தேவன் நம்மை நிரப்பும் போது
நான் என்ன செய்தேன்? இது என் வாழ்வை மிகவும் களிகூரச் செய்த நேரமாயிருந்திருக்க வேண்டும். அதிலும் நான் தனிமையில் தள்ளப்பட்ட நேரம், என்னுடைய கல்லூரி படிப்பிற்குப் பின்னர் எனக்கு கிடைத்த முதல் வேலை. நான் வளர்ந்த பட்டணத்திலிருந்து சில நூறு மைல்களுக்கப்பால் உள்ள ஓர் இடத்தில் கிடைத்தது. ஆனால் அந்த முதல் அடியின் சுகம் சீக்கிரத்தில் மறைந்தது. எனக்கு ஒரு சிறிய தங்கும் இடம் கிடைத்தது. அதில் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இல்லை. அந்தப் பட்டணம் நான் இதற்கு முன் அறியாத இடம். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. அந்த வேலை எனக்கு ஆர்வமளிப்பதாக இருந்தும், தனிமை என்னை மிகவும் வாட்டியது.
ஓர் இரவில் நான் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய வேதாகமத்தைத் திறந்தேன். சங்கீதம் 16ல் நிலைத்து விட்டேன். அதில் வசனம் 11ல் தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு எனக் கூறுகிறது. நான், தேவனே இந்த வேலை எனக்குச் சரியானது தான். ஆனால் நான் தனிமையை உணருகிறேன். தயவு கூர்ந்து நான் உம்முடைய சமூகத்தை உணரும்படிச் செய்யும் என ஜெபித்தேன். நான் இந்த வேண்டுதலை வெவ்வேறு வகைகளில் சில வாரங்களாகச் செய்தேன். சில இரவுகள் கடந்த போது என்னுடைய தனிமை உணர்வு சற்று தணிந்தது. நான் தேவனுடைய பிரசன்னத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். சில இரவுகளில் தனிமையாகப் பிரிக்கப்பட்ட வேதனையை இன்னும் உணர்கிறேன்.
நான் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு இரவும் என் இருதயம் இந்த வசனத்தில் நிலைத்து விடும். தேவன் படிப்படியாக என் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அவருடைய உண்மையை, இதற்கு முன் அனுபவியாத விதத்தில் உணர்ந்தேன். என்னுடைய வேலை, என்னுடைய இருதயத்தை நான் அவரிடம் ஊற்றும்படியாக கொடுக்கப்பட்ட வேலை என்பதைக் கற்றுக் கொண்டேன். அவருடைய வாக்கின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய ஆவியில் என்னை நிரப்பும்படி, நான் பொறுமையாக அவருடைய செயலுக்காகக் காத்திருக்கின்றேன்.
எட்டுக்கால் பூச்சியும், தேவனுடைய பிரசன்னம்
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் ... தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்... வேண்டிக்கொள்கிறேன். எபேசியர் 3:16-19. எட்டுக்கால் பூச்சிகள் - எந்தவொரு குழந்தையும் இவற்றை விரும்புவதில்லை. அதுவும் அவர்கள் தூங்கப் போகும் நேரத்தில் அவர்கள் அறையில் இருப்பதை விரும்புவதில்லை. என்னுடைய மகள் தூங்குவதற்கு தயாராகும் போது அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் ஒன்றைக் கண்டுவிட்டாள். அப்பா... எட்டுக்கால் பூச்சி... எனக் கத்தினாள். எத்தனைத் தேடியும் அந்த எட்டுக்கால் பூச்சியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அது உன்னைக் கடிக்காது என்று அவளுக்கு உறுதியளித்தேன். ஆனால் அவள் நம்பவில்லை. நான் அவளின் படுக்கைக்கு அருகிலேயே காவல் இருக்கிறேன் என்று சொன்ன பின்பு தான், ஏற்றுக் கொண்டாள். நான் அவள் படுக்கையினருகில் நின்று கொண்டிருக்க, அவள் தன் படுக்கைக்குச் சென்றாள்.
என்னுடைய மகள் படுத்தப்பின்பு நான் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நான் உன்னருகிலேயே இருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். தேவன் உன்னை அம்மாவையும் அப்பாவையும் விட அதிகமாக நேசிக்கின்றார். அவர் உனக்கு மிக அருகில் இருக்கின்றார். நீ பயப்படும் போதெல்லாம் அவரிடம் ஜெபி என்றேன். அது அவளைத் தேற்றுவதாக இருந்தது. அவளும் சமாதானத்துடன் சீக்கிரத்தில் தூங்கி விட்டாள்.
தேவன் நம் அருகிலேயே இருக்கிறாரென வேதாகமம் திரும்பத் திரும்ப நமக்கு உறுதியளிக்கின்றது (சங். 145:18, ரோ. 8:38-39. யாக். 4:7-8). சில வேளைகளில் நாம் இதை நம்புவதற்குத் தடுமாறுகிறோம். எனவே தான் பவுல் எபேசு சபை விசுவாசிகள் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்பட்டு உண்மையை புரிந்து கொள்ளும்படி ஜெபம் செய்கிறார். நாம் பயந்தோமாகில் தேவனுடைய பாதையை விட்டு விலகி விடுவோம். நான் என் மகளின் கரத்தை அன்போடு பற்றியபோது அவள் அமைதியாக அன்றிரவு தூங்கிவிட்டதைப் போன்று ஜெபத்தின் மூலம் நம்முடைய பரலோகத் தந்தையும் நம் அருகில் வந்திருக்கின்றார்.
சந்தர்ப்பதினுள் அடியெடுத்து வைத்தல்
அநேகரைப் போல நானும் போதிய உடற்பயிற்சி கிடைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்தேன். சமீபத்தில், நான் நடப்பதற்கு என்னை ஊக்குவிப்பதற்கு எனக்கொன்று கிடைத்தது - அது நடையை எண்ணும் கருவி. இது ஒரு எளிய முறை. ஆனால் வியத்தகு வகையில் இந்த கருவி என்னை ஊக்குவிக்கின்றது. படுக்கையிலிருந்து எழும்புவதற்கு முறுமுறுப்பதை விட்டு விட்டு, ஒரு சில அடிகள் நடப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனக் கருத முடிந்தது. என்னுடைய குழந்தைக்கு ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தல் போன்ற அனுதின வேலைகளைச் செய்வது என்னுடைய இலக்கினை அடைய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த வகையில், என்னுடைய கருவி என்னுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் மாற்றி விட்டது. இப்பொழுது நான் இன்னும் அதிகம் நடக்க எப்பொழுதெல்லாம் முடியும் என எதிர்பார்த்திருக்கிறேன்.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வும் சற்று இதனைப் போன்ற ஒன்றுதான் என நான் அதிசயிக்கிறேன். கொலோசெயர் 4:5ல் பவுல் கொடுக்கும் ஆலோசனைப்படி பிறரை அன்பு செய்யவும், அவர்களுக்கு உதவவும், அவர்களோடு உறவாடவும் நமக்கு அனுதினமும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய வாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வுடையவர்களாக இருக்கிறோமா? தினமும் உரையாடல்களுக்கு கவனம் செலுத்தி பிறரை ஊக்கப்படுத்துபவனாகக் காணப்படுகின்றேனா? நாம் தொடர்பு கொள்கிற நமது உறவினர், உடன் வேலை செய்வோர், மளிகை கடையிலுள்ள கணக்கர் போன்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் தேவன் நம்மூலம் கிரியை செய்கின்றார். ஒவ்வொரு உரையாடலும் தேவன் செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு சிற்றுண்டி சாலையில் பணிபுரியும் பணியாளரை பரிவோடு விசாரித்தல் போன்ற சிறிய காரியங்களையும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.
தேவன், நம் அனுதின வாழ்வில் தருகின்ற வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அவை தேவன் செயல்படும் கணங்களாக இருக்கலாமே!
வாக்களிக்கும் வாக்குத்தத்தங்கள்
என்னுடைய இளைய மகளும் நானும் சேர்ந்து ஆடும் ஒரு விளையாட்டை ‘பின்சர்ஸ்’ என்று அழைப்போம். அவள் மாடிப்படிகளில் மேலே செல்லும்போது, நான் அவளைத் துரத்திப் பிடித்து ஒரு சிறிய ‘கிள்ளு’ கொடுப்பேன். விதி என்னவெனின், நான் அவளை படிக்கட்டிலேறும் போது மட்டும் தான் கிள்ள வேண்டும். (அதுவும் மெதுவாக) அவள் படியேறி மேலே சென்றுவிட்டால் அவள் பாதுகாப்பாகி விடுவாள். சில வேளைகளில் அவளுக்கு விளையாடக் கூடிய எண்ணம் இல்லாதிருக்கும் போது, நான் அவளைத் தொடர்ந்து படியேறிவிட்டால், அவள் உறுதியாகச் சொல்லிவிடுவாள், “கிள்ளு கிடையாது” என்று நானும் சம்மதித்து, “கிள்ளு கிடையாது, நான் வாக்களிக்கிறேன்” என்பேன்.
இன்றைய காலங்களில் இந்த வாக்குகொடுத்தல் ஒரு சிறிய காரியமாகிவிட்டது. நான் என்ன சொல்லுகிறேனோ அதைச் செய்யும் போது, என் மகள் என்னுடைய குணத்தைக் குறித்துச் சற்று புரிந்து கொள்கின்றாள். என்னுடைய நிலையான குணத்தை அறிந்து கொள்கின்றாள். என் வார்த்தைகள் நலமானவை, எனவே என்னை நம்பலாம் என்று அவள் தெரிந்து கொள்கின்றாள். நாம் வாக்களித்ததை செயல்படுத்துவது என்பது ஒரு சிறிய காரியம்தான். ஆனால், வாக்குகளும் அவற்றைச் செயல்படுத்துவதும்தான் உறவுகளை வளர்க்கின்றன என நான் சொல்லுவேன். அவைதான் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் அடித்தளம்.
இப்படியே பேதுருவும் கருதுகின்றார். எனவே தான் அவர், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்மை “அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படி (2 பேதுரு 1;4) பெலப்படுத்துகிறது என எழுதுகிறார். தேவனை, அவருடைய வார்த்தையால் ஏற்றுக்கொண்டு, அவரைக் குறித்தும், நம்மைக் குறித்தும் கூறப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை நாம் நம்பும் போது, அவருடைய இருதயம் நமக்கு நேராகத் திருப்பப்படுவதைக் காண்கிறோம். நாம் அவருடைய உண்மையான வார்த்தைகளைச் சார்ந்து இருக்கும்போது அவர் உண்மையுள்ளவர் என்பதை நமக்கு வெளிப்படுத்த அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். வேதாகமம் அவருடைய வாக்குத்தத்தங்களால் நிறைந்துள்ளதால் நன்றியோடிருப்போம். நினைப்போம், “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (புல. 3:22-23).
பணிவிடைக்காரன் உள்ளத்தை வளர்த்துக்கொள்ளல்
அது ஒரு நீண்ட வேலைநாள். நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நல்ல தந்தையாக மற்ற வேலைகளைத் துவக்குவதற்கான நேரம் அது. என் மனைவி, குழந்தைகளின் வரவேற்பு, அப்பா இரவு உணவுக்கு என்ன செய்வது? அப்பா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா? அப்பா, நாம் கால்பந்து விளையாடலாமா? என்பதாக அமைந்தது.
நான் சற்று நேரம் உட்கார எண்ணினேன். நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க சிறிது விரும்பியபோதும் என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிபுரிய நான் விரும்பவில்லை. எங்கள் ஆலயத்திலுள்ள ஒருவரிடமிருந்து என் மனைவி பெற்றிருந்த ஒரு நன்றி அட்டையை அப்பொழுது நான் பார்த்தேன். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு துவாலை, அழுக்கான செருப்புகள் அடங்கிய ஒரு படம் இருந்தது. அதன் அடிப்பகுதியில் லூக்கா 22:27ல் உள்ள வாசகம், “ நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறனே;” இருந்தது.
தாம் தேடவும் ரட்சிக்கவும் (லூக். 19:10) வந்தவர்களுக்குப் பணிவிடைக்காரனைப் போலிருந்தார் என்ற வார்த்தைகளே என்னுடைய அப்போதையத் தேவையாயிருந்தது. இயேசுவே தன்னுடைய சீடர்களின் அழுக்கடைந்த கால்களைக் கழுவுதலாகிய இழிவான வேலையைச் செய்ய சம்மதிக்கும் போது,
(யோவான். 13:1-17) நான் என் மகனுக்கு ஒரு குவளைத் தண்ணீரை முறுமறுக்காமல் கொடுக்கலாம். அந்நேரமே என் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிசெய்தவை ஒரு கடமையாகயல்ல, இயேசுவின் பணிவிடைகாரனின் உள்ளத்தை பிரதிபலிப்பவனாகச் செய்தேன். நம்மிடம் உதவிகள் கேட்கப்படும்போது, அவைகளை, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பணிவிடை செய்து, தன்னுடைய ஜீவனையே நமக்காகத் தந்தவரைப் போல மாறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளாகக் கருதுவோம்.