Archives: செப்டம்பர் 2024

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!

எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளில் தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!" என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்த அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.

இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.  

இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்" என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார். 

ஆச்சரியமான போதனை

சோபியா ராபர்ட்ஸ் தனது பதினொரு வயதில் முதன்முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையை அனுபவித்தாள். அத்தகைய மருத்துவ முறையைப் பார்க்க ஒரு குழந்தைக்கு இது சற்று இளமையாகத் தோன்றினாலும், அவளுடைய அப்பா டாக்டர். ஹெரால்ட் ராபர்ட்ஸ் ஜூனியர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில், முப்பது வயதான சோபியா, தற்போது அறுவை சிகிச்சை மருத்துவராய் தனது தந்தையுடன் இணைந்து வெற்றிகரமான பெருநாடி வால்வு மாற்ற அறுவை சிகிச்சையை வெற்றியாகச் செய்தார். ஹரோல்ட் கூறும்போது, “வேறென்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? நான் இந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்... இப்போது, ஒரு மனித இதயத்தை எவ்வாறு கையாளுவது என்பதை கற்றுக்கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யமாயிருக்கிறது” என்று சொல்லுகிறார். 

நம்மில் சிலர் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை திறன்களைக் கற்பிக்கலாம். சாலெமோன் அடுத்த தலைமுறைக்கு தேவனையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்த கற்றுக்கொடுக்கிறார். ஞானமுள்ள ராஜா, தேவனுடனான தனது உறவில் கற்றுக்கொண்டதை தன் குழந்தையுடன் உணர்ச்சிபொங்க பகிர்ந்துகொள்கிறார்: “என் மகனே... உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதிமொழிகள் 3:1,5), “கர்த்தருக்கு பயப்படுங்கள்” (வச. 7), “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” (வச. 11). அவருடைய சிட்சையையும் வழிகாட்டுதலையும் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளும் தம்முடைய பிள்ளைகளில் தேவன் “அன்பு செய்கிறார்” மற்றும் “மகிழ்ச்சியடைகிறார்” என்பதை சாலெமோன் அறிந்திருந்தார் (வச. 12).

நம் அற்புதமான, ஆச்சரியமான தேவனை நம்புவது, மதித்தல், மரியாதை செய்வது மற்றும் தாழ்மையுடன் செயல்படுவதின் அர்த்தம் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். அப்படிச் செய்வதில் அவருடன் கூட்டு சேர்வது மனதைக் கவரும் ஒரு சிலாக்கியம்!

கிறிஸ்துவில் ஒன்றுபட்டவர்களாய்

அலாஸ்காவின் விட்டியரில் வசிக்கும் முந்நூறு பேரில் பெரும்பாலோர் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். அதனால்தான் விட்டியர் “ஒரே கூரையின் கீழ் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. அதின் முன்னாள் குடியிருப்பாளரான ஆமி, “நான் எதற்கும் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை - மளிகைக் கடை, நோட்டரி பப்ளிக், பள்ளி மற்றும் தபால் அலுவலகம் எங்கள் தரை தளத்தில் இருந்தன, ஒரு லிஃப்ட் சவாரி மட்டுமே போதுமானது!" என்று கூறுகிறார்.

“வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்ததால், எனக்கு யாரும் தேவையில்லை என்று நினைத்து, நான் அடிக்கடி தனிமையில் இருக்க விரும்பினேன்" என்று அமி பகிர்ந்துகொள்கிறார். “ஆனால் சக குடியிருப்பாளர்கள் மிகவும் கரிசணையோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் தேவை என்பதையும், எனக்கு அவர்கள் தேவை என்பதையும் கற்றுக்கொண்டேன்” என்கிறார். 

ஆமியைப் போலவே, நாமும் சில சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்தி, சமூகத்தைத் தவிர்க்க விரும்பலாம். பிந்தையது குறைந்த மன அழுத்தமாகத் தெரிகிறது! ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர் தனிமையிலும் மற்ற விசுவாசிகளுடன் நல்லுறவு கொண்டவராக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலராகிய பவுல் விசுவாசிகளின் ஐக்கியத்தை மனித சரீரத்திற்கு ஒப்பிடுகிறார். ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு தனித்துவமான செயல்பாடு உள்ளது போல, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தனித்துவமான பாத்திரத்தை கொண்டுள்ளனர் (ரோமர் 12:4). ஒரு சரீரத்தின் உறுப்பு தனியாக இருக்க முடியாதது போல, ஒரு விசுவாசி தனிமையில் நம்பிக்கையின் வாழ்க்கையை வாழ முடியாது (வச. 5). சமூகத்தின் மத்தியில் தான் நாம் நம்முடைய வரங்களைப் பயன்படுத்தி (வச. 6-8; 1 பேதுரு 4:10) இயேசுவைப் போல வளர்கிறோம் (ரோமர் 12:9-21).

நமக்கு மற்றவரின் தேவை அவசியம்; நமது ஒற்றுமை கிறிஸ்துவில் உள்ளது (வச. 5). அவருடைய உதவியால், நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதால், அவருடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளலாம் மற்றும் அவருடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்.

இனி அந்நியர் இல்லை

“நீங்கள் இந்த இடத்திற்கு உரியவர் இல்லை.” அந்த வார்த்தைகள் ஒரு எட்டு வயது சிறுமியின் இதயத்தை நசுக்கியது, தொடர்ந்து வேதனைப்பட்டாள். அவரது குடும்பம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து புதிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது. மேலும் அவரது குடியேற்ற அட்டையில் அந்நியர் என்ற வார்த்தை முத்திரையிடப்பட்டிருந்தது. அவள் அந்த நாட்டிற்கு சொந்தமானவள் இல்லை என்று உணர்ந்தாள்.

வயது முதிர்ந்தவளானாலும், இயேசுவை விசுவாசித்தாலும் அவள் தன்னை ஒரு விரும்படாத அந்நியனாகவே உணர்ந்தாள். அவளுடைய வேதாகமத்தைப் படிக்கும்போது, எபேசியர் 2-ன் வாக்குறுதிகளை அவள் கண்டுபிடித்தாள். 12ஆம் வசனத்தில் அந்நியர் என்ற அந்த கடினமான வார்த்தையை அவள் கண்டுபிடித்தாள்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவள் தொடர்ந்து வாசிக்கையில், கிறிஸ்துவின் தியாகம் தன் நிலையை எப்படி மாற்றியது என்பதைப் பார்த்தாள். அவள் வசனம் 19 ஐப் படித்தாள். “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,” என்பதை வாசித்து, தேவ ஜனத்துடன் அவள் ஒரு குடிமகளாய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். தான் பரலோகத்தின் பிரஜை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். இனி ஒருபோதும் அவள் வெளிநாட்டினராக இருக்க மாட்டாள். தேவன் அவளை ஏற்றுக்கொண்டார்.

நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் தேவனுக்கு அந்நியராயிருக்கிறோம். ஆனால் நாம் அப்படியே இருக்க வேண்டியதில்லை. இயேசு “தூரமாயிருந்த” இருந்த அனைவருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (வச. 17), தம்மை நம்புகிற அனைவரையும் தம்முடைய நித்திய ராஜ்யத்தின் சக குடிமக்களாக மாற்றி, கிறிஸ்துவின் சரீரமாக ஐக்கியப்படுத்தினார்.

ராஜ வருகை

உலகளாவிய பார்வையாளர்கள் பில்லியன்களில் மதிப்பிடப்பட்ட நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக இருக்கலாம். அன்று ஒரு மில்லியன் மக்கள் லண்டனின் தெருக்களில் வரிசையாக நின்றனர், மேலும் 250,000 பேர் அந்த வாரத்தில் ராணியின் சவப்பெட்டியைப் பார்க்க மணிக்கணக்கில் வரிசையில் நின்றனர். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஐந்நூறு மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் ஒரு வலிமை மற்றும் பண்புக்காக அறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

உலகம் தனது பார்வையை கிரேட் பிரிட்டன் மற்றும் அதன் ராணியின் பக்கம் திரும்பியபோது, என் எண்ணங்கள் வேறொரு நிகழ்வை நோக்கி திரும்பியது - ஒரு ராஜ வருகை. ஒரு நாள் வரப்போகிறது; அப்பொழுது தேசங்கள் ஒன்று கூடி ஒரு மிகப் பெரிய ராஜாவை அங்கீகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது (ஏசாயா 45:20-22). வலிமையும் பண்பும் கொண்ட ஒரு தலைவர் (வச. 24). அவருக்கு முன்பாக “முழங்கால் யாவும்... முடங்கும், நாவு யாவும் (அவரை) முன்னிட்டு ஆணையிடும்” (வச. 23). உலகத் தலைவர்கள் உட்பட, அவருக்குக் காணிக்கை செலுத்தி தங்கள் நாடுகளை அவருடைய வெளிச்சத்தில் நடக்கவைப்பார்கள் (வெளிப்படுத்துதல் 21:24,26). இந்த ராஜாவின் வருகையை அனைவரும் வரவேற்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறவர்கள் அவருடைய ஆளுகையை என்றென்றும் அனுபவிப்பார்கள் (ஏசாயா 45:24-25).

ஒரு ராணி வெளியேறுவதைப் பார்க்க உலகம் கூடியது போல், ஒரு நாள் அதன் இறுதி ராஜா திரும்பி வருவதைக் காணும். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை வணங்கி அவரை ஆண்டவராக அங்கீகரிக்கும் அந்த நாள் எப்பேற்பட்ட நாளாய் இருக்கப் போகிறது! (பிலிப்பியர் 2:10-11).