இரண்டாம் உலகப் போரின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மிசோரியின் கிராண்ட்வியூவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ஒரு தொலைபேசி ஒலித்தது. தன்னுடைய விருந்தினர்களிடம் ஒப்புதல் கேட்டு, ஒரு தொண்ணூற்று இரண்டு வயதான பெண்மணி அழைப்பை எடுத்தார். அவர் பேசுவதை விருந்தினர் கேட்க நேரிட்டது, “ஹலோ… ஆம், நான் நன்றாக இருக்கிறேன். ஆம், நான் ரேடியயோவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்… இப்போது உன்னால் முடிந்தால் என்னை வந்து பாருங்கள்… மீண்டும் சந்திக்கலாம்.” வயதான பெண் தனது விருந்தினரிடம் திரும்பி, “அது என் மகன் ஹாரி. ஹாரி ஒரு அற்புதமான மனிதன்… அவன் அழைப்பார் என்று எனக்குத் தெரியும். ஏதாவது நடந்த பிறகு அவன் எப்போதும் என்னை அழைப்பான்” என்று சொன்னார்களாம்.
எவ்வளவு சாதித்தாலும், எவ்வளவு வயதானாலும், நம் பெற்றோரை அழைக்க ஏங்குகிறோம். “நன்றாகச் செய்தாய்” என்னும் அவர்களின் உறுதியான பாராட்டைப் பெறுவதற்காய். நாங்கள் பெரிதளவில் சாதித்தவர்களாய் இருக்கலாம்; ஆனால் நாம் எப்போதும் நம் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பதை மறப்பதில்லை.
துரதிர்ஷ்டவசமாக, அனைவருக்கும் தங்கள் பூமிக்குரிய பெற்றோருடன் இந்த வகையான நல்ல உறவு இருப்பதில்லை. ஆனால் இயேசுவின் மூலம் நாம் அனைவரும் தேவனை நம் தகப்பனாக பெற்று;ககொள்ள முடியும். கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம். ஏனென்றால் நீங்கள் “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). நாம் இப்போது “தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (வச. 17). நாம் தேவனிடத்தில் அடிமையாகப் பேசவில்லை, மாறாக, இயேசு தன்னுடைய இக்கட்டான தருணத்தில் தேவனை அழைத்த “அப்பா பிதாவே” (மாற்கு 14:36) என்னும் அந்தரங்கப் பெயரைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
உங்களிடம் செய்தி இருக்கிறதா? உங்களுக்கு தேவைகள் உள்ளதா? உங்கள் நித்திய வீடாய் இருப்பவரை அழையுங்கள்.
உங்கள் பூமிக்குரிய பெற்றோருடன் என்ன செய்தி அல்லது தேவைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்? உங்கள் பரலோக தகப்பனுக்கு நீங்கள் என்ன சொல்ல முடியும்? அவர் கேட்கிறார்.
இரக்கத்தின் தகப்பனே, நான் எப்போது வேண்டுமானாலும் ஜெபத்தில் அழைக்கக்கூடிய ஒருவராக நீர் இருப்பதற்காய் உமக்கு நன்றி.