அன்பினால் கட்டாயப்படுத்தப்பட்ட க்ளென், சிகாகோவின் மேற்குப் பகுதியில் வசித்து, அங்கு 2011-ல் தான் இறக்கும் வரை உணவு, உடை, தங்குமிடம் மற்றும் பிற சேவைகளை மக்களுக்கு வழங்கும் ஒரு ஊழியத்தை நடத்தி வந்தார்.

தங்களைவிட வேறுபட்டவர்களைத் தழுவிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஈடுசெய்த இயேசுவின் விசுவாசிகளின் முயற்சிகளை க்ளெனின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. வழித்தப்பிபோன மனிதகுலத்தை மீட்கும் திட்டத்தில் யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியினரும் சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறார்கள் என்பது பவுலின் போதனையிலும் எடுத்துக்காட்டிலிருந்தும் ரோம விசுவாசிகள் கண்டார்கள் ( ரோமர் 15:8-12). மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் அவருடைய எடுத்துக்காட்டை பின்பற்ற விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் (வச 7); “ஏகசிந்தையோடும் ஒரே குரலோடும்” (வச 6) தேவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் பாரபட்சத்திற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தடைகளைத் தாண்டி சுவர்களை உடைக்கவும், அனைவரையும் அன்புடன் அரவணைக்கவும் தேவன் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். ஏற்றுக்கொள்ளும் மரபை நமக்குப் பின் விட்டுச்செல்ல முயற்சிப்போம்.

ஜெபத்தோடே போராடுவது

யாரோ ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்தப் பிறகு டென்னிஸின் வாழ்க்கை மாற்றப்பட்டது. அதை வாசித்தல் அவரை கவர்ந்தது. அது அவருடைய நிலையான துணையாக மாறியது. ஆறு மாதங்களுக்குள், அவரது வாழ்க்கையில் இரண்டு வாழ்வை மாற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்தன. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்தார் மற்றும் கடுமையான தலைவலியினிமித்தம் அவருக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தாங்கமுடியாத வலியின் காரணமாக அவர் படுக்கையிலேயே இருந்து வேலை செய்ய முடியாமல் கிடந்தார். தூக்கமில்லாத ஒரு இரவில் அவர் தேவனை நோக்கி கூப்பிட்டார். இறுதியாக காலை 4.30 மணிக்கு தூக்கம் வந்தது.

உடல் ரீதியான வலிகள் நம்மை தேவனிடம் கூக்குரலிடச் செய்யலாம், ஆனால் மற்ற துன்பகரமான வாழ்க்கை சூழ்நிலைகளும் அவரிடம் ஓட நம்மைத் தூண்டுகின்றன. டென்னிஸின் போராட்ட இரவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பிக்கை இழந்த யாக்கோபு தேவனை எதிர்கொண்டார் (ஆதி. 32:24). யுhக்கோபுக்கு அது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப பிரச்சனை. தன் சகோதரன் ஏசாவுக்கு எதிராக அநீதி இழைத்தார். (ஆதி. 27) ஏசா உடனடியாக பழிவாங்கக்கூடும் என்று பயந்தார். இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவனுடைய உதவியை நாடின யாக்கோபு தேவனை நேருக்கு நேர் சந்தித்த (32:30) பிறகு ஒரு மாற்றப்பட்ட மனிதனாக வெளிப்பட்டார்.

டென்னிஸ{ம் அவ்வாறே செய்தார். ஜெபத்தில் தேவனோடு மன்றாடின பிறகு, படுத்த படுக்கையில் கிடந்த டென்னிஸ் எழுந்து நிற்க முடிந்தது மற்றும் மருத்துவரின் பரிசோதனையில் கட்டியின் அறிகுறிகள் காணப்படவில்லை.

தேவன் எப்போதும் நம்மை அற்புதமாக குணப்படுத்த தெரிந்தெடுப்பதில்லை என்றாலும், அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய சூழ்நிலைக்கு தக்கதாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நம்புகிறோம். நம்முடைய விரக்தியில் நாம் உண்மையான ஜெபங்களை ஏறெடுக்கிறோம். அதன் முடிவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம்.

மன்னிப்பதில் வெற்றி காண்பது

ராஜன், போதைப்பொருள்கள் மற்றும் பாலியல் பாவத்துடன் போராடியதால், வாழ்க்கையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். தன் நெருங்கிய உறவுகளும் சீர்குலைந்ததால் அவர் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியில் தன்னை அறியாமலே ஒரு போதகரிடம் இவைகளை குறித்து பகிர்ந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேவ இரக்கத்தையும், மன்னிப்பையும் அந்த போதகர் சொல்ல கேட்கும்போது அவர் துயரமெல்லாம் நீங்கிற்று.

தாவீது தன் மோசமான தந்திரத்தின் மூலமாக ஒரு பெண்ணின் கணவனை கொன்று தன்  பாவத்தை அதிகரித்தான் (2 சாமு. 11-12). அதை உணர்ந்தபோது சங்கீதம் 32 எழுதினான் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவங்களினால் அவனுடைய பாவங்கள் அவன் மனசாட்சியை வருத்தியது (சங். 32:3,4). அவன் செய்த பாவத்தின் அசிங்கத்தையும் அதினால் அவன் அனுபவித்த ஆழ்ந்த போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் மூடப்பட்ட பாவத்தினால் நமக்கு விடுதலை இல்லை என்பதே. மெய்யான விடுதலை தேவனிடம் அறிக்கையிட்டு அவர்  மன்னிப்பை ஏற்றுக்கொள்வது (வச. 5)

நம் மற்றவர்களுக்கோ, அல்லது நமக்கோ பாவம் செய்வோமானால் தேவனுடைய இரக்கமே நம் விடுதலைக்கு ஆரம்பம். நம் பாவ உணர்ச்சி நமக்கு அவர் மூலமாய் நிரந்தரமல்ல. அதனால் நாமும் சங்கீதக்காரனோடு இப்பாடலை சேர்ந்து பாடுவோம் "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" (வச. 1)  நம் பாவத்தை உணர்ந்தவுடன் அரவணைக்கும் கரங்களுடன் நம்மை எதிர்பார்க்கும் தேவனிடம் செல்வோம்.

குச்சிகளும் செங்கற்களும் தேவனும்

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு  ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு  புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய  புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்” 

கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.  துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான்  பிழைக்க ஒரே  வழி. 

யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).

எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே  - நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் - வெறும்  “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல  “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).