Archives: மார்ச் 2024

தேவன் நமது அடைக்கலம்

2019 ஆம் ஆண்டின் வியத்தகு திரைப்படமான 'லிட்டில் வுமன்', என்னிடமிருந்த அதின் மூல நாவலின் பழையதாகிப்போன பிரதியை படிக்க உந்தியது. குறிப்பாக, விவேகமும் மென்மையும் படைத்த தாயார் மர்மியின் ஆறுதல் வார்த்தைகளை.  அந்த நாவல் சித்தரித்த அவளுடைய உறுதியான நம்பிக்கையால்  நான் ஈர்க்கப்பட்டேன், இது அவளுடைய மகள்களுக்கு ஊக்கமளிக்கும் பல வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டபட்டுள்ளது. எனக்குப் பிரத்யேகமாகத் தெரிந்தது இதுதான்: “சிக்கல்கள் மற்றும் சோதனைகள் . . . பல இருக்கலாம், ஆனால் உங்கள் பரலோகத் தகப்பனின் பலத்தையும் மென்மையையும் நீங்கள் உணரக் கற்றுக்கொண்டால், அவற்றையெல்லாம் வென்று வாழலாம்."

மர்மியின் வார்த்தைகள் நீதிமொழிகளில் காணப்படும் சத்தியத்தை எதிரொலிக்கின்றன, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (18:10). எதிரிகளின் தாக்குதல் போன்ற காரணமாக, ஆபத்தின் போது பாதுகாப்பு இடங்களாக பழங்கால நகரங்களில் துருகங்கள் கட்டப்பட்டன. அதுபோலவே, தேவனிடம் ஓடுவதன் மூலமே, இயேசுவை நம்புபவர்கள், “நமக்கு அடைக்கலமும் பெலனுமாக" (சங்கீதம் 46:1) உள்ளவரின் பராமரிப்பில் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.

நீதிமொழிகள் 18:10, பாதுகாப்பு என்பது தேவனின் " நாமத்தில்" இருந்து வருகிறது என்று சொல்கிறது. அவர் நாமமானது அவர் யார் என்ற அனைத்தையும் குறிக்கிறது. வேதவசனம் தேவனை, "இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்" (யாத்திராகமம் 34:6) என்கிறது. தேவனின் பாதுகாப்பு அவரது வல்லமையான பலத்திலிருந்து வருகிறது, அதே போல் அவரது மென்மையும் அன்பும் காயப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவரை ஏக்கமுற செய்கிறது. போராடும் அனைவருக்கும், நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பலத்திலும் மென்மையிலும் அடைக்கலம் அருள்கிறார்.

தாழ்மையான உள்ளமும், தாராளமான கரங்களும்

 

"எனது கனவுகளில் பெரும்பாலானவை பேருந்துகள், ரயில்கள் மற்றும் பயண பைகள் உள்ளடக்கியதாக இருப்பதற்கு சில வம்சாவளி காரணங்கள்" இருக்குமா என எமி பீட்டர்சன் வியக்கிறார். சிறுவயதிலிருந்தே அவளுடைய ஆர்வத்தின் பெரும்பகுதி, உலகைச் சுற்றிப் பார்ப்பதிலும், அதில் மாற்றத்தை உண்டாக்குவதிலுமேயே இருந்தது. அந்தக் கனவுகளில் பலவற்றை நிஜமாக்கிக் கொண்ட போதிலும், அவள் எதிர்பார்த்தது போல் விஷயங்கள் இல்லை என்பதை அவள் கற்றுக்கொண்டாள்.

அவளது பல்வேறு வெளிநாட்டு அனுபவங்களிலிருந்தும், அவளது கணவர் ஜாக்கிடமிருந்தும் , நோக்கம் நிறைந்த உபசரிப்பின் இன்றியமையாமையின், வேதாகம மயமான தேவையைப் பற்றிக் கற்றுக்கொண்டாள்.…

தேவனுக்கென்று நன்மை செய்தல்

அவர் வழக்கமாக தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும் முன் கொஞ்சம் பணத்தை (சுமார் ₹400) பாக்கெட்டில் வைக்க தேவன் ஏவுவதை  பேட்ரிக் உணர்ந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் மதிய உணவு நேரத்தில், ஒரு அவசரத் தேவையை பூர்த்திசெய்ய தேவன் அவரை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். மதிய உணவு அறையின் சலசலப்புக்கு நடுவில், அவர் இந்த வார்த்தைகளைக் கேட்டார்: "ராணியின் [தேவையுள்ள ஒரு குழந்தைக்கு] கணக்கில் ₹400 போட வேண்டும், அப்போது அவள் வாரம் முழுவதும் மதிய உணவை சாப்பிடலாம்." ராணிக்கு உதவுவதற்காக பேட்ரிக் தனது பணத்தை கொடுத்தபோது அனுபவித்த உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள்!

தீத்துவுக்கான நிருபத்தில், இயேசுவின் விசுவாசிகளுக்கு "நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்" (3:5) என்று பவுல் நினைப்பூட்டினாலும், "நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி" (வ.8; பார்க்கவும் வ.14) சொன்னார். நம் வாழ்க்கை நேரம் இல்லாததாகவும், மிகவும் பளுவானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உங்கள் சொந்த நல்வாழ்வை கவனிப்பதே மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும், இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக நாம் “நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக” இருக்க வேண்டும். நம்மிடம் இல்லாததையும் செய்ய முடியாததையும் நினைத்து விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவனின் நமக்கு உதவுவதற்கு ஏற்ப நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் மற்றவர்களுக்கு அவர்களின் தேவையுள்ள நேரத்தில் உதவுகிறோம், மேலும் தேவன் மகிமைப்படுகிறார். "இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:16).

தேவனின் உன்னத வல்லமை

மார்ச் 1945 இல், "கோஸ்ட் ஆர்மி" படைப்பிரிவு அமெரிக்கப் படைகள் ரைன் நதியைக் கடக்க உதவியது. இது இரண்டாம் உலகப் போரில் மேற்கு முனையிலிருந்து செயல்படுவதற்கு கூட்டுப்படைகளுக்கு ஒரு முக்கிய தளத்தை அளித்தது. அனைத்துப 23 வது தலைமையக சிறப்பு துருப்புக்களின் வீரர்கள் சாதாரணமான மனிதர்கலேயன்றி, தோற்றங்கள் அல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தது; 1,100 பேர் கொண்ட குழு, ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி ஒலிவதிர்வுகளை உண்டாக்கி 30,000 வீரர்கள், துருப்பு டாங்கிகள், குண்டுவீச்சு படையினர் மற்றும் பலர் உள்ளதை போல தோற்றத்தை ஏற்படுத்தியது. ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான கோஸ்ட் ஆர்மி உறுப்பினர்கள் மிகப் பெரிய படையாக தங்களை எதிரிகள் கருதி பயப்பட வழிவகுத்தனர்.

மீதியானியர்களும், அவர்கள் கூட்டுப்படையினரும் இரவில் பெரிதாய் தோன்றின ஒரு மிகச்சிறிய படைக்குமுன் நடுங்கினர் (நியாயாதிபதிகள் 7:8–22). நியாயாதிபதி, தீர்க்கதரிசி மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தலைவரான கிதியோன் தனது அற்பமான படையை கொண்டு எதிரியை நடுங்கச்செய்ய தேவனால் பயன்படுத்தப்பட்டார். அவர்கள் செயற்கை ஒலி (ஊதப்பட்ட எக்காளங்கள், அடித்து நொறுக்கப்பட்ட களிமண் பானைகள், மனித குரல்கள்) மற்றும் கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் (எரியும் தீவட்டிகள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, "வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்" பரந்திருந்த எதிரிகளை (வி. 12) தங்களைக்காட்டிலும் ஒரு பெரிய எதிரியை எதிர்கொண்டதாக நம்பச்செய்தார்கள். தேவனின் கட்டளையால் 32,000 வீரர்களாயிருந்தவர்கள், வெறும் 300 பேர் கொண்ட படையாக குறைக்கப்பட்டு (வ. 2–8) அந்த இரவில் எதிரிகளை தோற்கடித்தனர். ஏன்? ஏனென்றால், போரில் வென்றது யார் என்பது தெளிவாகிறது. தேவன் கிதியோனிடம் சொன்னது போல, "அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்" (வ.9).

நாம் பலவீனமாகவும் குறைவாகவும் உணரும்போது, ​​தேவனைத் தேடுவோம், அவருடைய பலத்தில் மட்டுமே இளைப்பாறுவோம். ஏனெனில், நம் "பலவீனத்திலே என் (அவர்) பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9).

இயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார்

மேற்கு அமெரிக்காவிலுள்ள உள்ள எனது மாநிலத்தில் பனிப்புயல் வீசியதால், என் விதவை தாயார் புயலிலிருந்து சற்று தப்பிக்கொள்ள, என் குடும்பத்துடன் இருக்க ஒப்புக்கொண்டார். எனினும், பனிப்புயலுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வசிக்க, எங்களுடன் குடியேறினாள். அவரது வருகை எங்கள் குடும்பத்தை பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. குடும்பத்தினர்களுக்கான ஞானமுள்ள ஆலோசனை, அறிவுரை மற்றும் முன்னோர்களின் கதைகள் போன்றவற்றை அவர் தினசரி பகிர்ந்துகொளண்டார். அவரும் என் கணவரும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வையும் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும் பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களானார்கள். இனி ஒரு விருந்தினராக இல்லை, அவர் நிரந்தரமான மற்றும் முக்கிய குடும்பத்தினராக இருந்தார். தேவன் அவரை நித்திய வீட்டிற்கு அழைத்த பிறகும் அவா் கொண்டுவந்த மாற்றங்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்.

இந்த அனுபவம், இயேசுவைப் பற்றி யோவான், "நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவான் 1:14) என்று வர்ணிப்பதை நினைவூட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விளக்கமாகும், ஏனெனில் அசல் கிரேக்கத்தில் வாசம் பண்ணினார் என்ற வார்த்தை "ஒரு கூடாரம் அமைத்தல்" என்று பொருள்படும். மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது, அவர் "நம்மிடையே தமது வசிப்பிடத்தை ஏற்படுத்தினார்" என்று.

விசுவாசத்தினால் நாமும் இயேசுவை நம்மோடு வசிப்பவராக நம் இதயத்தில் ஏற்கிறோம். பவுல் எழுதியுள்ளாா், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி" (எபேசியர் 3:16–17).

ஒரு சாதாரண விருந்தினராக அல்ல, இயேசு அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நிரந்தர குடியிருப்பாளர். நாம் நம் இதயத்தின் கதவுகளை அகலத் திறந்து அவரை வரவேற்போம்.