Archives: அக்டோபர் 2024

மறுபடியும் பிறந்தீர்களா?

"மறுபடியும் பிறப்பதா? அதற்கு என்ன பொருள்? "நான் இதற்கு முன்பு அந்த வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" அடக்க ஆராதனையின் இயக்குநர் கேட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரித்தவரின் மகன், யோவான் 3-ம் அதிகாரத்தின் வார்த்தைகளின் மூலம் அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கினார்.

"இது, நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு முறை பிறந்தோம் என்ற நிஜத்தைப் பற்றியது. நமது நல்ல செயல்களைத் தீய செயல்களுக்கு எதிராக எடைபோட, தேவனிடம் எந்த ஒரு மந்திர தராசும் இல்லை. நாம் ஆவியினால் பிறக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார்; அவர் நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார், மேலும் அவருடன் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கினார். இதை நமது சுயத்தால் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

யோவான் 3 இல், நிக்கொதேமு உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாரா என்று சந்தேகிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களில் தேறின போதகர் அவர் (வ. 1), இயேசு வித்தியாசமானவர் என்பதையும் அவருடைய போதனைக்கு அதிகாரம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் (வ. 2). இதை அவர் சோதிக்க விரும்பினார், எனவே அவர் ஒரு இரவு கிறிஸ்துவை அணுகி காரியத்தைக் கண்டுகொண்டார். "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று" (வ. 7) என்ற இயேசுவின் கூற்றை நிக்கொதேமு ஏற்றுக்கொண்டு விசுவாசித்திருக்க வேண்டும், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட பிறகு (19:39) இரட்சகரின் உடலை அடக்கம் செய்ய அவர் உதவினார்.

ஆறுதல் கூட்டத்தை நடத்தியவர்  வீட்டிற்குச் சென்று யோவானின் நற்செய்தியின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய மகனைப் போல, இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, அவர் நமக்கு உதவும்போது பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

தேவனில் நம்பிக்கை

ராஜேஷ் தனது மூன்றாண்டு படிப்புக்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, மலிவான விடுதி அறையை தேர்ந்தேடுத்தபோது, தன் செயலின் விளைவை அறியவில்லை. "அது பயங்கரமாக இருந்தது, அறையும் அதன் குளியலறையும் மிக மோசமாக இருந்தன" என்று அவர் விவரித்தார். ஆனால் அவரிடம் கொஞ்சப் பணமே இருக்க, வேறு வழியில்லை. "என்னால் இயன்றதெல்லாம் மூன்று ஆண்டுகளில் திரும்பிச் செல்ல எனக்கு ஒரு நல்ல வீடு உண்டு, எனவே நான் இங்கேயே தங்கி எனது நேரத்தை நன்றாகப்  பயன்படுத்துவேன்" என்று அவர் நிச்சயித்துக்கொண்டதாகக் கூறினார்.

ராஜேஷின் கதை, "பூமிக்குரிய கூடாரமாகிய" (2 கொரிந்தியர் 5:1) மரிக்கக்கூடிய உடலில் வாழ்வதற்கான அன்றாட சவால்களைப் பிரதிபலிக்கிறது, இவ்வுடல் "ஒழிந்துபோம்"  (1 யோவான் 2:17) உலகில் இயங்குகிறது. வாழ்க்கை நம்மீது வீசும் பல சிரமங்களைச் சமாளிக்கப் போராடி, இவ்வாறு "நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்" (2 கொரிந்தியர் 5:4)

ஒரு நாள் நாம் அழியாத, உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கைதான் நம்மைத் தொடர்ந்து நடத்துகிறது; அது “நம்முடைய பரம வாசஸ்தலம்" (வ. 4). இப்போது இருக்கும் புலம்பலும் விரக்தியும்  இல்லாத உலகில் வாழ்வோம் (ரோமர் 8:19 -22).  இந்த நம்பிக்கைதான் தேவன் அன்பாய் வழங்கியிருக்கும் இந்த நிகழ்கால வாழ்க்கையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்கு உதவுகிறது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார், அதனால் நாம் அவருக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யலாம். "அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்." (வ. 9).

தேவனை விட்டு ஓடுதல்

ஜூலியும் லிஸும் கலிபோர்னியா கடற்கரையில் சிறிய படகில், கூம்பு திமிங்கிலங்களைத் தேடிச் சென்றனர். இவை மேற்பரப்புக்கு அருகில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதாக அறியப்படுகின்றன, எனவே அவற்றை அங்கே காண்பது எளிது. அந்த இரண்டு பெண்களின் படகுக்கு அடியிலே நேரடியாக ஒன்று தென்பட்டபோது, அது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியா ஆச்சரியமாக இருந்து. ஒரு பார்வையாளர் அவர்கள் எதிர்கொண்ட  அந்த காட்சிகளைப் படம்பிடித்தார். அது, திமிங்கிலத்தின் பெரிய வாய் முன்பு, பெண்களையும் அவர்களின் சிறு படகுகளையும் சித்திரக் குள்ளர்களைப் போலத் தோன்றச் செய்ததைக் காட்டுகிறது. சிறிது நேரம் நீருக்கடியில் சென்ற பிறகு, பெண்கள் காயமின்றி தப்பினர்.

தீர்க்கதரிசி யோனாவை "பெரிய மீன்" (யோனா 1:17) விழுங்கியது குறித்த வேதாகம சம்பவம் பற்றிய கண்ணோட்டத்தை அவர்களின் அனுபவம் வழங்குகிறது. நினிவே மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி தேவன் அவருக்கு கட்டளையிட்டாா், ஆனால் அவர்கள் தேவனை நிராகரித்ததால், அவர்கள் அவருடைய மன்னிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்று யோனாவுக்கு தோன்றியது. கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர் ஓடிப்போய் வேறுஒரு கப்பலில் ஏறினார். தேவன் ஒரு ஆபத்தான புயலை அனுப்பினார், அதனால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார்.

யோனாவை கொந்தளிக்கும் கடலில் தவிர்க்கமுடியா மரணத்திலிருந்து காப்பாற்றத் தேவன் ஒரு வழியை உண்டாக்கினார், அவருடைய செயல்களின் மிக மோசமான விளைவுகளிலிருந்து அவரைக் காத்தார். யோனா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்,  மற்றும் தேவன் உத்தரவு அருளினார் (2:2). யோனா தனது தவற்றை ஒப்புக்கொண்டு, தேவனின் நற்குணத்தைப் புகழ்ந்து அங்கீகரித்த பிறகு, தேவனுடைய கட்டளையின்படி, மீனிலிருந்து "கரையிலே" கக்கப்பட்டார் (வ. 10).

தேவனின் கிருபையால், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, இயேசுவின் மரணத்தில் நம் விசுவாசத்தை வைக்கும்போது, ​​நாம் சந்திக்கவேண்டிய ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுபட்டு, அவர் மூலம் புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.

பசித்தோருக்கு உணவு

பல ஆண்டுகளாக, 'ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா' என்ற பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வறட்சி பயிர்களை நாசமாக்கியது, கால்நடைகளைக் கொன்றது மற்றும் அது இலட்சக் கணக்கானவர்களைப் பாதிக்கிறது. கென்யாவின் கஹுமா அகதிகள் முகாமில் உள்ள ஜனங்கள் போர்கள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பியவர்களைக் காட்டிலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு இளம் தாய் தன் குழந்தையை முகாம் அதிகாரிகளிடம் கொண்டு வந்ததை சமீபத்திய அறிக்கை விவரித்தது. குழந்தை கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு, “அவளுடைய முடி மற்றும் சருமம், உலர்ந்தும் உடைந்துமிருந்தது", அவள் சிரிக்க மாட்டாள், சாப்பிட மாட்டாள். அவளது சின்னஞ்சிறு உடல் செத்துக்கொண்டிருந்தது. நிபுணர்கள் உடனடியாக செயல்பட்டனர். தேவைகள் இன்னும் பல இருந்தாலும்; அதிர்ஷ்டவசமாக, உடனடி பிறப்பு மற்றும் இறப்பு தேவைகளைச் சந்திக்க ஒரு உள்கட்டமைப்பு கட்டப்பட்டது.

இதுபோன்ற நம்பிக்கையற்ற பகுதிகள்தான் தேவஜனங்கள் அவருடைய ஒளியையும் அன்பையும் பிரகாசிக்க அழைக்கப்பட்ட இடங்களாகும் (ஏசாயா 58:8). ஜனங்கள் பட்டினியால் வாடும்போது, ​​நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ​​தேவன் தம் ஜனங்களே முதலாவதாக  உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு என்று அனைத்தையும் இயேசுவின் நாமத்தால் வழங்கும்படி அழைக்கிறார். பண்டைய இஸ்ரவேர்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் உண்மையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும்" (வ.7) போன்ற இரக்கமுள்ள பணிகளைப் புறக்கணித்ததால் ஏசாயா அவர்களைக் கண்டித்தார்.

பசியுள்ளவர்களுக்குச் சரீர மற்றும் ஆவிக்குரிய ரீதியாக உணவளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் தேவையைப் பூர்த்தி செய்திட  அவர் நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாா்

விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். "நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  'என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் "ஆறுதல்" (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.