வாசிக்கவும்: கொலோசெயர் 1:15-22

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (வச.20).

கருத்தரங்கு பேச்சாளர் ஒருவர் எல்லாவற்றிற்கும் நேர்மறையான சிந்தையுடன் அணுகுவதின் தேவையை வலியுறுத்தினார். பெருவாரியான காரியங்களுக்கு அது சரி என்று நான் அதை ஏற்றுக்கொண்டுள்ளேன். அந்த பெண் பேச்சாளர் எரிச்சல் மிக்க வேளையிலும் நாம் எவ்வாறு நேர்மறையாக இருக்க முடியும் என்பதை விவரித்தார். யாரோ ஒருவர் முரட்டுத்தனமாக நமக்குச் சற்று முன்னால் இருக்கும் அந்த பிரதான வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைகிறார் என்று வைத்துக் கொள்வோம். இயற்கையாக அவரை நிறுத்தி, “நல்லது, அது சரியானது! என்று சொல்லுங்கள். இப்போது மேலும் நடந்து செல்வதன் மூலம் அதிக உடற்பயிற்சி செய்ய முடிகிறது.

இத்தகைய அணுகுமுறை சாதாரண காரியங்களுக்காகக் கவலைப்படுவதை நிறுத்த உதவும். இருப்பினும், சில சூழ்நிலைகள் ‘சரியான’ நிலையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. சில நேரங்களில் நேர்மறையான மனப்பான்மையைக் கொண்டிருப்பது மிகக் கடினம் மட்டுமல்ல, அது ஞானமானதும் அல்ல.

ஒரு விதத்தில், முழு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களும் சகலமும் பரிபூரணமாக இல்லை என்பதை தீர்க்கமாகக் கூறுகிறது. கொலை, கற்பழிப்பு, நரமாமிச உண்பது, துரோகம், இனப்படுகொலை போன்ற சொல்லமுடியாத செயல்களைப் பற்றி வேதத்தின் பல பகுதிகளும் கூறுகின்றன. பூமியின் நடக்கும் இந்த சகிக்க முடியாத அனுபவங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன..

முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் பரிபூரணமாக வாழ்ந்த ஒரு தோட்டத்தைப் பற்றிக் கூறும் புத்தகத்தின் இறுதி காரியமாக, மனித வீழ்ச்சி உள்ளது. அந்த நல்ல தோட்டத்தை சிருஷ்டித்தவர் எல்லாவற்றையும் புதிதாக்கத் திரும்ப வருவார் என்ற வாக்குத்தத்தம் இந்த புத்தகத்தின் மறுபக்கத்தில் உள்ள இறுதி காரியம் (ஆதியாகமம் 2:1-25; எபேசியர் 2:1-25; எபேசியர் 1:1-25). வெளிப்படுத்தின விசேஷம் 21:5). வாழ்க்கை என்ற குறைபாடுள்ள துணி, பின்னப்பட்ட நூலிழைகளில் உள்ள ஒரு இனைக்கும் நடு நூலிழையாக நமக்கு இந்த உண்மையான மகிழ்ச்சியின் காரணத்தைத் தருகிறது.

“[கிறிஸ்து] .. சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்று பவுல் எழுதுகிறார்.” அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.” (கொலோசெயர் 1:15, 17). ” அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (வச.20).

நாம் இயேசுவை நம்பும்போது, இவை அனைத்தையும் படைத்துச் செயல்படுத்துகிறவரையே நம்புகிறோம். அவர் நம்மிடையே நடப்பிக்கும்படி, அவருடைய படைப்புகளுக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்பைச் சரிசெய்யப் பரிபூரண பலியாக தம்மையே செலுத்த வந்தார். அவர் எல்லாவற்றையும் அதன் சரியான வரிசையில் மீட்டெடுக்கிறார். ஒரு நாள் நாம் எந்தவித முரண்பாட்டின் அறிகுறியின்றி “நல்லது, இதுவே பூரணமானது!” என்று நாம் சொல்வோம்.

—டிம் கஸ்டாப்சன்

மேலும் அறிய

சரியான ஆரம்பத்தை அறிய, ஆதியாகமம் 2ம் அதிகாரத்தை மீண்டும் வாசியுங்கள். பரிபூரண முடிவுக்கு, வெளிப்படுத்துதல் 22ம் அதிகாரத்தை வாசியுங்கள்.

அடுத்தது

இப்பொழுது உங்களின் மிக முக்கியமான பிரச்சினை என்ன? இதை வைத்துக் கொண்டு ஆண்டவரை எப்படி நம்புவது?