1800 களின் முற்பகுதியில், எலிசபெத் ஃப்ரை, லண்டன் பெண்கள் சிறையில் இருந்த நிலைமைகளைக் கண்டு திகைத்தார். பெண்களும் அவர்களது குழந்தைகளும் ஒன்று கூடி குளிர்ந்த கல் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை வழங்கப்படவில்லை என்றாலும், ஒரு குழாய் மூலம் அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர் பிரயாசப்பட்டு, அவர்களுக்கு உடைகளை வழங்குவதின் மூலமும், பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியை திறப்பதின் மூலமும், வேதாகமத்தை அவர்களுக்கு போதிப்பதின் மூலமும் அங்ஙனம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் அவர்களுடன் இருக்கும்போதும், அங்கிருந்த அனைவரும் அவரை நம்பிக்கையின் ஆதாரமாய் பார்த்தனர்.
தேவையில் உள்ளவர்களுக்கு நன்மை செய்யும்படியான இயேசுவின் போதனையை அவள் செயல்படுது;தினாள். உதாரணத்திற்கு, இயேசு ஒலிவ மலையில் பிரசங்கிக்கும்போது, உலகத்தின் முடிவைக் குறித்து பல உவமைகளை போதித்தார். அதில் குறிப்பாய், “நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்” (மத்தேயு 25:46) என்று போதிக்கிறார். இந்த சம்பவத்தில் ராஜா, “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்” (வச. 35-36) என்று சொல்லுகிறார். அவர்கள் அவ்வாறு செய்வதை நினைவுபடுத்த முடியாதபோது, ராஜா பதிலளிக்கிறார்: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று அவர்களுக்கு இயேசு வலியுறுத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் உதவியால் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, இயேசுவைச் சேவிப்பது என்ன ஆச்சரியம்! எலிசபெத் ஃப்ரையின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம், மேலும் வீட்டில் இருந்தபடியே பரிந்துபேசுதல் அல்லது ஊக்கமளிக்கும் செய்திகளை அனுப்புதல் போன்றவற்றின் மூலம் சேவை செய்யலாம். நம்முடைய ஆவிக்குரிய வரங்களையும் திறமைகளையும் மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்தும்போது, அவரை நேசிக்க இயேசு நம்மை வரவேற்கிறார்.
நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம் என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? தேவையிலுள்ள ஒருவரை நீங்கள் எவ்வாறு அணுகலாம்?
அன்பான இயேசுவே, இன்று என் அன்பை நான் எங்கு செயல்படுத்த முடியும் என்பதை அறிய எனக்கு உதவிசெய்யும்.