பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குவார்ட்டரில் எனது வார இறுதியை இராணுவ அணிவகுப்பு, அருங்காட்சியகத்தைப் பார்வையிடல் மற்றும் பொறித்த மீன்களைச் சுவைப்பது என்று செலவிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனது நண்பரின் அறையில் நான் தூங்கியபோது, என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்கினேன். பிற நகரங்களில் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை நான் மகிழ்ந்து அனுபவிக்கிறேன், ஆனால் வீட்டில் இருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும்.
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு அம்சம் சில சமயங்களில் கவனிக்கப்படாமல் இருக்கும்; அவருடைய மிக முக்கியமான எத்தனையோ நிகழ்வுகள் சாலையில்தான் நிகழ்ந்தன என்பதே. பெத்லகேமில் தேவனுடைய குமாரன் நம் உலகில் பிறந்தார், அவருடைய பரலோக வீட்டிலிருந்து கணக்கிட முடியாத தூரம் மற்றும் அவரது குடும்பத்தின் சொந்த ஊரான நாசரேத்திலிருந்து வெகு தொலைவில் இது உள்ளது. பெத்லகேம் நகரம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நிரம்பி வழிய, விரிவாக்கப்பட்ட இக்குடும்பமும் வருகிறது, எனவே ஒரு உதிரி கெடாலிமா (கிரேக்க வார்த்தை) அல்லது “விருந்தினர் அறை” கூட கிடைக்கவில்லை என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 2:7).
இயேசுவின் பிறப்பில் இல்லாத ஒன்று, அவருடைய மரணத்திலிருந்தது. இயேசு தம் சீடர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்குத் தயார் செய்யும்படி கூறினார். அவர்கள் ஒரு குடத்தை எடுத்துச் செல்லும் மனிதனை அவரது வீட்டிற்குப் பின்தொடர்ந்து, கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் இறுதி இராபோஜனத்தை புசிக்கக்கூடிய விருந்தினர் அறையான “கெடாலிமா”வை அதன் உரிமையாளரிடம் கேட்க வேண்டும் (22:10-12). அங்கு, இரவல் வாங்கிய இடத்தில், இயேசு இப்போது ஐக்கிய பந்தி என்று அழைக்கப்படுவதை ஏற்படுத்தினார். அவர் கொடூரமாகச் சிலுவையில் அறையப்படுவதை இது முன்னறிவித்தது (வ.17-20).
நாம் வீட்டை நேசிக்கிறோம், ஆனால் நாம் இயேசுவின் ஆவியானவருடன் பயணித்தால், ஒரு விருந்தினர் அறை கூட அவருடன் ஐக்கியம் கொள்ளும் இடமாக மாறும்.
உங்களுக்கான மிகவும் அர்த்தமுள்ள தருணங்கள் எங்கே நிகழ்ந்தன, அவற்றை மறக்கமுடியாததாக மாற்றியது எது? நீங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும்போது, இந்த தற்காலிகமான குடியிருத்தலை கிறிஸ்துவுக்காக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?
வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள யாத்திரிகரின் நண்பரான இயேசுவே, நீர் எப்போதும் என்னுடன் இருப்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவும்.