தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடையவும், இன்னும் அதிகமாக நன்றியறிதலுடன் இருக்கவும் விரும்பி, “நன்றியுள்ள ஜீவ ஜாடி” என்ற முறையை சூ (Sue) தொடங்கினாள். அதாவது, ஒவ்வொரு நாள் சாயங்காலமும், தான் தேவனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பும் ஒரு காரியத்தை ஒரு சிறு தாளில் எழுதி, அதை அந்த ஜாடியில் போட்டு விடுவாள். ஒரு சில நாட்கள் துதி செலுத்தும்படி அநேக காரியங்கள் இருந்தன. ஆனால், கடினமான நாட்களில், நன்றி செலுத்த ஒரு காரியத்தை குறிப்பிடுவதுகூட மிக சிரமமாக இருந்தது. அந்த வருடத்தின் முடிவில் அந்த ஜாடியில் உள்ள எல்லா சீட்டுகளையும் எடுத்து வாசித்து பார்த்தபொழுது மறுபடியுமாக தான் தேவனுக்கு நன்றி தெரிவிப்பதை உணர்ந்தாள். ஏனெனில் தேவன் தனக்கு அளித்த ஒரு அருமையான சூரிய அஸ்தமன காட்சி மற்றும் ஒரு அருமையான மாலை வேளையை பூங்காவில் கழிக்கும் சந்தர்ப்பம், ஒரு கடினமான நிலைமையை எதிர்கொள்ள போதுமான கிருபை, மேலும் ஒரு ஜெபத்திற்கான பதில் ஆகியவை அதன் காரணம்.

சூவின் இந்த மனநிலைமை, சங்கீதக்காரனாகிய தாவீதின் மனநிலைமையை எனக்கு நினைவுபடுத்துகிறது (சங். 23). தேவன் அவனை ‘புல்லுள்ள இடங்களிலும்’, ‘அமர்ந்த தண்ணீர்களண்டையிலும்’ (வச. 2-3) திருப்தியாக்கினார். மேலும் அவர் அவனைப் பாதுகாத்து, ஆறுதல் அளித்து, வழிநடத்தினார் (வச. 3-4). “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 6) என்று தாவீது அச்சங்கீதத்தை நிறைவு செய்கிறான்.

நான், இந்த வருடம் ஒரு “நன்றியுள்ள ஜீவ ஜாடி” முறையை செய்யப் போகிறேன். ஒருவேளை நீங்களும் அதை செய்ய நினைக்கலாம். நமக்கு தேவன் அளித்த ஈவாகிய நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நன்றி செலுத்தலாம் அல்லது நம்முடைய அன்றாட தேவைகள் சந்திக்கப்பட்டதற்காகவும் நன்றி செலுத்தலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்த அநேக காரணங்கள் உண்டு. தேவனுடைய நன்மையும், அன்பும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம்மை பின்தொடர்வதை நாம் காணலாம்.