சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன்,  “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். 

மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது. 

உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.