“இயேசுவின் கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்”. (மத்தேயு 4:24)

இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது அவரின் பிரசித்தி பெற்ற கீர்த்திக்கு முதற்காரணம் அவரால் குணப்படுத்தமுடியாத வியாதி எதுவுமே இல்லை என்பதாகும். இக்காலத்தில் கண்டறியப்படுவது போல நோய்களைப் பற்றித் தெளிவான அறிவு அந்நாட்களில் இல்லை. அவைகளைப் பற்றி அதிகம் வேதத்தில் கூறப்படவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து, குறிப்பாக மருத்துவ அறிவியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சகல நோய்களுக்கும் மேலானவர் என்பதை நாம் உறுதியாக அறிய வேண்டும்.

இயேசு தனது ஊழிய வாழ்க்கை முழுவதும் சுற்றிலும் உள்ள மக்களின் தேவையை அறிந்து; இரக்கமுடையவராய், அவர்களை ஏற்றுக்கொள்பவராய், அரவணைப்பவராக இருந்தார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் தன்னிடம் வருகையில், அவர்களைப் பரிவுடன் வரவேற்க தம் சீடர்களுக்கு நினைவூட்டினார் (மத்தேயு 19:14; யோவான் 12:7-8). மனநல ஆரோக்கியம் குறைந்துவரும் இந்த நாட்களில், இதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்த கரிசனையும் அதிகரித்து வருவதால், நாம் இத்தகைய சவால்களைச் சந்திக்கும் மனிதர்களுக்கு உதவவும், அவர்களை ஆதரிக்கவும் திருச்சபையாக நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சீர்குலைந்து போன இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையின் செய்தியை பகிர்ந்துகொள்வது அவசியமாகிறது. எந்த நோயையும் குணப்படுத்தும் மருத்துவராகிய இயேசுவை நாம் அறிந்திருக்கிறபடியால், மனநோய், மனக்கவலை அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் நம்பிக்கையளிக்க முடியும். அவருடைய நிபந்தனையற்ற அன்பும், பராமரிப்பும் வாழ்க்கையின் இருண்ட காலங்களில் கூட உதவும். அவர் நம்மைக் காண்பார் என்பதை அறிந்து நாம் ஆண்டவரை அணுகலாம். நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கிப் பார்க்கும்போது, வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ள அவர் நமக்கு உதவுவார், இந்தப் போராட்டங்களில் நாம் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை அவருடைய வாக்குத்தத்தங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.


 

| நாள் 1: முரண்படும் கலாச்சாரங்கள்

பல்வேறு சமூக ஊடக தளங்களை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் முன்பின் அறிமுகமில்லாதவர்களும் கூட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளை ஒரு சமூக ஊடகத்தின் வாயிலாக முழுமையாக மதிப்பிட இந்த செயலிகள்…

மேலும் வாசிக்க

 

| நாள் 2: ஓய்வு நேரம்

ஒரு உலகளாவிய அறிஞர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்றபோது, ஞாயிற்றுக்கிழமை அன்று தோட்ட வேலை செய்யும் ஒரு சக அமெரிக்க ஊழியரைக் கண்டு வினோதமாக உணர்ந்தார். அவரைப் பொறுத்தமட்டில், அந்த ஞாயிற்றுக்கிழமை அவரின்…

மேலும் வாசிக்க

 

| நாள் 3: இரக்கமுள்ள மனம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது. இந்த தீவிர மனநோயால் அவர் வேலையை இழந்தார், சிறைச்சாலை செல்ல நேரிட்டது மேலும் வீடற்றவராகவும்…

மேலும் வாசிக்க

| நாள் 4: உன்னைப் போல

பெல்ஜியம் நாட்டில் கீல் ஒரு தனித்துவமான மக்கள்தொகை கொண்ட ஒரு அழகான நகரமாக இருக்கிறது. அங்குள்ள மக்களில் கணிசமான சதவீதம் மனநோய் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு விருந்தளித்துப் பராமரிக்கும் …

மேலும் வாசிக்க

 

| நாள் 5: நல்லது, அது பூரணமானது!

கருத்தரங்கு பேச்சாளர் ஒருவர் எல்லாவற்றிற்கும் நேர்மறையான சிந்தையுடன் அணுகுவதின் தேவையை வலியுறுத்தினார். பெருவாரியான காரியங்களுக்கு அது சரி என்று நான் அதை ஏற்றுக்கொண்டுள்ளேன். அந்த பெண் பேச்சாளர் எரிச்சல் மிக்க…

மேலும் வாசிக்க

 

| நாள் 6: புதிய முகவரி?

புதிய வீட்டிற்கு மாறலாமா அல்லது பழைய முகவரியில் தொடரலாமா? நானும் என் கணவரும் வீடு மாறும் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்தபோது, இந்த கேள்வி பல நாட்கள் என் மனதை நிரப்பியது. நாங்கள் புதிய வீட்டைக் கண்டுபிடிக்கும் எங்கள் …

மேலும் வாசிக்க

 

| நாள் 7: நம்ப கற்றல்

ஒரு குழந்தையாக இருக்கும் போது, பள்ளியில் நண்பர்களைச் சம்பாதிப்பதைக் குறித்து நான் கவலைப்பட்டேன். ஒரு கல்லூரி மாணவனாக, பட்டம் பெற்ற பிறகு வேலைக்காகக் கவலைப்பட்டேன். இன்று, நான் பெற்றோரின் உடல்நிலை குறித்தும், எனது …

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்