ஒரு உயிரணுவிலிருந்து உயிர் தோன்றுவதுபோல, ஒரு விதையிலிருந்த கேதுருக்களை ஓங்கி வளரச்செய்யும் ஒருவர், கருவிலிருந்துகொண்டே நட்சத்திரங்களை தனக்கு அடிபணியச்செய்த ஒருவர், வானத்தை ஒளிக்கற்றைகளால் நிரப்பிய ஒருவரை சற்று கற்பனை செய்துபாருங்கள். தேவனாயிருந்த இயேசு தன்னை வெறுமையாக்குகிறார் (பிலிப்பியர் 2:6-7). என்னே ஆச்சரியமான சிந்தனை!

மேய்ப்பர்கள் மற்றும் தேவதூதர்கள் முன்னிலையில், வானத்து நட்சத்திரங்கள் ஒளிர, சுற்றியிருந்த விலங்கினங்கள் முதல் தாலாட்டைப் பாட, ஒரு விவசாய கிராமத்தில் இயேசுவின் பிறப்பை கற்பனை செய்யுங்கள். அவர் தேவ கிருபையிலும் மனிதர் தயவிலும் விருந்தியடைந்ததையும், கல்விமான்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளித்ததையும், யோர்தான் நதியில் தன்னுடைய பிதாவின் ஒப்புதலைப் பெற்றதையும், பசியோடும் ஜெபத்தோடும் வனாந்திரத்திலே சோதிக்கப்பட்டதையும் பாருங்கள்.  

அதன் பின்பு அவருடைய உலகத்தை மறுரூபமாக்கும் ஊழியத்தையும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதையும், குஷ்டரோகிகளை தொட்டதையும், அசுத்தமானவர்களை மன்னித்ததையும் பாருங்கள். அவர் தோட்டத்தில் வியாகுலப்பட்டதையும், அவருடைய உற்ற நண்பர்கள் ஓடிவிட அவர் கைதுசெய்யப்பட்டதையும் பாருங்கள். அவர் துப்பப்பட்டு. இரண்டு மரக்கட்டைகளின் நடுவில் ஆணியடிக்கப்பட்டு.  உலகத்தின் பாவத்தை தன் தோள்களில் சுமந்தவராய்  தொங்கவிடப்பட்டவரை பாருங்கள். கல் நகர, வெறுமையான கல்லறையின் அந்த சத்தத்தை. கவனியுங்கள்,  ஏனென்றால், அவர் உயிரோடிக்கிறார்!

அவர் உன்னதங்களில் உயர்த்தப்பட்டதைப் பாருங்கள் (வச. 9). வானத்தையும் பூமியையும் அவருடைய நாமம் நிரப்பியதைப் பாருங்கள் (வச. 10-11). 

அண்டசராசரங்களில் நட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை சிறு புள்ளியாய் காணச்செய்தவர் அவரே. அதுவே நம் கிறிஸ்மஸ் குழந்தை.