அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள்  மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்.”
 
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.

4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின்  ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!