பிதாவின் இருதயத்தைக் குறித்த தீர்க்கமான ஒரு போதனையை பல் மருத்துவமனையில் நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் கிடைத்தது. என் பத்து வயது மகனை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவனுடைய பால் பல் ஒன்று விழுவதற்கு முன்பே, அதனடியில் புது பல் முளைக்க ஆரம்பித்திருந்த்து. பால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

“அப்பா, இதற்கு வேறு வழியே இல்லையா? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா? இந்தப் பல்லை பிடுங்க வேண்டாம்பா,” என்று என் மகன் கண்ணீரோடு என்னிடம் கெஞ்சினான். எனக்கு அதிகக் கஷ்டமாக இருந்தாலும், “இல்லை, மகனே, அதை எடுத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை” என்று கூறினேன். பல் மருத்துவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பல்லைப் பிடுங்கும்போது, அவன் வேதனையில் துடித்ததால், நானும் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவன் வலியை நீக்க என்னால் முடியாது. அவன் அருகில் இருப்பது மட்டுமே என்னால் முடிந்த காரியம்.

அந்தத் தருணத்தில் கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் மன்றாடியது என் நினைவுக்கு வந்தது. தனக்குப் பிரியமான தன் குமாரன் துக்கத்தில் இருப்பது பிதாவை எவ்வளவு மனம் உடையச் செய்திருக்கும். ஆனாலும் அவருடைய ஜனங்களை மீட்க வேறு வழி இல்லை.

நம் வாழ்க்கையில், என் மகன் எதிர்கொண்டதுபோல, நாமும் சில வேளைகளில் தவிர்க்க முடியாத, வேதனையான தருணங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு நமக்காக இடைபடுவதால், எப்போதும், நம்முடைய இருண்ட வேளைகளிலும்கூட, நமது அன்பின் பரமபிதா நம்மோடு இருக்கிறார் (மத். 28:20).