எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

ஏற்றுக்கொள்ளும் மரபு

சமூக உரிமை ஆர்வலர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1968-ல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிகாகோவில் உள்ள தனது கல்லூரி ஓய்வறையின் கூரைக்கு ஏறினதை பற்றி “சுவர்களை உடைத்தல்” என்ற தன்னுடைய புத்தகத்தில், கிளென் கேஹ்ரேய்ன் எழுதுகிறார். “துப்பாக்கிச் சூட்டின் சத்தம் பெரிய கட்டிடங்களில் இருந்து முன்னும் பின்னுமாக எதிரொலித்தது, விரைவில் எனது கூரையிலிருந்து ஒரு பரந்த, இன்னும் கொடூரமான காட்சியை பார்த்தேன். . . . இரண்டு வருடங்களுக்குள் விஸ்கான்சின்-ன் சோளக்காட்டுக்குள் இருந்து சிக்காகோவின் உள் நகரத்தின் போர் மண்டலத்திற்கு நான் எப்படி வந்தேன்?”. இயேசுவின் மீதும் தனது பின்னணியிலிருந்து வேறுபட்ட மற்ற மக்களின் மீதான அன்பினால் கட்டாயப்படுத்தப்பட்ட க்ளென், சிகாகோவின் மேற்குப் பகுதியில் வசித்து, அங்கு 2011-ல் தான் இறக்கும் வரை உணவு, உடை, தங்குமிடம் மற்றும் பிற சேவைகளை மக்களுக்கு வழங்கும் ஒரு ஊழியத்தை நடத்தி வந்தார்.

தங்களைவிட வேறுபட்டவர்களைத் தழுவிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஈடுசெய்த இயேசுவின் விசுவாசிகளின் முயற்சிகளை க்ளெனின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. வழித்தப்பிபோன மனிதகுலத்தை மீட்கும் திட்டத்தில் யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியினரும் சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறார்கள் என்பது பவுலின் போதனையிலும் எடுத்துக்காட்டிலிருந்தும் ரோம விசுவாசிகள் கண்டார்கள் ( ரோமர் 15:8-12). மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் அவருடைய எடுத்துக்காட்டை பின்பற்ற விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் (வச 7); “ஏகசிந்தையோடும் ஒரே குரலோடும்” (வச 6) தேவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் பாரபட்சத்திற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தடைகளைத் தாண்டி சுவர்களை உடைக்கவும், அனைவரையும் அன்புடன் அரவணைக்கவும் தேவன் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். ஏற்றுக்கொள்ளும் மரபை நமக்குப் பின் விட்டுச்செல்ல முயற்சிப்போம்.

ஜெபத்தோடே போராடுவது

யாரோ ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்தப் பிறகு டென்னிஸின் வாழ்க்கை மாற்றப்பட்டது. அதை வாசித்தல் அவரை கவர்ந்தது. அது அவருடைய நிலையான துணையாக மாறியது. ஆறு மாதங்களுக்குள், அவரது வாழ்க்கையில் இரண்டு வாழ்வை மாற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்தன. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்தார் மற்றும் கடுமையான தலைவலியினிமித்தம் அவருக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தாங்கமுடியாத வலியின் காரணமாக அவர் படுக்கையிலேயே இருந்து வேலை செய்ய முடியாமல் கிடந்தார். தூக்கமில்லாத ஒரு இரவில் அவர் தேவனை நோக்கி கூப்பிட்டார். இறுதியாக காலை 4.30 மணிக்கு தூக்கம் வந்தது.

உடல் ரீதியான வலிகள் நம்மை தேவனிடம் கூக்குரலிடச் செய்யலாம், ஆனால் மற்ற துன்பகரமான வாழ்க்கை சூழ்நிலைகளும் அவரிடம் ஓட நம்மைத் தூண்டுகின்றன. டென்னிஸின் போராட்ட இரவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பிக்கை இழந்த யாக்கோபு தேவனை எதிர்கொண்டார் (ஆதி. 32:24). யுhக்கோபுக்கு அது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப பிரச்சனை. தன் சகோதரன் ஏசாவுக்கு எதிராக அநீதி இழைத்தார். (ஆதி. 27) ஏசா உடனடியாக பழிவாங்கக்கூடும் என்று பயந்தார். இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவனுடைய உதவியை நாடின யாக்கோபு தேவனை நேருக்கு நேர் சந்தித்த (32:30) பிறகு ஒரு மாற்றப்பட்ட மனிதனாக வெளிப்பட்டார்.

டென்னிஸ{ம் அவ்வாறே செய்தார். ஜெபத்தில் தேவனோடு மன்றாடின பிறகு, படுத்த படுக்கையில் கிடந்த டென்னிஸ் எழுந்து நிற்க முடிந்தது மற்றும் மருத்துவரின் பரிசோதனையில் கட்டியின் அறிகுறிகள் காணப்படவில்லை.

தேவன் எப்போதும் நம்மை அற்புதமாக குணப்படுத்த தெரிந்தெடுப்பதில்லை என்றாலும், அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய சூழ்நிலைக்கு தக்கதாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நம்புகிறோம். நம்முடைய விரக்தியில் நாம் உண்மையான ஜெபங்களை ஏறெடுக்கிறோம். அதன் முடிவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம்.

மன்னிப்பதில் வெற்றி காண்பது

ராஜன், போதைப்பொருள்கள் மற்றும் பாலியல் பாவத்துடன் போராடியதால், வாழ்க்கையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். தன் நெருங்கிய உறவுகளும் சீர்குலைந்ததால் அவர் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியில் தன்னை அறியாமலே ஒரு போதகரிடம் இவைகளை குறித்து பகிர்ந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேவ இரக்கத்தையும், மன்னிப்பையும் அந்த போதகர் சொல்ல கேட்கும்போது அவர் துயரமெல்லாம் நீங்கிற்று.

தாவீது தன் மோசமான தந்திரத்தின் மூலமாக ஒரு பெண்ணின் கணவனை கொன்று தன்  பாவத்தை அதிகரித்தான் (2 சாமு. 11-12). அதை உணர்ந்தபோது சங்கீதம் 32 எழுதினான் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவங்களினால் அவனுடைய பாவங்கள் அவன் மனசாட்சியை வருத்தியது (சங். 32:3,4). அவன் செய்த பாவத்தின் அசிங்கத்தையும் அதினால் அவன் அனுபவித்த ஆழ்ந்த போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் மூடப்பட்ட பாவத்தினால் நமக்கு விடுதலை இல்லை என்பதே. மெய்யான விடுதலை தேவனிடம் அறிக்கையிட்டு அவர்  மன்னிப்பை ஏற்றுக்கொள்வது (வச. 5)

நம் மற்றவர்களுக்கோ, அல்லது நமக்கோ பாவம் செய்வோமானால் தேவனுடைய இரக்கமே நம் விடுதலைக்கு ஆரம்பம். நம் பாவ உணர்ச்சி நமக்கு அவர் மூலமாய் நிரந்தரமல்ல. அதனால் நாமும் சங்கீதக்காரனோடு இப்பாடலை சேர்ந்து பாடுவோம் "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" (வச. 1)  நம் பாவத்தை உணர்ந்தவுடன் அரவணைக்கும் கரங்களுடன் நம்மை எதிர்பார்க்கும் தேவனிடம் செல்வோம்.

குச்சிகளும் செங்கற்களும் தேவனும்

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு  ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு  புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய  புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்” 

கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.  துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான்  பிழைக்க ஒரே  வழி. 

யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).

எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே  - நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் - வெறும்  “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல  “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).

வெறுப்பை விட வலிமையானது

அவரது தாயார் ஷரோண்டா (Sharonda) வின் சோகமான மரணத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கிறிஸ் (Chris) கிருபை நிறைந்த, வல்லமை வாய்ந்த  இந்த வார்த்தைகளை சொல்ல முடிந்தது: “அன்பு வெறுப்பை விட வலிமையானது”. இன்னும் எட்டு பேரோடு கூட அவனுடைய தாயார் அமெரிக்காவில் தெற்கு கரொலைனா மாகாணத்தில் சார்ல்ஸ்டன் நகரில் புதன் தோறும் நடைபெறும் வேத பாடத்தில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும்போது  கொல்லப்பட்டார். இந்த தருணத்தில் இவ்வித  அருமையான வார்த்தைகள் அவனுடைய இருதயத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவரும்படி அந்த இளைஞனுடைய வாழ்க்கையை யார் வடிவமைத்தது? கிறிஸ், இயேசுவை விசுவாசிப்பவர், அவருடைய தாயார் அனைவரையும் முழு மனதுடன்” நேசித்தவர். 

லூக்கா 23: 26-49  நிரபராதி இயேசுவும், கூட 2 குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்படும் காட்சிக்கு நம்மை கொண்டு போகிறது (வ 32,33). அங்கே கேட்கும் பெருமூச்சு, திணறல்களின் சத்தத்திற்கு  மத்தியில் இயேசுவின் குரல் கேட்கிறது:” பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (வ 34) அன்பையே எதிரொலித்த ஒருவரையே அந்த மதபோதகர்கள் தங்களுடைய வெறுப்பினால் சிலுவையில் அறைந்தார்கள். அந்த வேதனைகள் மத்தியிலும் இயேசுவின்  அன்பு வெற்றி சிறந்தது.

நீயோ அல்லது உனக்கு அருமையானவர்களோ இவ்விதமாக வெறுப்பு, கசப்பு, தீங்கிற்கு இலக்காகி இருக்கிறார்களா? உங்களுடைய துயரங்கள் ஜெபிக்க உங்களை ஊக்குவிப்பதாக; இயேசுவை பின்பற்றின கிறிஸ்-ன் உதாரணத்தை போலவே ஆவியின் வல்லமையினாலே அன்பின் மூலமாக வெறுப்பை மேற்கொள்ளுங்கள்.

வாக்கு மாறாதவர்

லீனாவுக்கு அவர் அளித்த வக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட ஜான், தனது திருமண உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறும்போது தடுமாறினார். அவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இந்த வாக்குறுதிகளை எப்படி கொடுக்கமுடியும் என்று நினைத்தார். விழாவின் மூலம் அதைச் செய்தார் ஆனால் அவருடைய கடமைகள் கனத்திருந்தது. வரவேற்புக்கு பிறகு, ஜான் தன் மனைவியை தேவாலயத்திற்கு அழைத்துச்சென்று - இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக – லீனாவை நேசிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்யவேண்டும் என்று ஜெபித்தார்.

ஜானின் திருமணநாளின் அச்சங்கள் அவரது மனித பலவீனங்களை அங்கீகரிப்பதின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், தேசங்களை ஆபிரகாமின் சந்ததியின் (கலா. 3:16) மூலம் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்த தேவனுக்கு அத்தகைய வரம்புகள் இல்லை. 

யூத கிறிஸ்தவர்கள் விடாமுயற்சசியோடும், பொறுமையோடும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தைத் தொடர வேண்டுமென்றும் கூறி,  ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியையும் (எபி. 6:13-15), அவர்  பொறுமையாய் காத்திருந்து வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். ஆபிரகாம் மற்றும் சாராள் மூத்த குடிமக்கள் என்ற நிலையில் இருந்தாலும்   தேவன் வாக்குபண்ணின “பெருகவே பெருகப்பண்ணுவேன்” (வ14) என்பதை நிறைவேற்ற ஒரு தடையாய் இருந்ததில்லை.

நீங்கள் சோர்ந்துபோய், பலவீனமான மனிதனாய் இருக்கும்போது தேவன் மேல் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறீர்களா? உங்கள் கடமைகளை கடைபிடிக்க, உறுதிமொழிகளையும் சபதங்களையும் நிறைவேற்ற போராடிக்கொண்டிருக்கிறீர்களா? 2 கொரிந்தியர் 12:9ல் “என் கிருபை உனக்கு போதும். பலவீனத்தில் என் பலம்  பூரணமாய் விளங்கும்” என்று தேவன் நமக்கு உதவி செய்ய வாக்களித்திருக்கிறார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக ஜான் லீனா தம்பதியருக்கு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்திருக்கிறார். உங்களுக்கும் உதவி செய்வார் என்று ஏன் நம்பக்கூடாது?

பேசுங்கள்

“அதோ அந்த மனிதர்! அதோ அந்த மனிதர்!” பானு, உணவகத்தில் வெலை செய்யும் சக ஊழியர்களிடம் கூச்சலிட்டார். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவளை சந்தித்த மெல்வின் என்பவரைப் பற்றி குறிப்பிட்டாள். அவர் தன்னுடைய தேவாலயத்தின் புல்வெளியை பராமரித்துக்கொண்டிருக்கும்போது, விபச்சாரி போல் காணப்பட்ட ஒரு பெண்ணிடம் உரையாடலை துடங்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஏவினார். அவர் அந்தப் பெண்ணை ஆலயத்திற்கு வர அழைத்தப்போது அவளிடமிருந்து வந்த பதில் “நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா ?. நான் அங்கு வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.” என்பதே.  மேல்வின் இயேசுவின் அன்பைப் பற்றியும் அவளுடைய வாழ்க்கையை தேவன் மாற்ற வல்லமையுள்ளவர் என்றும் கூறியபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் முகத்தில் வடிந்தது. இப்போது, அநேக வாரங்களுக்குப் பிறகு, பானு ஒரு புதிய சூழலில், இயேசு வாழ்க்கையையே மாற்ற வல்லவர் என்ற உயிருள்ள ஆதாரமாக வேலைப்பார்த்துக்கொணடிருக்கிறாள்.

விசுவாசிகளை ஜெபம் செய்ய ஊக்குவிக்கும்படி பரிசுத்த பவுல் இருமடங்கு வேண்டுகோள் வடுத்திருக்கிறார்

“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, இதை வெளிப்படுத்துவதற்கு,  திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்”. (கொலோசெயர் 4:3,4).

இயேசுவுக்காக தைரியமாகவும், தெளிவாகவும் பேசுவதற்கான வாய்ப்புகளுக்காக நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா ? என்ன ஒரு பொருத்தமான பிரார்த்தனை. ! இப்படிப்பட்ட ஜெபம் மெல்வினைப் போன்ற அவரது சீஷர்களை எதிர்பாராத இடங்களில் மற்றும் எதிர்பாராத நபர்களிடம் பேச வழிவகுக்கும். இயேசுவுக்காக பேசுவது சங்கடமாக இருக்கும் ஆனால் அதன் வெகுமதிகள் - மாற்றப்பட்ட வாழ்க்கை – நம் வாழ்க்கை நலக்குறைவுகளை ஈடுசெய்ய ஒரு வழியாகிறது.

நம்பிக்கை மட்டுமே

300 குழந்தைகள் உடைமாற்றிக் கொண்டு, காலை உணவிற்காக அமர்ந்தனர். உணவிற்காக நன்றி ஜெபமும் ஏறெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு உணவு இல்லை! இத்தகைய சூழல், அந்த அனாதை குழந்தைகள் இல்லத்தின் இயக்குனரும் ஊழியருமான ஜார்ஜ் முல்லருக்கு (1805-1898) புதிதல்ல.  தேவன் அவர்களை எப்படி போஷிப்பார் என்பதைக் காண இது மற்றொரு வாய்ப்பு. மில்லரின் ஜெபம் முடிவடைந்த சில நிமிடங்களில், முந்திய இரவு தூங்கமுடியாமல், 3 முறை ரொட்டி செய்த ஒரு ரொட்டிக் கடைக்காரர், இந்த அனாதையில்லத்தில், அவருடைய ரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து வாசலில் வந்து நின்றார். இது நடந்த சற்று நேரத்தில், அந்தப் பட்டணத்திற்குப் பால்           விநியோகிக்கும் ஒருவர் வந்தார். அவருடைய வாகனம் இந்த அனாதை இல்லத்தின் அருகில் பழுதடைந்து நின்று விட்டது. அதிலிருந்த பால் வீணாவதை விரும்பாத அவர் அதனை முல்லருக்குக் கொடுத்தார்.

நம்முடைய நலவாழ்வுக்குத் தேவையான அடிப்படைகளாகிய ஆகாரம், தங்கும் இடம், சுகம், பொருளாதாரம், நட்பு ஆகியவை கிடைக்காதபோது, நாமும் கவலை, பதட்டம், சுய பரிதாபம் ஆகியவற்றிற்குள் தள்ளப்படலாம். தேவையிலிருக்கும் ஒரு விதவையின் மூலம் தேவன் தரும் உதவி வந்ததைப் பற்றி முதல் இராஜாக்கள் 17:8-16 நமக்கு நினைவு படுத்துகின்றது. “பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லை” (வ.12) என்று அவள் கூறுகின்றாள். இதற்கு முன்பு காகங்கள் எலியாவை போஷித்ததைப் பற்றி காண்கின்றோம் (வ.4-6). நம்முடைய தேவைகளைச் சந்திக்கும் படி நாம் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியலாம். நம்முடைய தேவைகளையெல்லாம் தருவதாக வாக்களித்துள்ள தேவன் நமக்குத் தருவார் என்ற தெளிவான சிந்தனையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, பிரச்சனையிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்வோம். நாம் தீர்வுகளைத் தேடிக் கொள்ளும் முன்பு, முதலாவது தேவனைத் தேட கவனமாய் இருப்போம். அப்படிச் செய்யும் போது, நேரத்தை வீணாக்குவதையும், ஆற்றலைச்செலவிடுவதையும் தோல்வியையும் தவிர்த்துகொள்ளலாம்.

அன்போடு திருத்துதல்

ஆரம்ப கோடைகால வெப்ப நிலை, புத்துணர்ச்சி தருவதாக      இருந்தது. பிரயாணத்தில் என்னோடு துணையாக வந்த என்னுடைய மனைவிக்கு இதைவிட நல்ல சூழ் நிலை இருக்க முடியாது. அந்த இனிய கணங்கள் சீக்கிரத்தில், சோகமாக மாறியிருக்கும், ஆனால் அதற்குள், நான் தவறான திசையில் செல்கிறேன் என்று எச்சரிக்கும் ஒரு சிவப்பு வெள்ளை எச்சரிப்புப் பலகையைப் பார்த்து விட்டேன். நான் சரியாக அனைத்துப்பக்கமும் திரும்பி பார்க்காததால், ஒரு கணம் என் முன்னே தோன்றிய “ நுழையாதே” என்ற அடையாளம், என்னுடைய முகத்திற்கு முன்பாக வந்து நின்றது. நான் உடனடியாக என்னுடைய தவறை சரிசெய்து கொண்டேன். நான் சரியான பாதையில் செல்லவில்லை என்ற எச்சரிக்கையை கவனிக்காமல் இருந்திருந்தால், நான் என்னுடைய மனைவிக்கும், எனக்கும் மற்றும் என்னோடு சேர்ந்தவர்களுக்கும் ஆபத்தை வருவித்திருப்பேன் என்பதை நினைத்து நடுங்கினேன்.

யாக்கோபின் முடிவு வார்த்தைகள், திருத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.   நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அல்லது செயல், தீர்மானம் அல்லது முடிவு தீமையை விளைவிக்கலாம் என்பதை, நம்மீது அக்கரை கொண்டவர்கள் அறிந்து, “மீண்டும் நல்வழி”க்கு கொண்டுவர நம்மில் யாருக்கு தேவையில்லாதிருக்கின்றது? யாரோ ஒருவர் சரியான நேரத்தில், தைரியமாக நம் காரியங்களில் குறுக்கிடவில்லை யெனின், நமக்கும் மற்றவருக்கும் என்னென்ன தீமை நடந்திருக்கும் என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்?

அன்போடு கூடிய திருத்துதலை யாக்கோபு வலியுறுத்துகின்றார், “தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (5:20) என்கின்ற வார்த்தைகளால் விளக்குகின்றார். திருத்துதல் என்பது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. நாம் மற்றவர்கள் நலனின் மீது கொண்டுள்ள அன்பும் கரிசனையும், அவர்களோடு பேசவும், அவர்களின் பாதையில் குறுக்கிடவும் நம்மைத் தூண்டுவதன் மூலம், “அவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு” தேவன் நம்மைப் பயன் படுத்துவாராக (வ.19).