நாள் 5: நல்லது, அது பூரணமானது!
வாசிக்கவும்: கொலோசெயர் 1:15-22
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (வச.20).
கருத்தரங்கு பேச்சாளர்…
நாள் 4: உன்னைப் போல
வாசியுங்கள்: லேவி 19: 1-18, 33-34
“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும்…
நாள் 3: இரக்கமுள்ள மனம்
வாசியுங்கள்: மத்தேயு 25:31-46
வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் (வச.36).
பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது.…
நாள் 2: ஓய்வு நேரம்
வாசியுங்கள்: யாத்திராகமம் 16:16-30
மோசே அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும்…
நாள் 1: முரண்படும் கலாச்சாரங்கள்
வாசியுங்கள்: யோவான் 17:1-26
நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். (வ.16-17)
பல்வேறு சமூக ஊடக தளங்களை நம்மில் பெரும்பாலோர்…
மேற்கொள்ளும் மனஉறுதி
"இயேசுவின் கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்”. (மத்தேயு 4:24)
இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது அவரின் பிரசித்தி பெற்ற கீர்த்திக்கு முதற்காரணம் அவரால் குணப்படுத்தமுடியாத வியாதி எதுவுமே இல்லை என்பதாகும். இக்காலத்தில் கண்டறியப்படுவது போல நோய்களைப் பற்றித் தெளிவான அறிவு அந்நாட்களில் இல்லை. அவைகளைப் பற்றி அதிகம் வேதத்தில் கூறப்படவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து, குறிப்பாக மருத்துவ அறிவியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சகல நோய்களுக்கும்…
நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்
மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும்.
ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.
நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார்.
நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.