வெறுமையான கரங்கள்
ராபர்ட், தான் மதிய உணவு கூட்டத்திற்கு வந்தபோது, அவர் தனது பணப்பையை கொண்டுவர மறந்துவிட்டதை உணர்ந்தபோது சங்கடப்பட்டார். அவர் மதிய உணவு சாப்பிடத்தான் வேண்டுமா அல்லது ஏதாவது குடித்தால் மட்டும் போதுமா என்று யோசிக்கும் அளவிற்கு அது அவருக்குத் தொல்லையாக இருந்தது. அவருடைய நண்பன் சொன்ன நம்பக்கூடிய வார்த்தைகளால் தனது எதிர்ப்பை விட்டுவிட்டார். அவரும் அவருடைய நண்பரும் உணவை ரசித்து உண்டனர். பிறகு தன்னுடைய நண்பன் உணவுக்குரிய கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினார்.
இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையோ அல்லது உங்களை சங்கடப்படுத்தின வேறு ஏதாவது சூழ்நிலையோடு உங்களை அடையாளப்படுத்தலாம். நம்முடைய வழியில் நாம் பணம் செலுத்துவது இயல்பானது. ஆனால் நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுபவைகளை நாம் தாழ்மையாய் பெற்றுக்கொள்ள அநேக சந்தர்ப்பங்கள் உண்டு.
லூக்கா 15:17-24ல் இளைய மகன் தன் மனதில் இருந்ததைப் போல ஏதாவது திருப்பி செலுத்தும் எண்ணம் இருக்கலாம் - அவன் தன் மனதில் தன் தகப்பனாரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்ததைப் போல. “இனிமேல் உம்முடைய குமாரன் என சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்.” (வச. 19). கூலிக்காரன்? அவனுடைய தகப்பனிடத்தில் அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்காது. அவருடைய பார்வையில், மீண்டுமாய் வீட்டிற்கு வந்த, அதிகமாக நேசிக்கப்பட்ட மகன் அவன். ஆதலால் தான், அவன் தன் தந்தையின் அரவணைப்பையும், அன்பான முத்தங்களையும் (வச. 20) பெற்றுக்கொண்டான். என்ன ஒரு மகத்தான நற்செய்தி சித்திரம். இந்த நிகழ்ச்சி, தன்னிடம் வெறுங்கையுடன் வரும் பிள்ளைகளை திறந்த கையுடன் வரவேற்கும் அன்புள்ள பிதாவை இயேசு தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்துவதை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் இதை “என் கையில் நான் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, உம்முடைய சிலுவையைப் பற்றிக்கொள்ளுகிறேன்” என்ற வரிகள் மூலம் வெளிப்படுத்தினார்.
நாம் புரிந்துகொள்ளாதபோது..
“அவருடைய திட்டம் எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் அவரைத் தானே நம்பியிருந்தேன். கடைசியில் இப்படி நடந்துவிட்டதே.” ஒரு நல்ல ஓட்டப்பந்தய வீரனாய் மாறவேண்டும் என்னும் கனவை தற்காலிகமாய் தொலைத்த ஒரு மகன் தன் தாயாரிடத்தில் இப்படியாய் சொல்லுகிறான். எதிர்பாராத அல்லது வேதனை தரக்கூடிய சில அனுபவங்களை சந்தித்து கேள்வியோடும் ஆச்சரியத்தோடும் பயணிக்காதவர்கள் நம்மில் யாருண்டு? குடும்ப நபர்கள் திடீரென்று நம்மிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுகிறார்கள், உடல்நலக் குறைவு ஏற்படுகிறது, எதிர்பாராத விதமாய் அலுவலகம் இடமாற்றப்படுகிறது, வாழ்க்கையையே திசைதிருப்பும் விபத்து நேரிடுகிறது.
யோபுவின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்கள், யோபு 1-2 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. யதார்த்தமாய் சொன்னால், பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை சூழல் கொண்ட ஒரு நபர் என்றால், அது யோபு தான். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (1:1). ஆனால் நாம் விரும்புகிற பாதையில் நம்முடைய வாழக்கை பயணிப்பதில்லை. யோபுக்கும் அப்படித்தான். நமக்கும் அப்படித்தான். அவனுடைய மனைவியே “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (2:9) என்று அவனிடத்தில் சொல்லுகிறாள். யோபு அவளுக்கு பொருந்தக்கூடிய ஒரு ஞானமான பதிலை சொல்லுகிறான். அந்த பதில் நமக்கும் நேர்த்தியாய் பொருந்தும். நாம் சந்திக்கிற சிறியதோ அல்லது பெரிய பிரச்சனைகளோ “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (வச. 10).
நம்முடைய கடினமான வாழ்க்கைச் சூழ்நிலையிலும் தேவன் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், அவருடைய பெலத்தினாலே, நம்முடைய நம்பிக்கையும் கனமும் குறையாமல் இருக்கக்கடவது.
மறக்கப்படுவதில்லை
மாமா! என்னை நீங்கள் முடித் திருத்தகத்திற்கும் பல்பொருள் அங்காடிக்கும் கூட்டிச்சென்றது நினைவிருக்கிறதா? அன்று நான் காக்கி நிற பேண்ட்டும், நீலநிற சட்டையும், கருநீல நிற ஸ்வெட்டரும், காபி நிற காலணியும் அணிந்திருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016. இதை நினைவுகூர்ந்தது எனது அக்கா மகன்; அவன் ஒரு மனநலம் குன்றியவன். பல ஆண்டுகள் கழிந்தாலும் சில காரியங்களை அவன் மறக்காமல் நினைவில் வைத்திருந்தான்.
இந்த சூழ்நிலையிலும் அவனுடைய இந்த நினைவுகள், எல்லாம் அறிந்த, காலத்தையும் நித்தியத்தையும் கையில் வைத்திருக்கிற அன்பான தேவனை எனக்கு நினைவுபடுத்தியது. நடப்பது எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் தன்னுடைய ஜனத்தையும் அவர்களுக்கு வாக்கு பண்ணினதையும் மறக்கமாட்டார். நீங்கள் தேவனால் மறக்கப்பட்டீர்களா? என்று தேவனிடத்தில் கேள்வியெழுப்பிய தருணங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக சுகித்து, வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்போது அப்படி எண்ணத்தோன்றியதா?
இஸ்ரவேலர்களின் கடினமான சூழ்நிலைகள் அவர்களை “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” என்று சொல்லத் தூண்டியது. ஆனால் அது உண்மையில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு இரங்குவதைக் காட்டிலும் தேவனுடைய இரக்கமும் கரிசணையும் அதிகமாய் இருக்கிறது (வச. 15). தேவன் “கைவிட்டார்,” “மறந்துவிட்டார்” என்று சொல்லுவதற்கு முன்பு, அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாய் என்ன செய்திருக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். மன்னிப்பைக் கொண்டுவரும் சுவிசேஷத்தில் தேவன், “நான் உன்னை மறப்பதில்லை” என்று மிகத் தெளிவாய் சொல்லுகிறார் (வச. 15).
பாரபட்சமும் மன்னிப்பும்
அநீதியை எதிர்க்கும்படியான பிரசங்கத்தைக் கேட்டவுடன் ஒரு சபை விசுவாசி போதகரிடம் வந்து, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார். ஏனென்றால், தங்கள் திருச்சபைக்கு கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் போதகராக வருவதை விரும்பாததினால், தான் பாரபட்சத்துடன் செயல்பட்டதாகவும், அதினால் அந்த போதகருக்கு தான் ஓட்டுப்போடாததையும் எண்ணி மனம் வருந்தினார். “அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த பாரபட்சம் மற்றும் ஜாதி வெறி போன்ற குப்பைகள் என் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் தவறு செய்துவிட்டேன்” என்று வருந்தினார். கண்ணீருடனான அவருடைய பாவ அறிக்கை, போதகரின் கண்ணீரோடு கூடிய மன்னிப்பை வாங்கித் தந்தது. தொடர்ந்த வாரத்தில், மனந்திரும்பிய இந்த விசுவாசியின் சாட்சியைக் கேட்டு திருச்சபை மகிழ்ச்சியடைந்தது.
இயேசுவின் சீஷரும் ஆதித்திருச்சபையின் மூத்த தலைவருமான பேதுருவும் புறஜாதி மக்களைக் குறித்த தன்னுடைய பாரபட்ச சிந்தையை மாற்றவேண்டியிருந்தது. தீட்டாய் கருதப்பட்ட புறஜாதி மக்களுடன் உட்கார்ந்து புசிப்பதும் குடிப்பதும், சமுதாய மற்றும் மார்க்க ரீதியாய் அனுமதிக்கப்படவில்லை. பேதுருவும், “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 10:28) என்று சொல்லுகிறார். அந்த நம்பிக்கையை மாற்றி, “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்” (வச. 28) சொல்லாதபடிக்கு மனமாற்றப்பட்ட பேதுருவுக்கு தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் (வச. 9-23).
வேதாகமத்தின் போதனைகள், ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேவன் தொடர்ச்சியாக நம் உள்ளத்தில் கிரியை செய்து, மற்றவர்களைக் குறித்த நம் பாரபட்ச சிந்தையை மாற்றுகிறார். “தேவன் பாரபட்சமில்லாதவர்” என்பதை நமக்கு உணர்த்துகிறார் (வச. 34).
கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்!
பிரபலமான வீடு புதுப்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினி அடிக்கடி “கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறுவது வழக்கம். அதற்கு பின்பு, தாங்கள் வர்ணம் பூசி, புதுப்பித்த வீட்டைக் காண்பிப்பாள். அப்படி ஒருநாளின் நிகழ்ச்சியில், தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பிரமிக்கத்தக்க அழகைப் பார்வையிட்ட அதின் உரிமையாளர், ஆச்சரியத்தில், “ஓ! அழகாயிருக்கிறது” என்று மூன்று முறை உணர்ச்சிப்பொங்க கூறினாள்.
வேதாகமத்தில் “கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்” என்று சொல்லத்தூண்டும் வேதப்பகுதிகளில் ஒன்றுதான், ஏசாயா 65:17-25. என்ன ஆச்சரியமான காட்சி! புதிய வானமும் புதிய பூமியும் மீண்டும் உண்டாக்கப்படபோகிறது (வச. 17). அது மிகவும் நிஜமான ஒரு உலகம்; வாழ்க்கையை மாற்றும், பாதுகாப்புள்ள உலகம். அங்கே “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” (வச. 21). வன்முறைகள் எல்லாம் கடந்த காலமாய் மாறிவிடும்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை” (வச. 25).
ஏசாயா 65இல் பதிவாகியுள்ள இந்த பிரமிக்கத்தக்க படைப்புகள் எதிர்காலத்தில்தான் நடக்கப்போகிறது. அதை நடப்பிக்கும் தேவன் தற்போது வாழ்க்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்று உறுதியளிக்கிறார். சீரமைக்கப்படவேண்டிய தேவை உனக்கு இருக்கிறதா? சந்தேகம், கீழ்ப்படியாமை, வேதனை போன்றவற்றால் உன் வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறதா? இயேசு, வாழ்க்கையை சீரமைத்து அழகாய் மாற்றுவது நிஜம். அவரை நம்பி, அவரையே சார்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது சாத்தியமாகிறது.
கனமான ஆனால் நம்பிக்கையான
பீனட்ஸ் என்ற துண்டு நகைச்சுவை தொடரில், மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் லூசி ஐந்து சென்டுக்கு "மனநல உதவி" என்று விளம்பரம் செய்தார். லினஸ் அவளது அலுவலகத்திற்கு தனது வழியைக் கண்டுபிடித்தார் மற்றும் அவரது "ஆழ்ந்த மனச்சோர்வை" ஒப்புக் கொண்டார். அவரது நிலை குறித்து அவர் என்ன செய்ய முடியும் என்று அவர் அவளிடம் கேட்டபோது, லூசியின் விரைவான பதில், “அந்த நிலையிலிருந்து வெளிவரும்படியாக ! தயவுசெய்து ஐந்து சென்டுகள்” என்றார்.
இத்தகைய இலகுவான பொழுதுபோக்கு அப்போதைய தருணத்திற்கு புன்னகையைத் தரும் அதே வேளையில், நிஜ வாழ்க்கையில் நம்மைப் பிடிக்கக்கூடிய சோகமும், இருளும் அவ்வளவு எளிதில் நிராகரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையற்ற தன்மையும் மற்றும் விரக்தியின் உணர்வுகளும் உண்மையானவை, சில சமயங்களில் தொழில்முறை கவனம் தேவை.
உண்மையான வேதனையை நிவர்த்தி செய்ய லூசியின் ஆலோசனை உதவாது. இருப்பினும், 88-ஆம் சங்கீதத்தின் ஆசிரியர் அறிவுறுத்துதலையும் மற்றும் நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் வழங்குகிறார். ஒரு லாரி சுமை பிரச்சனைகள் அவரது வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. எனவே, கலங்கமில்லா நேர்மையுடன், அவர் தனது இருதயத்தை தேவனிடம் ஊற்றினார். "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளாத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." (வச. 3). "என்னை பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்" (வச. 6). "இருள் என் நெருங்கிய நண்பனாதது" (வச. 18). சங்கீதக்காரனின் வலியைக் கொண்டு நாம் கேட்கிறோம், உணர்கிறோம், அடையாளம் காணலாம். ஆனாலும், அது அல்ல. அவரது புலம்பல் நம்பிக்கையுடன் உள்ளது. “ என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உமது சமூகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். ”(வச. 1-2; வி.வி 9, 13 ஐ காண்க). கனமான விஷயங்கள் வர கூடும் ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் தேவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
தேவனுடன் போரை எதிர்கொள்வது
அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்."
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.
4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின் ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!
தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்
“தேவன் அழுகிறார்” பில் ஹேலியின் பத்து வயது மகள் இயேசுவில் பலதரப்பட்ட விசுவாசிகள் குழுவுடன் மழையில் நின்றபோது முணுமுணுத்த வார்த்தைகள் அவை. அவர்கள் தேவனைத் தேடவும், அமெரிக்காவிலுள்ள இன வேறுபாட்டின் மரபுகளை புரிந்துக்கொள்ளவும் வந்திருந்தனர். முன்னாள் அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் நின்றபோது அவர்கள் ஜெபத்தில் கைகோர்த்தார்கள். பின்னர் திடீரென்று காற்று வீசத் தொடங்கியது மழை பெய்யத் தொடங்கியது. தலைவர் இனரீதியான ஒற்றுமைக்காக அழைப்புவிடுத்தபோது மழை இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது. ஒற்றுமையையும், மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என கூடிவந்தவர்கள் நம்பினர்.
கல்வாரியிலும் அப்படியே நடந்தது - தேவன் செயல்பட்டு கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு தனது கடைசி சுவாசத்தை சுவாசித்தபோது, “பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது” (மத்தேயு 27: 51-52). இயேசு யார் என்பதை சிலர் நிராகரித்தாலும் அவரைக் காவல்செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நூற்றுக்கதிபதி வேறு முடிவெடுத்திருந்தார். “நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” (வச. 54)
இயேசுவின் மரணத்தில் தேவன் தன்னை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் பாவ மன்னிப்பை வழங்கும் வேலையில் இருந்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2 கொரிந்தியர் 5:19). ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்குவதை விட தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை நிரூபிக்க சிறந்த வழி வேறென்னென இருக்க முடியும்?
உங்கள் நற்கீர்த்தி என்ன?
உள்ளூர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில், டெட் அரங்கத்தில் மிக அதிகமாக பேசுபவராகவும் ஆதிக்கம் நிறைந்த நபராகவும் இருந்தார். ஒரு சீர்குலைக்க கூடிய நிலை அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவர் 6 அடி 6 அங்குலம் உயரமும் 130 கிலோவுக்கு அதிக எடையும் கொண்டவர். கூட்டத்தை தூண்டும் சேன்ட்சாட் பள்ளி நிகழ்வுகள் பழம் பெருமை வாய்ந்தவை.
ஆனால் டெட் தனது சமூகத்தில் புகழ் பெற்றது விளையாட்டில் உற்சாகம் ஊட்டுபவராக இருந்ததினால் அல்ல. ஒரு இளைஞனாக அனுபவித்த மது அடிமை தனத்தினாலும். கடவுள் மீது மற்றும் குடும்பத்தின் மீது அன்புக்காகவும், அவருடைய தாராள மனப்பான்மைக்காகவும், கருணைக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். 7 மணி நேரம் நடைபெற்ற அடக்க ஆராதனையில், நற்செய்தி மூலம் கிறிஸ்துவின் வல்லமையாலே இருளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதனின் துடிப்பான கிறிஸ்துவைப் போன்ற வழிகள் பற்றி சாட்சியம் அளிக்க ஒருவருக்குப் பின் ஒருவராக முன்வந்தனர்.
எபேசியர் 5:8ல் பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு நினைவுபடுத்துகிறார், “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்.” ஆனால் உடனேயே குறிப்பிட்டது என்னவென்றால், "இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்." இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே அழைப்பு. டெட் போன்ற ஒளியின் பிள்ளைகள் இந்த உலகின் இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிறைய வழங்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகள்” தவிர்க்கப்படவேண்டும். (பார்க்க வச. 3-4, 11) நம்முடைய சமூகங்களிலும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இயேசுவால் பிரகாசிக்கப்பட்டவர்களின் அற்புதமான தனித்துவமான சாட்சி தேவை. (வசனம் 14) என்பது ஒளி இருளில் இருந்து வேறுபட்டது போல எவ்வளவு தனித்துவமானது.