ஒரு மளிகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பரிவர்த்தனையை முடித்த பிறகு, நான் பில்லிங் கவுண்டருக்குச் சென்று எனது பொருட்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினேன். எதிர்பாராத விதமாக, ஒரு கோபமான நபர் என்னை எதிர்கொண்டார். வரிசையில் அவள் எனக்கு பின்பாக இருந்ததை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். என் தவறை உணர்ந்து, “மன்னிக்கவும்” என்று மனப்பூர்வமாகச் சொன்னேன். அவளோ, “இல்லை” என்று கோபமாக பதிலளித்தாள். 

நீங்கள் எப்போதாவது இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தவறுசெய்து, அதை ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முயற்சித்து, மன்னிப்பு கேட்டு, அந்த மன்னிப்பு நிராகரிக்கப்பட்டதுண்டா? தவறாகப் புரிந்துகொள்வது அல்லது தவறாக மதிப்பிடப்படுவது நல்லதல்ல. மேலும் நாம் புண்படுத்துபவர்கள் அல்லது நம்மை புண்படுத்துபவர்களுடன் நாம் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறோமோ, அவ்வளவு காயப்படவேண்டியிருக்கிறது. அவர்கள் நம் இதயங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்!

ஏசாயா 11:1-5இல், பரிபூரண தீர்ப்புக்கான ஞானத்துடன் தேவனால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரை பற்றிய செய்தியை ஏசாயா துரிதமாய் பதிவிடுகிறார். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்(கிறார்)” (வச. 3-4) என்று குறிப்பிடுகிறார். இது இயேசுவின் வாழ்விலும் ஊழியத்திலும் நிறைவேறியது. நம்முடைய பாவத்திலும் பலவீனத்திலும் நாம் அதை எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அனைத்தையும் பார்க்கும், அனைத்தையும் அறிந்த பரலோகத்தின் தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம்மை சரியாக நியாயந்தீர்க்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.