Archives: பிப்ரவரி 2024

வேலை இழப்பை எதிர்கொள்ளுதல்

வாழ்க்கை மிகவும் பெரியதாக உள்ளதா?
"தேவனே, உமது கடல் மிகவும் பெரியது, என் படகு மிகவும் சிறியது."

இது ஒரு மிகவும் வயதான மீனவரின் வேண்டுதல் என்று நம்பப்படுகிறது. நமது வாழ்வில் உள்ள சிக்கலையும், நம்மால் நிர்வகிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்க்கையை அணுகுவதற்கான பயனுள்ள ஜெபமாக இது இருக்கிறது. வாழ்க்கை உங்களுக்கு மிகவும் பெரியதாக உள்ளது என்று நீங்கள் உணர்கின்றீர்களா? நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எளிதான பதில்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று தேவன்…

கண்ணியத்தை விரிவுபடுத்துதல்

மேகியின் இளம் நண்பர் தேவாலயத்திற்கு அணிந்து வந்த உடை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளி, அங்கே அசௌகரியத்துடன் தனது இருக்கையை மாற்றினாள். மாறி மாறி அவளது மிகக் குட்டையான கீழாடையை இழுத்து, தன் கைகளினால் சங்கடத்துடன் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.

அவள் உடுத்தியிருக்கிற உடை மீதில் உள்ள கவனத்தைத் திசை திருப்ப "ஓ, குளிர்கிறதா?" என்று மேகி கேட்டபின். "இதோ! என் சால்வையை எடுத்துக்கொள் என்றாள்."  மேகி பலரைத் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதன் மூலமும், அவர்கள் சங்கோச்சப்படாமல் ஆலயத்தில் ஆராதிக்க உதவுவதின் மூலமும் அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார். நற்செய்தியானது அவளது அற்புதமான முறைகள் மூலம் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைவரையும் கண்ணியமாக நடத்தினாள்.

விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசுவிடம் கொண்டுவந்து, அவா் முன் அவளை நடுவே நிறுத்தி குற்றச்சாட்டினாா்கள். ஆனால் கிறிஸ்து குற்றம் சாட்டுபவர்களை அங்கிருந்து அனுப்பும் வரை தன் கவனத்தை அவள் மீது வைக்கவில்லை. அவர்கள் போனதும் அவளைத் திட்டியிருக்கலாம். மாறாக, " இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்." (யோவான் 8:10). பிந்தைய கேள்விக்கான பதில், நிச்சயமாக இல்லை. எனவே இயேசு அவளுக்கு ஒரு சுருக்கமாகச் சுவிசேஷமாகக் கூறியது: "....நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே." (வ. 11) என்ற அழைப்பாகும்.

மக்கள் மீதான உண்மையான அன்பின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையான அன்பு, தீர்ப்பிடாமல் கண்ணியத்தையும் மன்னிப்பையும் வழங்குகிறது.

நன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல்

தனது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது அறியப்பட்டவுடன், அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளில் அதிகமாக இருப்பது அதனை "எதிர்த்து போராடுவதேயென்று" கிறிஸ்டினா கோஸ்டா கவனித்தார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் சோர்வுறச்செய்வதையும் உணர்ந்தாள். அவள் "[தன்] சொந்த உடலுடன் ஒரு வருடத்திற்கு மேல் போராட விரும்பவில்லை." மாறாக, அவளைக் கவனித்துக் கொள்ளும் நிபுணர்களின் குழுவிற்கும், அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்களுக்கும் தன் நன்றியுணர்வைக் காட்டுவது அதிக பலனளிப்பதை அறிந்தாள். எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் நன்றியுணர்வு மனச்சோர்வை எதிர்க்க உதவுவதோடு, "நமது மூளையை மறுசீரமைப்பு பெறும்படி கட்டமைக்க உதவும்" என்பதை அவள் நேரடியாக அனுபவித்தாள்.

கோஸ்டாவின் வாழ்விலிருந்து நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது என்பது, விசுவாசிகள் கடமைக்காகச் செய்வது மட்டுமல்ல என்பதை அறிந்தேன். நாம் நன்றி செலுத்தத் தேவன் தகுதியானவர் என்பது உண்மைதான் என்றாலும், அது நமக்கு மிகவும் நல்லது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே." (சங்கீதம் 103:2) என்று கூறும்போது, தேவனின் மகத்துவமுள்ள செயல்களை நாம் நினைக்கிறோம். அவைகள் அவர் தரும் பாவமன்னிப்பை நமக்கு உறுதிப்படுத்தி, நம் உள்ளத்திலும், உடலிலும் சுகத்தைத் தருகிறது, அவருடைய படைப்புகளான நாம் "அன்பையும் இரக்கத்தையும்" மற்றும் மட்டற்ற நன்மைகளையும் அனுபவிக்க வழி செய்கிறது (வ.3-5).

நாம் அனைத்து துன்பங்களிலும் பூரண சுகத்தை இவ்வாழ்நாளில் பெறாவிடினும், நன்றியுணர்வு நமது இருதயத்தைப் புதுப்பிக்கும், ஏனென்றால் நித்திய நித்திய காலமாய் தேவனின் கிருபையும், அன்பும் நம்முடன் இருக்கிறது (வ.17). 

அன்புடன் அளிக்கப்பட்ட ஈவு

க்வென்டோலின் ஸ்டுல்கிஸ் தனது திருமண த்திற்கு, தான் அதிகமாக விரும்பிய ஆடையை அணிந்திருந்தார். பிறகு அவள் தான் அறியாத ஒரு நபருக்கு அதைக் கொடுத்துவிட்டாள். தூசிபடிய  ஒரு அலமாரியில் இருப்பதைவிட மேலான நோக்கம் ஆடைக்கு உண்டு என்று ஸ்டுல்கிஸ் நம்பினார். மற்ற மணப்பெண்களும் இதற்கு இசைந்தனர். தற்போது ஏராளமான பெண்கள் திருமண ஆடைகளை நன்கொடையாக வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். ஒரு நன்கொடையாளர் "இந்த ஆடை ஒரு மனைகளிடமிருந்து வேறு ஒரு மணமகளுக்கென்று தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன்; மேலும் மேலும் இது பயன்படுத்தப்படுவதால் தேய்ந்து, கிழிந்து போய் அதன் வாழ்க்கையின் இறுதியில் சிதைந்து போகிறது" என்கிறார்..

தாராளமாகக் கொடுக்கும் குணம், உண்மையில் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். எழுதப்பட்டதுபோல, "வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." (நீதிமொழிகள் 11:24-25)

அப்போஸ்தலன் பவுல் புதிய ஏற்பாட்டில் இக்கொள்கையைப் போதித்தார். அவர் எபேசுவின் விசுவாசிகளிடம் விடைபெறுகையில், அவர்களை ஆசிர்வதித்தார் (அப்போஸ்தலர் 20:32) மற்றும் உதாரத்துவமாகக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டினார். பவுல் தனது நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். "இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்." (வ. 35).

நம் வாழ்வில் உதாரத்துவமாய் கொடுத்தல் தேவனைப் பிரதிபலிக்கிறது. "அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். . . . (யோவான் 3:16). அவர் நம்மை வழிநடத்திட, அவருடைய மகிமையான முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.

கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது.

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26).

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு  நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும்.