“எல்லாவற்றிலும்.. தேவனுக்கு சேவை செய்யும் மகிழ்ச்சிகரமான வழிகளையே நாம் தேடுகிறோம்” என்று பதினாறாம் நூற்றாண்டு விசுவாசி தெரேசா ஆஃப் அவிலா எழுதுகிறார். தேவனிடத்தில் முற்றிலுமாய் சரணடைவதை விட்டுவிட்டு, எளிமையான மகிழ்ச்சி தரக்கூடிய விதங்களில் தேவனிடத்தில் நாம் உறவுவைத்துக்கொள்ள விரும்பும் எண்ணங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். நாம் மெதுவாக, தற்காலிகமாக, மற்றும் தயக்கத்துடன் நம் முழுமையோடு அவரை சார்ந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆகையினால் தெரேசா, “நம்முடைய ஜீவியத்தை அவருக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்தாலும், அவரிடத்தில் நம்மை பூரணமாய் அர்ப்பணிக்கும் வரை அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் துளித்துளியாய் அனுபவிக்க பிரயாசப்படலாம்” என்று சொல்லுகிறார். 

மனிதர்களாகிய நம்மில் பலருக்கு நம்பிக்கை இயல்பாக வருவதில்லை. எனவே தேவனுடைய கிருபையையும் அன்பையும் நம்முடைய நம்பிக்கையை சார்ந்து அணுகினால், அது நமக்கு பிரச்சனையாகிவிடக்கூடும். 

ஆனால், 1 யோவான் 4-ல் நாம் வாசிக்கிறபடி, தேவன் நம் மீது அன்பு வைத்திருப்பதே பிரதானமானது (வச. 19). நாம் அவரை நேசிப்பதற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார். நமக்காக அவருடைய குமாரனை கொடுப்பதற்கும் அவர் ஆயத்தமாக இருந்தார். இந்த அன்பையே யோவான் ஆச்சரியமாகவும் நன்றியுடனும் குறிப்பிடுகிறார் (வச. 10).

படிப்படியாக, மெதுவாக, சிறிது சிறிதாக, தேவன் தம்முடைய அன்பைப் பெற நம் இதயங்களைக் குணப்படுத்துகிறார். துளித்துளியாக, அவருடைய கிருபை நம் பயங்களை அவரிடத்தில் சரணடையவைக்க உதவுகிறது (வச. 18). துளித்துளியாக, அவருடைய கிருபையும் அன்பும் நிறைந்த பொழிவை நாம் அனுபவிக்கும் வரை அவருடைய கிருபை நம் இதயங்களை அடைகிறது.