எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

நன்றியுள்ள ஜீவியம்

தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடையவும், இன்னும் அதிகமாக நன்றியறிதலுடன் இருக்கவும் விரும்பி, “நன்றியுள்ள ஜீவ ஜாடி” என்ற முறையை சூ (Sue) தொடங்கினாள். அதாவது, ஒவ்வொரு நாள் சாயங்காலமும், தான் தேவனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பும் ஒரு காரியத்தை ஒரு சிறு தாளில் எழுதி அதை அந்த ஜாடியில் போட்டு விடுவாள். ஒரு சில நாட்கள் துதி செலுத்தும்படி அநேக காரியங்கள் இருந்தன. ஆனால், கடினமான நாட்களில், நன்றி செலுத்த ஒரு காரியத்தை குறிப்பிடுவதுகூட மிக சிரமமாக இருந்தது. அந்த வருடத்தின் முடிவில் அந்த ஜாடியில் உள்ள எல்லா சீட்டுகளையும் எடுத்து வாசித்து பார்த்தபொழுது மறுபடியுமாக தான் தேவனுக்கு நன்றி தெரிவிப்பதை உணர்ந்தாள். ஏனெனில் தேவன் தனக்கு அளித்த ஒரு அருமையான சூரிய அஸ்தமன காட்சி மற்றும் ஒரு அருமையான மாலை வேளையை பூங்காவில் கழிக்கும் சந்தர்ப்பம், ஒரு கடினமான நிலைமையை எதிர்கொள்ள போதுமான கிருபை, மேலும் ஒரு ஜெபத்திற்கான பதில் ஆகியவை அதன் காரணம்.

சூவின் இந்த மனநிலைமை, சங்கீதக்காரனாகிய தாவீதின் மனநிலைமையை எனக்கு நினைவுபடுத்துகிறது (சங். 23). தேவன் அவனை ‘புல்லுள்ள இடங்களிலும்’, ‘அமர்ந்த தண்ணீர்களண்டையிலும்’ (வச. 2-3) திருப்தியாக்கினார். மேலும் அவர் அவனைப் பாதுகாத்து, ஆறுதல் அளித்து, வழிநடத்தினார் (வச. 3-4). “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 6) என்று தாவீது அச்சங்கீதத்தை நிறைவு செய்கிறான்.

நான், இந்த வருடம் ஒரு “நன்றியுள்ள ஜீவ ஜாடி” முறையை செய்யப் போகிறேன். ஒருவேளை நீங்களும் அதை செய்ய நினைக்கலாம். நமக்கு தேவன் அளித்த ஈவாகிய நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நன்றி செலுத்தலாம் அல்லது நம்முடைய அன்றாட தேவைகள் சந்திக்கப்பட்டதற்காகவும் நன்றி செலுத்தலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்த அநேக காரணங்கள் உண்டு. தேவனுடைய நன்மையும், அன்பும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம்மை பின்தொடர்வதை நாம் காணலாம்.

அவராலே நாம் மூடப்பட்டிருக்கிறோம்

கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை குறித்து பேசும் பொழுது, சில சமயம் நமக்கு விளங்காமலேயே அல்லது சரியாக விளக்காமல் சில வார்த்தைகளை உபயோகிக்கிறோம். அதில் ஒரு வார்த்தை தான் நீதிமான்! நம் தேவன் நீதிபரராயிருப்பதினால், அவர் நம்மை நீதிமானாக்குகிறார் என்கிறேன். ஆனால் இக்காரியத்தை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

நீதி என்னும் வார்த்தை சீன மொழியில் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் நமக்கு மிக உதவியாக இருக்கும். அவ்வார்த்தை, இரண்டு வார்த்தைகளை ஒருங்கிணைத்த ஒரு வார்த்தையாக உள்ளது. மேலே உள்ள வார்த்தை ‘ஆட்டுக்குட்டி’ கீழே உள்ள வார்த்தை ‘நான்’. ஆட்டுக்குட்டியானது அந்நபரை மூடிக்கொள்கிறது அல்லது அவனுக்கு மேல் உள்ளது.

இயேசு இப்பூமிக்கு வந்த பொழுது, யோவான் ஸ்நானகன் அவரைப் பார்த்து, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா. 1:29) என்று கூறினார். தேவனுடைய பண்பும், வழிகளும் எப்பொழுதும் சரியானதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதனால் நம்முடைய பாவம் அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. ஆகவே நம்முடைய பாவத்தை நீக்க வேண்டும். தேவன் நம்மை மிகவும் நேசித்ததினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21). ஜீவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு தன்னுடைய இரத்தத்தை சிந்தி தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அவராலே நாம் மூடப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை நீதிமானாய் மாற்றியதால், தேவனோடு நல்லுறவு கொள்ளும்படி உதவியுள்ளார்.

தேவன் முன் நீதியாய் இருப்பது என்பது அவராலே நமக்கு கிடைத்த ஈவு.

நீ எப்படி?

அவரவர் குடும்பங்களின் நன்றிகூறுதல் சம்பிரதாயங்கள்பற்றி, தன்னுடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை எமிலி கேட்டுக்கொண்டிருந்தாள். “நாங்கள் ஒவ்வொருவரும், அறைக்குள் சுற்றிவந்தவாறு, எந்தெந்த காரியங்களுக்கெல்லாம் தேவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோமோ அதைக் கூறுவோம்,” என்று கேரி (Gary) கூறினான்.

இன்னொரு நண்பன் அவர்கள் குடும்பத்தின் நன்றிகூறுதல் உணவைப்பற்றியும், ஜெபவேளை குறித்தும் கூறினான். தன் தந்தை இறப்பதற்கு முன் அவரோடிருந்த நேரங்களை நினைவுகூர்ந்தான்: “என் தந்தைக்கு டிமென்ஷியா (Dementia) என்னும் வியாதி இருந்தபோதிலும், அவர் தேவனுக்கு ஏறெடுத்த நன்றி ஜெபங்கள் தெள்ளத் தெளிவாய் இருக்கும்” என்றான். ராண்டி, “அந்த விடுமுறை நாளிலே என் குடும்பத்தில் ஒன்றாக பாடுவதற்கான சிறப்புப் பாடல் நேரம் இருந்தது. என் பாட்டி பாடிக்கொண்டே இருப்பார்கள்” என்று பகிர்ந்தான். இதையெல்லாம் கேட்ட எமிலி தன் குடும்பத்தை நினைத்த பொழுது துக்கமும், பொறாமையும் கொண்டவளாய், “எங்க வீட்டு சம்பிரதாயப்படி வான்கோழி சாப்பிடுவோம், டிவி பார்ப்போம், தேவனைப்பற்றியோ நன்றிகூறுவது பற்றியோ பேசவே மாட்டோம்” என்று புலம்பினாள்.

அப்படிச் சொன்னவுடன், அவளுடைய மனப்பான்மையை எண்ணி சஞ்சலப்பட்டாள். ‘நீ அந்த குடும்பத்தில் ஒருத்தி. மாற்றங்களை கொண்டுவர, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளுடைய சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களுக்காகத் தான் தேவனுக்கு நன்றி செலுத்துவதாக அவர்களிடம் கூற முடிவு செய்தாள். அந்த நாள் வந்த பொழுது, அப்படியே செய்தாள். அவர்கள் அனைவரும் அவள் அன்பை உணர்ந்தார்கள். இது மிக சுலபமான ஒன்றல்ல, ஏனெனில் அவள் வீட்டில் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை, ஆனால் அவளுடைய அன்பை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டபொழுது, அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள்.

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று பவுல் எழுதியுள்ளார் (எபே. 4:29). மற்றவர்களிடம் நாம் கூறும் நன்றியுள்ள வார்த்தைகள், நாமும் தேவனும் அவர்கள் மேல் வைத்துள்ள மதிப்பை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.

இன்றைய வேதாகமப் பகுதி

பிறருடைய கவனத்தை ஈர்க்க கெரி (Kerri) மிகவும் சிரமப்பட்டாள். மற்றவர்கள் அவளது செயல்களை ரசித்து பாராட்ட வேண்டும் என்றும் விரும்பி, எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொண்டாள். சமுதாயத்தில் சிலருக்கு அவள் உதவுவதை பார்த்துப் பலர் பாராட்டினர். ஆனால் மனந்திறக்கும் சில சமயங்களில் “நான் தேவனை நேசிக்கிறேன், ஆனால் என் வாழ்க்கை வெறும் முன் தோற்றமே” என கெரி தன்னுடைய உண்மையான நிலையை ஒத்துக்கொள்வாள். அவளது பாதுகாப்பின்மை தான் இதற்கெல்லாம் காரணம். பிறரது பாராட்டுதலுக்காக அவள் நல்லவளாகத் தன்னை எப்போதும் காண்பித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அப்படிச் செய்வதினால் அதிகமாக உழைத்து மனதளவில் பலவீனமடைந்து கொண்டிருந்தாள்.

இப்படித்தான் நாமும் சில நேரங்களில் செயல்படுகிறோம். ஏனெனில் எப்பொழுதும் நாம் சரியான உள் நோக்கத்துடன் செயல்படுவதில்லை. நிச்சயமாக நாம் தேவனையும், பிறரையும் நேசிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் செய்யும் பல காரியங்களை பிறருடைய நல் மதிப்பையும் மரியாதையையும் பெறவே செய்கிறோம்.

மற்றவர்கள் காணும்படியாக நாம் கொடுப்பது, ஜெபிப்பது, உபவாசிப்பது (மத். 6:1-6) குறித்து மலைப்பிரசங்கத்தில் இயேசு, “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக”, “அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு”, “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக” (வச. 3,6,17) என போதித்தார்.

இந்நாட்களில் உதவி செய்வதை பகிரங்கப்படுத்துகின்றனர். ஆனால் பெயரைக் கூடச் சொல்லாமல் செய்யும் வேலைகள் தேவன் நம்மைக்குறித்து வைத்திருக்கும் எண்ணத்தில் தங்கி இளைப்பாறக் கற்றுக்கொள்ள உதவும். அவரது சாயலில் நம்மை படைத்தார். நம்மை அந்த அளவிற்கு விலையேறப்பெற்றவர்களாய்க் கருதியதினால் தான் அவரது ஒரே பேறன குமாரனை நமக்களித்து அவரது அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்.

நாம் செய்யத்தான் வேண்டுமா?

ஜோய், சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை ஜெபத்துடன் ஆரம்பித்தாள். சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பாட்டுக்களைப் பாடினாள். ஆரோன் என்பவரை அச்சிறுவர்களுக்கான ஆசிரியர் என்று ஜோய் அறிமுகப்படுத்திவிட்டு மறுபடியும் ஜெபித்தபொழுது, 6 வயது இம்மானுவேல் அவனது இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். பின்பு ஆரோன் பேசத்துவங்கி, பேச்சை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடித்தான். உடனே இம்மானுவேல், “இத்துடன் இது நாலாவது ஜெபம். அவ்வளவு நேரம் என்னால் இருக்கையில் அமர்ந்திருக்க இயலாது” என்று புகார் செய்தான்.

இம்மானுவேலுக்கு இருந்த நிலை கடினமானதுதான் என்று நீங்கள் எண்ணினால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்,” என்று 1 தெசலோனிக்கேயர் 5:17ல் கூறப்பட்டதைக் கவனியுங்கள். அல்லது எப்பொழுதும் ஜெப ஆவியுடன் இருங்கள் என்பதையும் கவனியுங்கள். பெரியவர்களாகிய நம்மில் சிலருக்குக் கூட ஜெபம் சலிப்புண்டாக்கும் செயலாக இருக்கலாம். ஏனென்றால் நாம் ஜெபத்தில் கூறவேண்டிய காரியங்களை அறியாமல் இருக்கலாம். அல்லது ஜெபம் என்பது நாம் நம்முடைய பரலோகப் பிதாவுடன் உரையாடும் நிகழ்ச்சி என்று அறியாமல் கூட இருக்கலாம்.

17ம் நூற்றாண்டில், ஃபிராங்காயிஸ் ஃபெனிலோன் ஜெபத்தைப்பற்றி எழுதிய சில வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. “ஒரு சிநேகிதனிடம் உங்களது இருதயத்திலுள்ள பாரங்களை அதாவது, உங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷமான, வேதனையான காரியங்கள் அனைத்தையும் கூறுவதுபோல தேவனிடம் கூறுங்கள். உங்களைச் சோதிக்கும் சோதனைகளை அவரிடம் கூறுங்கள். அவர் அவைகளிலிருந்து உங்களை மறைத்துப் பாதுகாப்பார். உங்களது இருதயத்திலுள்ள காயங்களை அவரிடத்தில் காண்பியுங்கள். அவர் உங்களது காயங்களைக் குணப்படுத்துவார். இப்படியாக உங்கள் பலவீனங்கள், தேவைகள், கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் ஊற்றும்போது, ஜெபத்தில் என்ன கூறவேண்டும் என்பதற்கு குறைவே இருக்காது.”

ஒரு நீர்குமிழி இடைவேளை

நானும்,  என்னுடைய கணவர் கார்லும் (Carl) அட்லாண்டிக் சிட்டி (Atlantic City) மர நடைபாதையில் நடந்து கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஓடிய ஒரு சிறுவன் எங்கள் மேல் நீர்க்குமிழிகளை பொழிந்து சென்றான். எங்களுக்கு சிரமமான அந்நாளின் மகிழ்ச்சிகரமான இலகுவான ஒரு தருணம் அது. மருத்துவமனையில் உள்ள என் கணவருடைய மைத்துனரைக் காணவும்,  மருத்துவரை சந்திக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய சகோதரிக்கு உதவும் படியாகவும் நாங்கள் அப்பட்டணத்திற்கு வந்திருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் தேவைகளினால் சிறிது திணறியதால்,  சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படியாக,  கடலோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தோம்.…

மன உறுதியுடன் செயல்படுபவர்கள்

2015ம் ஆண்டு கோடைகாலத்தில் ஹண்டர் என்ற 15 வயது சிறுவன் பிரேடன் என்ற 8 வயது சகோதரனை சுமந்துகொண்டு, மூளைப்பாதிப்பு ஏற்பட்ட மக்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 58 மைல்கள் நடந்து சென்றான். பிரேடன் 60 பவுண்டு எடை உள்ளவனாக இருந்ததால், ஹண்டர் இடை இடையே அடிக்கடி நின்று ஓய்வு எடுத்தான். அப்படி ஓய்வு எடுத்த இடங்களிலிருந்த மக்கள், அவனது சதைப்பிடிப்பை நீக்குவதற்கு உதவிசெய்தார்கள். பிரேடனின் எடையைக் குறைக்க ஹண்டர் சிறப்பான வார்ப்பட்டையை அணிந்திருந்தான். சரீரப்பிரகாரமாக ஏற்படும் உடல்வலியை குறைக்க அந்த சிறப்பு வார்ப்பட்டை…

உடன் வருதல்

மி’அஸ்யா மிகவும் நடுக்கத்துடன் மேடையை நோக்கி நடந்துசென்று, தன் முப்பது சக மாணவர்கள், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் ஐந்தாவது வகுப்பு பட்டமளிப்பு விழாவில் பேசப்போவதை அனைவரும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி முதல்வர் ஒலிப்பெருக்கியை மி’அஸ்யாவின் உயரத்திற்கு ஏற்றாற்போல் சீர்செய்து வைத்தபொழுது, ஒலிப்பெருக்கிக்கும், பார்வையாளர்களுக்கும் தன் முதுகைக்காட்டி மறுபுறம் திருப்பிக்கொண்டார். “தேன் போன்று இனிமையானவளே பயப்படாதே, உன்னால் பேசமுடியும், பேசு” என்று கூட்டத்தில் இருந்த அனைவரும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் அவளோ சிறிதும் அசையவில்லை. அப்பொழுது அவள் சகமாணவி மேலே சென்று அவளருகே நின்றுகொண்டாள். முதல்வர் ஒருபுறமும்,…

நான் சொல்வதை மறுபடியும் திரும்பச் சொல்

ரெபேக்கா ஓர் மாநாட்டின் மேடையில் ஒலிபெருக்கி முன் நின்று பேசியபொழுது, அவள் பேசியது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அவள் பேசிய வார்த்தைகளையே அவள் திரும்பக் கேட்டபொழுது சற்று சிரமமாக இருந்தது. இந்தத் தவறான ஒலி அமைப்பு முறையை அவள் சீர்செய்து, அந்த எதிரொலியை கவனிக்காமல் விட்டுவிட முயற்சித்தாள்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், திரும்பவும் நாமே கேட்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! “நான் உன்னை நேசிக்கிறேன்,” அல்லது “நான் செய்தது தவறு” அல்லது “உமக்கு நன்றி, தேவனே” அல்லது…