Archives: அக்டோபர் 2024

சோ்ந்திருந்து மலைகளை மேற்கொள்ளுதல்

இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: "நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?

ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும்  வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சமுதாய ஆதரவு" முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.

யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு  கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், "தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது" (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். "அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.

நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, ​​நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.

தீங்கின் வழியில்

எனது காலை நடைப்பயிற்சியின் போது, ​​தவறான திசையில் ஒரு வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டதைக் கவனித்தேன். ஓட்டுநர் தூங்கியதாலும், மது போதையிலிருந்ததாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் ஆபத்து குறித்து அறியவில்லை. நிலைமை ஆபத்தானது, நான் செயல்பட வேண்டியிருந்தது. அவளை விழிப்பூட்டி வாகனத்தின் பயணிகள் பக்கத்திற்கு நகர்த்திய பிறகு, நான் ஓட்டுநர் இருக்கையில் ஏறினேன், நான் அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு ஒட்டி சென்றேன்

உடல் சார்ந்த ஆபத்து மட்டுமே நாம் எதிர்கொள்ளும் தீங்கு அல்ல. அத்தேனேவில் உலக ஞானமும் புத்திசாலித்தனமும் நிரைந்த ஜனங்கள் ஆவிக்குரிய ஆபத்தில் இருப்பதை பவுல் பார்த்தார், காரணம் ​​​​"பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது" அவர் "தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தார்" (அப்போஸ்தலர் 17:16). கிறிஸ்துவைக் கருத்தில் கொள்ளாமல் தவறான கருத்துக்களுடன் சுற்றித்திரிபர்களுக்கு அப்போஸ்தலனின் உள்ளார்ந்த பதில், இயேசுவின் மூலமாகவும் இயேசுவுக்குள்ளாகவும் தேவனுடைய நோக்கங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதாகும் (வ.18, 30-31). கேட்ட சிலர் நம்பினர் (வ.34).

கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வாழ்வின் மெய்யான அர்த்தத்தைத் தேடுவது ஆபத்தானது. இயேசுவில் மன்னிப்பையும் மெய்யான நிறைவையும் கண்டவர்கள், மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டு ஒப்புரவாகுதலின் செய்தியைப் பெற்றுள்ளனர் (பார்க்க 2 கொரிந்தியர் 5:18-21). இந்த உலக வாழ்க்கையின் மயக்கத்தில் இருப்பவர்களுடன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது, தீங்கிழைக்கும் வழியிலிருந்து ஜனங்களைத் தட்டிப்பறிக்கத் தேவன் இன்னும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.

எப்போதும் ஜெபியுங்கள்

தேர்வில் எனக்கு 84 மதிப்பெண் கிடைத்தது! என் வாலிப மகளின் குறுஞ்செய்தியை என் அலைபேசியில் படித்த போது அவளது உற்சாகத்தை உணர்ந்தேன். அவள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினாள், மதிய உணவு இடைவெளியில் அவளுடைய அலைபேசியைப் பயன்படுத்தினாள். என் மகள் ஒரு சவாலான தேர்வில் சிறப்பாகச் செய்ததால் மட்டுமல்ல, அதை என்னிடம் தெரிவிக்க அவள் விரும்பியதால்  என் அம்மாவின் இதயம் துள்ளியது. அவள் தன்னுடைய நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாள்!

அவளுடைய செய்தி எனது நாளை மகிழ்ச்சியாக்கியதை உணர்ந்து, நான் தேவனை அணுகும்போது அவர் எவ்வாறு உணர கூடும் என்று நான் பின்னர் சிந்தித்தேன். நான் அவருடன் பேசுகையில் அவர் மகிழ்வாரா? ஜெபம் என்பது நாம் தேவனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதும், "இடைவிடாமல்"  (1 தெசலோனிக்கேயர் 5:17) செய்யச் சொல்லப்பட்ட ஒன்றுமாகும். அவருடன் பேசுவது, நன்மை தீமையில் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் நம்மைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் நம் காரியங்களைத் தேவனுடன் பகிர்வது  நம் கவனத்தைத் திசைதிருப்பி, அவரைப் பற்றிச் சிந்திக்க உதவுகிறது. ஏசாயா 26:3 கூறுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” நாம் தேவனிடமாய் கவனத்தைத் திரும்புகையில், நமக்குச் சமாதானம் காத்திருக்கிறது.

நாம் எதை எதிர்கொண்டாலும், தேவனுடன் தொடர்ந்து பேசி,  நம் சிருஷ்டிகரும் இரட்சகருமானவருடன் இணைப்பில் இருப்போமாக. ஒரு ஜெபத்தை முணுமுணுத்து, "நன்றி செலுத்தவும்", மகிழ்ச்சி கொள்ளவும்  மறவாதிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் கூறுகிறார், இது நம்மைக் குறித்து "தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:18).

எல்லைகளைக் கடந்த அன்பு

“தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருந்தார்! எங்கள் திருமண  ஆண்டுவிழாவிற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்"  ராதாவின் குரல் சீராக இருந்தது, அவள் கண்களில் கண்ணீர் அவளது உண்மையைக் காட்டியது. எங்களுடைய சிறிய குழுவிலிருந்தவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த வருடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு விசுவாசி என்றாலும், ராகுல் திடீரென கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டார் மேலும் அவர்களின் நான்கு வயது மகளின் உயிரைப் பறித்தார். அவர் பல ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் ராதா அவரைச் சந்தித்தார், மேலும் தேவன் அற்புதமாகக் குணப்படுத்தினார், அவளை மன்னிக்க உதவினார். ஆழ்ந்த மனவேதனைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கிடையேயான அன்பு வளர்ந்தது.

அத்தகைய அன்பும் மன்னிப்பும் ஒரே ஒரு ஆதாரத்திலிருந்து மட்டுமே வர முடியும். தாவீது தேவனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார், “அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும்.. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” (சங்கீதம் 103:10, 12).

தேவன் நமக்குக் காண்பிக்கும் இரக்கமானது அவருடைய அளவிடப்படமுடியா அன்பின் மூலம் வருகிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ.. அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வ.11). அந்த மிகவும் ஆழமான அன்பு அவரை சிலுவை மற்றும் கல்லறையின் ஆழத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களைப் போக்கும்படி தூண்டியது, இதனால் "அவரை ஏற்றுக்கொண்டவர்கள்" (யோவான் 1:12) அனைவரையும் அவர் தம்மிடமாய் கொண்டு வர முடியும்.

"தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்!" ராதா சொன்னது சரிதான். அவருடைய அன்பும் மன்னிப்பும் நினைத்துப்பார்க்க முடியாத எல்லைகளுக்கு அப்பால் சென்று நித்திய வாழ்வை நமக்களிக்கிறது.